For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

“அடப்பாவமே” ஐபிஎல் ஏலத்தில் மும்பை அணி தக்கவைக்கப்போகும் வீரர்கள் இவர்கள் தான்.. ரசிகர்கள் அதிர்ச்சி

அமீரகம்: ஐபிஎல் மெகா ஏலத்தின் போது எந்தெந்த வீரர்களை மும்பை இந்தியன்ஸ் அணி தக்கவைக்கப்போகிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

அடுத்தாண்டு ஐபிஎல் தொடர் முதல் புதிதாக இரண்டு அணிகள் சேர்க்கப்படுகின்றன. இதே போல மெகா ஏலமும் நடத்தப்படவுள்ளது.

ஐபிஎல்-ல் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை மெகா ஏலம் நடத்தப்பட்டு பெரிய அளவில் வீரர்கள் இடம் மாறுவார்கள்.

 ஐபிஎல் மெகா ஏலம்

ஐபிஎல் மெகா ஏலம்

அந்தவகையில் இந்தாண்டும் மெகா ஏலத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. புதிய அணிகளும் வருவதால் எத்தனை வீரர்களை தக்கவைக்க முடியும் என்ற குழப்பம் நீடித்து வந்தது. அந்தவகையில் தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி ஒவ்வொரு அணியும் தலா 4 வீரர்களை தக்கவைத்துக் கொள்ளலாம் எனக் கூறப்படுகிறது.

கேள்விகள்

கேள்விகள்

2 இந்திய வீரர்கள் மற்றும் 2 அயல்நாட்டு வீரர்கள் என தக்கவைக்கலாம். இல்லையென்றால் 3 இந்திய வீரர்கள் மற்றும் ஒரு அயல்நாட்டு வீரரை தக்கவைக்கலாம் என்ற வசதியுள்ளது. எனவே ஒவ்வொரு அணியும் எந்தந்த வீரர்களை தக்கவைக்கப்போகிறது என்ற கேள்வி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

 மும்பை அணி விவரம்

மும்பை அணி விவரம்

இந்நிலையில் 5 முறை சாம்பியனான மும்பை அணி தக்கவைக்கபோகும் வீரர்களின் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து பேசியுள்ள ஐபிஎல் அதிகாரி ஒருவர், கேப்டன் ரோகித் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா மற்றும் கெயிரன் பொல்லார்ட் ஆகியோர் தான் மும்பை அணியின் முதல் 3 தேர்வுகளாக இருக்கிறது. 4வது வீரராக சூர்யகுமார் யாதவ் அல்லது இஷான் கிஷானை தக்கவைக்கலாம் எனத்தெரிவித்துள்ளார்.

 ஹர்திக் இல்லை

ஹர்திக் இல்லை

இந்த பட்டியலில் மும்பை அணியின் அதிரடி ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யாவின் பெயர் இடம்பெறவில்லை. அவரின் தற்போதைய ஃபார்ம் மோசமான நிலையில் உள்ளது. கடந்த 2 ஐபிஎல் தொடரிலும் அவர் பந்துவீசவே இல்லை. இதே போல பேட்டிங்கிலும் பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இதன்காரணமாக தான் ஹர்திக் பாண்ட்யாவை கழட்டிவிட மும்பை அணி முடிவெடுத்திருப்பதாக தெரிகிறது.

Story first published: Thursday, October 28, 2021, 20:43 [IST]
Other articles published on Oct 28, 2021
English summary
Mumbai Indians rention list ahead of mega auction in IPL 2022
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X