ஐபிஎல் 2022: பரிசுத்தொகை & விருதுகள் என்னென்ன.. தினேஷ் கார்த்திக்கிற்கு ஸ்பெஷல் பரிசு- முழு பட்டியல்

அகமதாபாத்: ஐபிஎல் 15வது சீசனில் கலக்கிய பல வீரர்களுக்கும் லட்சங்களில் பரிசுகள் வழங்கி கவுரவப்படுத்தப்பட்டனர்.

IPL 2022-ல் யாருக்கு என்ன விருது? முழு பட்டியல் #Cricket | Oneindia Tamil

ஐபிஎல் இறுதிப்போட்டியில் நேற்று ராஜஸ்தான் அணியை 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றி பெற்று சாம்பியனானது.

முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்கள் 130/9 ரன்களை குவித்தது. இதன்பின்னர் ஆடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 18.1 ஓவர்களில் 133/3 ரன்களை குவித்தது.

 பரிசுத்தொகை விவரம்

பரிசுத்தொகை விவரம்

அறிமுக சீசனிலேயே சாம்பியன் பட்டம் வென்று அசத்திய குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு பரிசுத்தொகையாக ரூ.20 கோடி வழங்கப்பட்டது. மேலும் அணியின் அனைத்து பயிற்சியாளர்கள் மற்றும் வீரர்களுக்கு ஐபிஎல்-ன் அதிநவீன ஸ்பெஷல் வாட்ச்கள் வழங்கப்பட்டன. 2வது இடம் பிடித்த ராஜஸ்தான் அணிக்கு பதக்கங்களும், ரூ.12.50 கோடி பரிசும் தரப்பட்டது. 3வது இடம் பிடித்த ஆர்சிபிக்கு ரூ.7 கோடி தரப்பட்டுள்ளது.

இறுதிப்போட்டி விருதுகள்

இறுதிப்போட்டி விருதுகள்

ஆட்ட நாயகன் : ஹர்திக் பாண்ட்யா ரூ.5 லட்சம்

சூப்பர் ஸ்ட்ரைக்கர் - டேவிட் மில்லர் ரூ. 1 லட்சம்

கேம் சேஞ்சர் : ஹர்திக் பாண்ட்யா ரூ.1 லட்சம்

சிக்ஸர் ஆஃப் தி மேட்ச் - யாஷஸ்வி ஜெய்ஷ்வால் ரூ. 1 லட்சம்

பவர் ப்ளேயர் ஆஃப் தி மேட்ச் : ட்ரெண்ட் போல்ட் ரூ. 1 லட்சம்

அதிவேக பவுலிங் : லாக்கி ஃபெர்க்யூசன் ரூ.1 லட்சம்

மதிப்புமிக்க வீரர் : ஹர்திக் பாண்ட்யா ரூ.1 லட்சம்

சிறந்த பவுண்டரி : ஜாஸ் பட்லர் ரூ.1 லட்சம்

மதிப்புமிக்க தொப்பிகள்

மதிப்புமிக்க தொப்பிகள்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் ஜாஸ் பட்லர் இந்த தொடரின் அதிக ரன்களை குவித்ததற்காக ஆரஞ்ச் கோப்பையை வென்றார். அவர் 17 இன்னிங்ஸ்களில் 863 ரன்களை அடித்தார். இதற்காக அவருக்கு ரூ.10 லட்சம் பரிசுத்தொகை தரப்பட்டது. யுவேந்திர சாஹல் 17 இன்னிங்ஸ்களில் 27 விக்கெட்கள் எடுத்து, பர்புள் நிற தொப்பையை பெற்றார். அவருக்கும் ரூ. 10 லட்சம் தரப்பட்டது.

 தினேஷ் கார்த்திக்குக்கு விருது

தினேஷ் கார்த்திக்குக்கு விருது

ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு போட்டியில் அதிக ஸ்ட்ரைக் ரேட்டுடன் அதிரடி காட்டிய வீரராக தினேஷ் கார்த்திக் தேர்வு செய்யப்பட்டார். 2018ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வரும் இந்த விருதை பெரும் முதல் இந்தியர் தினேஷ் கார்த்திக் தான். இதற்கு முன்னர் 4 ஆண்டுகளும் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் தான் பெற்றுள்ளனர்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
IPL 2022 Prize money and awards ( ஐபிஎல் 2022 பரிசுத்தொகை மற்றும் விருதுகள் ) ஐபிஎல் 2022ம் ஆண்டுக்கான பரிசுத்தொகை மற்றும் விருதுகள் விவரங்களை பார்க்கலாம்.
Story first published: Monday, May 30, 2022, 9:24 [IST]
Other articles published on May 30, 2022
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X