ஐதராபாத், ஆர்சிபி, பஞ்சாப், கொல்கத்தா - பிளே ஆப் செல்ல என்ன செய்யனும்? சூடுபிடிக்கும் ஐபிஎல் பந்தயம்

மும்பை: ஐபிஎல் தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அனைத்து அணிகளும் 13 போட்டிகளில் விளையாடி விட்டன.

இந்த நிலையில், கடைசி ரவுண்டான 14வது போட்டிகள் இன்று முதல் தொடங்குகின்றன.

3 வீரர்களுக்கு இந்திய அணியில் வாய்ப்பு? கங்குலியே வியப்பில் கூறிய வார்த்தை தமிழக வீரரும் இருக்கிறார்3 வீரர்களுக்கு இந்திய அணியில் வாய்ப்பு? கங்குலியே வியப்பில் கூறிய வார்த்தை தமிழக வீரரும் இருக்கிறார்

தற்போது வரை குஜராத்தை தவிர வேறு எந்த அணிகளும் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறவில்லை. லக்னோ, ராஜஸ்தான் 16 புள்ளிகளை பெற்றாலும், 2வது இடத்தை பிடிக்கப் போவது எந்த அணி என்று தெரியவில்லை.

லக்னோ vs கொல்கத்தா

லக்னோ vs கொல்கத்தா

இந்த நிலையில், கொல்கத்தா மற்றும் லக்னோ அணிகள் மோதும் முக்கிய ஆட்டம் இன்னும் சற்று நேரத்தில் தொடங்குகிறது. இதில் கொல்கத்தா அணி வென்றால் ஐதராபாத் அணி ஏறக்குறைய தொடரை விட்டு சென்றுவிடும். ஒருவேளை லக்னோ அணி வென்றால் கொல்கத்தா வெளியேறிவிடும். முதல் 2 இடத்தை பிடிக்க லக்னோ அணி இன்று மிகப் பெரிய வெற்றியை பதிவு செய்ய வேண்டும்.

பஞ்சாப் பிளே ஆப் வாய்ப்பு

பஞ்சாப் பிளே ஆப் வாய்ப்பு

இதே போன்று பஞ்சாப் அணி பிளே ஆப் செல்ல வேண்டும் என்றால் கொல்கத்தாவை லக்னோ வீழ்த்த வேண்டும். பெங்களூரு அணி குஜராத்துடன் தோற்க வேண்டும். இதே போன்று டெல்லி அணியை மும்பை வீழ்தத வேண்டும். கடைசி ஆட்டத்தில் ஐதராபாத் அணியை பஞ்சாப் வெல்ல வேண்டும்.

ஐதராபாத் பிளே ஆப் வாய்ப்பு

ஐதராபாத் பிளே ஆப் வாய்ப்பு

இதே போன்று ஐதராபாத் அணி பிளே ஆப் செல்ல வேண்டும் என்றால், கொல்கத்தாவை லக்னோ அணி வீழ்த்த வேண்டும், குஜராத் அணி பெங்களூரு அணியை தோற்கடிக்க வேண்டும். இதே போன்று மும்பை அணி டெல்லியை 75 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடிக்க வேண்டும். இதே போன்று பஞ்சாப்பை 75 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் வெற்றி பெற வேண்டும்.

AB de Villiers, Gayle இருவருக்கும் Hall Of Fame அந்தஸ்தை வழங்கிய RCB
கொல்கத்தா, பெங்களூரு

கொல்கத்தா, பெங்களூரு

இதனிடையே கொல்கத்தா அணி பிளே ஆப் சுற்றுக்கு செல்ல இன்று பெரிய வெற்றி பெற வேண்டும். இதே போன்று பெங்களுரு அணியை குஜராத் வீழ்த்த வேண்டும். இதே போன்று டெல்லி அணியை மும்பை அணி வெற்றி பெற வேண்டும். ஐதராபாத், பஞ்சாப் அணிகள் சிறிய வித்தியாசத்தில் தான் வெற்றி பெற வேண்டும். பெங்களூரு அணி பிளே ஆப் செல்ல குஜராத்தை வீழ்த்த வேண்டும். டெல்லி, அணி மும்பையிடம் தோற்க வேண்டும்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
IPL 2022 – Play off race tightens between 4 teams as Last round begins today ஐதராபாத், ஆர்சிபி, பஞ்சாப், கொல்கத்தா - பிளே ஆப் செல்ல என்ன செய்யனும்? சூடுபிடிக்கும் ஐபிஎல் பந்தயம்
Story first published: Wednesday, May 18, 2022, 18:14 [IST]
Other articles published on May 18, 2022
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X