For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கடைசி நேர ட்விஸ்ட்.. ஈடன் கார்டனில் குதித்த கங்குலி.. குஜராத் vs ராஜஸ்தான் போட்டியில் என்ன நடக்கிறது

மும்பை: ஐபிஎல் தொடரின் முதல் ப்ளே ஆஃப் போட்டியில் திடீர் ட்விஸ்ட் ஏற்பட்டுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Recommended Video

IPL 2022 GT vs RR: Predicted Playing 11 என்ன? | Aanee's Appeal | #Cricket | OneIndia Tamil

ஐபிஎல் 15வது சீசனின் முதல் ப்ளே ஆஃப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் - ராஜஸ்தான் அணிகள் இன்று மோதுகின்றன.

ஒரே நேரத்தில் 3 பிரச்சினை.. சோதனையில் சிக்கித்தவிக்கும் டூப்ளசிஸ்.. கைக்கொடுப்பாரா விராட் கோலி?ஒரே நேரத்தில் 3 பிரச்சினை.. சோதனையில் சிக்கித்தவிக்கும் டூப்ளசிஸ்.. கைக்கொடுப்பாரா விராட் கோலி?

கொல்கத்தா நகரத்தில் உள்ள ஈடன் கார்டர்ன்ஸ் மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு இந்த போட்டி தொடங்கவுள்ளது.

ப்ளே ஆஃப்

ப்ளே ஆஃப்

கொல்கத்தா மைதானம் பேட்டிங் மற்றும் வேகப்பந்துவீச்சு என இரண்டிற்கும் உதவும் என்பதால் பெரும் எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் உள்ளனர். ஆனால் திடீரென மழைக்குறுக்கிட்டுள்ளது. கடந்த சில நாட்களாக கொல்கத்தா நகரத்தில் தொடர்ந்து கனமழை மற்றும் பலத்த காற்று வீசி வருகிறது. போட்டி நாளான இன்று கூட காலையில் இருந்து மழை பெய்து வந்தது.

ரசிகர்களின் அச்சம்

ரசிகர்களின் அச்சம்

மேலும் இன்றைய போட்டியிலும் மழையின் குறுக்கீடு இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. முழு அளவில் பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டு, டிக்கெட் விற்பனையும் முடிவுப் பெற்றுள்ளது. ஆனால் மழை பெய்து அனைத்தையும் நாசம் செய்துவிடுமோ என்ற அச்சம் ரசிகர்களிடையே இருந்தது.

திடீர் திருப்பம்

திடீர் திருப்பம்

இந்நிலையில் திடீர் ட்விஸ்ட் ஏற்பட்டுள்ளது. அதாவது கொல்கத்தாவில் கடந்த 2 மணி நேரமாக மழை பொழிவு ஏதும் இல்லை. வெயில் சற்று அடிக்கத் தொடங்கியுள்ளதாக தெரிகிறது. மேலும் புதிய வானிலை அறிக்கையின் படி, போட்டியின் போது பெரியளவில் மழை பாதிப்பு எதுவும் இருக்காது எனத் தெரிவித்துள்ளனர். வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் எனக் கூறப்படுகிறது.

கடைசி முடிவு

கடைசி முடிவு

பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி களத்திற்கு நேரடியாக சென்று பார்வையிட்டுள்ளார். அனைத்தும் தயார் நிலைக்கு கொண்டு செல்லப்பட்டு வருகிறது. ஒருவேளை அப்படியே மழை பெய்தாலும், குறைந்தது 5 ஓவர்கள் கொண்ட போட்டியை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதுவும் நடக்கவில்லை என்றால் ஒரே ஒரு சூப்பர் ஓவரில் முடிவு அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Tuesday, May 24, 2022, 19:09 [IST]
Other articles published on May 24, 2022
English summary
GT vs RR Playoff match ( குஜராத் vs ராஜஸ்தான் ப்ளே ஆஃப் போட்டி ) கொல்கத்தா வானிலை அறிக்கை குறித்த தகவலால் ஐபிஎல் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X