For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

“இப்ப செஞ்சி என்ன பயன்” சிஎஸ்கேவுக்காக மொயீன் அலி காட்டடி.. அதுவும் எப்படி தெரியுமா??

மும்பை: ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் மொயீன் அலி செய்த விஷயம் விமர்சனங்களை உண்டாக்கியுள்ளது.

ஐபிஎல் தொடரின் 68வது லீக் போட்டியில் சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதி வருகின்றன.

இப்போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணி கேப்டன் தோனி பேட்டிங்கை தேர்வு செய்தார்.

சொதப்பிய சிஎஸ்கே

சொதப்பிய சிஎஸ்கே

இதனையடுத்து களமிறங்கிய சென்னை அணிக்கு இந்த முறையும் சொதப்பல் தான் இருந்தது. ஓப்பனிங் வீரர்கள் ருதுராஜ் கெயிக்வாட் 2 ரன்களுக்கும், டெவோன் கான்வே 16 ரன்களுக்கும் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். இதன் பின்னர் வந்த மொயீன் அலி, நிதானமாக விளையாடிய போதும், ஜகதீசன் (1), அம்பத்தி ராயுடு (3) என பார்ட்னர்ஷிப் கொடுக்காமல் வெளியேறினர்.

மொயீன் காட்டிய அதிரடி

மொயீன் காட்டிய அதிரடி

சிஎஸ்கே அணி சரிந்துவிட்டது என நினைத்த போது, மொயீன் அலி தனது கியரை மாற்றினார். ராஜஸ்தானின் ஓவ்வொரு பந்தையும் நாளாபுறமும் சிதறடித்தார். ஒருபுறம் விக்கெட்கள் சரிந்த போதும், மொயீன் அலி 19 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார். அதன்பிறகும் அவரை ராஜஸ்தானால் கட்டுப்படுத்த முடியவில்லை.

தோனி காட்டிய பொறுமை

தோனி காட்டிய பொறுமை

தோனி மறுமுணையில் நின்று பார்ட்னர்ஷிப் கொடுக்க, மறுமுணையில் சுந்திரமாக மொயீன் அலி அதிரடி காட்டினார். 57 பந்துகளை சந்தித்த அவர் 13 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் உட்பட 93 ரன்களை குவித்தார். கேப்டன் தோனி 28 பந்துகளில் 26 ரன்களை சேர்த்தார். இதனால் 20 ஓவர்களில் சென்னை அணி 150 ரன்களை குவித்தது.

குவியும் விமர்சனங்கள்

குவியும் விமர்சனங்கள்

இந்நிலையில் இதற்கு விமர்சனங்கள் தான் எழுந்து வருகிறது. கடந்தாண்டு சிஎஸ்கேவின் தூணாக இருந்த மொயீன் அலி இந்தாண்டும் தொடக்கத்தில் இருந்தே இதனை செய்திருந்தால் சென்னை அணி அபார வெற்றி பெற்றிருக்கும். ஆனால் கடைசி போட்டியில் இந்த ஃபார்மில் வந்து என்ன பயன்? கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் எதற்கு ? என விமர்சித்து வருகின்றனர்.

Story first published: Friday, May 20, 2022, 21:44 [IST]
Other articles published on May 20, 2022
English summary
Moeen Ali in CSk vs RR Match ( சிஎஸ்கே vs ராஜஸ்தான் ராயல்ஸ் போட்டியில் மொயீன் அலி பேட்டிங் ) ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் மொயீன் அலியின் பேட்டிங்கை பார்த்து ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X