சிஎஸ்கேவுக்கு எதிராக வெறியோடு விளையாடியது ஏன்? அஸ்வின் சொன்ன முக்கிய தகவல்.. திடீர் மாற்றம் ஏன்?

கொல்கத்தா: ஐபிஎல் தொடரில் சிஎஸ்கேவுக்கு எதிராக வெறியோடு விளையாடிய ராஜஸ்தான் வீரர் அஸ்வின், பின்னர் வெற்றியை கொண்டாடினார்.

இதனால், அஸ்வினுக்கும், சிஎஸ்கேவுக்கும் ஏதேனும் பிரச்சினை இருந்ததா என்று சந்தேகிக்கப்பட்டது.

இந்த நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நடத்திய நேர்காணலில் பங்கேற்று அஸ்வின் பல விசயங்கள் குறித்து பேசினார்.

ஐபிஎல் பிளே ஆஃப்பில் சாதனைகள்.. அதிக ரன்கள், அதிக வெற்றி பெற்றவர்கள் யார்..? முழு விவரம் இதோ ஐபிஎல் பிளே ஆஃப்பில் சாதனைகள்.. அதிக ரன்கள், அதிக வெற்றி பெற்றவர்கள் யார்..? முழு விவரம் இதோ

சுதந்திரம் கிடைத்தது

சுதந்திரம் கிடைத்தது

முன் எப்போதும் இல்லாத வகையில் இந்த ஆண்டு தான் நான் மகிழ்ச்சியாக விளையாடுகிறேன். அதற்கு காரணம் , எங்கள் அணி பிளே ஆஃப்க்கு சென்றதோ, இல்லை என் தனிப்பட்ட ஆட்டமோ காரணம் அல்ல. இம்முறை சுதந்திரமாக விளையாடுகிறேன். பல விஷயங்கள் குறித்து தெரிந்து கொள்ள முடிந்தது. புதிய விஷயத்தை களத்தில் செய்து காட்ட முடிந்தது.

சிஎஸ்கே அணிக்கு எதிராக..

சிஎஸ்கே அணிக்கு எதிராக..

சிஎஸ்கே அணிக்கு எதிராக நான் பல ஆண்டு விளையாடி இருக்கிறேன். அப்படி இருக்கும் போது, நமது முன்னாள் அணிக்கு எதிராக விளையாடும் போது, இயல்பாகவே அவர்கள் முன் நாம் சிறப்பாக விளையாட வேண்டும் என்ற நினைப்பு வருவது சகஜம் தான். அதுவும் இல்லாமல் அவர்களுக்கு எதிராக நன்றாக ஆட வேண்டும் என்ற நினைப்பும் எனக்கு இருந்தது. சிஎஸ்கேவை வீழ்த்தியது மகிழ்ச்சி தான்.

மிகவும் கடினம்

மிகவும் கடினம்

அதுவும் இல்லாமல் அன்று 2 புள்ளிகள் கிடைத்தால் நாங்கள் முதல் 2 இடத்தை பிடிக்க முடியும். அதை மனதில் வைத்து கொண்ட விளையாடினேன். கடைசி வரை நின்று ஆட வேண்டும் என நினைத்தேன். கொஞ்சம் பேட்டிங் தெரிந்த பந்துவீச்சாளர்கள் நம்பர் 7 அல்லது 6வது இடத்தில் வந்து விளையாடுவது மிகவும் கடினம். இன்னிங்சின் இறுதிக் கட்டத்தில் எடுத்த உடன் வேகமாக அடிக்க வேண்டும்.

தோனிக்கு பாராட்டு

தோனிக்கு பாராட்டு

அந்த இடத்தில் பேட்டிங் செய்பவர்கள் எல்லாம் உண்மையில் பாவம். அந்த வகையில் தோனியை நான் எப்போதும் பிரமிப்புடன் பார்ப்பேன். இது போன்ற இக்கட்டான நிலையில், ஆட்டத்தை வெற்றிக்கரமாக முடிப்பது சுலபம் அல்ல. அடுத்த தோனி, அடுத்த சச்சின் என்று இனி யாரும் வர முடியாது. முடிந்தால் நீங்கள் உங்கள் திறமையை வளர்த்து கொண்டு உங்கள் பெயரை நிரூபியுங்கள்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
IPL 2022 – R Ashwin about his Journey in Rajasthan Royals சிஎஸ்கேவுக்கு எதிராக வெறியோடு விளையாடியது ஏன்? அஸ்வின் சொன்ன முக்கிய தகவல்.. திடீர் மாற்றம் ஏன்?
Story first published: Tuesday, May 24, 2022, 14:03 [IST]
Other articles published on May 24, 2022
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X