“கிரிக்கெட்டை விட்டு விலகுங்கள்.. ” கோலி குறித்து ரவிசாஸ்திரி எச்சரிக்கை.. புலம்பி தள்ளும் ரசிகர்கள்!

மும்பை: விராட் கோலி கிரிக்கெட்டில் இருந்து சிறிது காலம் விலக வேண்டும் என முன்னாள் வீரர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.

Virat Kohli Needs a Break, Says Ravi Shastri | OneIndia Tamil

ஐபிஎல் தொடரின் 31வது லீக் போட்டியில் நேற்று ஆர்சிபி மற்றும் லக்னோ அணிகள் மோதின.

இந்த போட்டியில் ஆர்சிபி அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. புள்ளிப்பட்டியலிலும் 2வது இடத்திற்கு முன்னேறியது.

ஆர்சிபி கேப்டனாக மாறிய விராட் கோலி.. ஒரே ஒரு ரிவியூ மூலம் மாறிய ஆட்டம்.. லக்னோ அதிர்ச்சி தோல்விஆர்சிபி கேப்டனாக மாறிய விராட் கோலி.. ஒரே ஒரு ரிவியூ மூலம் மாறிய ஆட்டம்.. லக்னோ அதிர்ச்சி தோல்வி

ரசிகர்களின் சோகம்

ரசிகர்களின் சோகம்

எனினும் ரசிகர்களுக்கு இது பெரியளவில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியதில்லை. இதற்கு காரணம் விராட் கோலியின் டக் அவுட் தான். 2017ம் ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக விராட் கோலி கோல்டன் டக் அவுட்டாகியுள்ளார். ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே சமீரா வைட் லைனில் வீசிய பந்தை கோலி தேவையின்றி அடிக்க முயன்று கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

விராட் கோலி ஃபார்ம்

விராட் கோலி ஃபார்ம்

நடப்பு சீசனில் கோலியின் ஃபார்ம் மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. இதுவரை விளையாடியுள்ள 7 போட்டிகளில் கோலி 119 ரன்களை மட்டுமே அடித்துள்ளார். அவரின் ஸ்ட்ரைக் ரேட் 123.95 ரன்கள் மட்டுமே. நட்சத்திர வீரராக பார்க்கப்படும் கோலி, ஏன் இப்படி சொதப்பி வருகிறார் என ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.

 ரவிசாஸ்திரி கருத்து

ரவிசாஸ்திரி கருத்து

இந்நிலையில் இதுகுறித்து ரவிசாஸ்திரி பேசியுள்ளார். அதில், நான் பயிற்சியாளராக இருந்த போதுதான் கோலிக்கு முதல் சிக்கல் எழுந்தது. ஒரு வீரர் மீது அதிக எதிர்பார்ப்புகளும், அழுத்தங்களும் எழுந்தால் இப்படி தான் ஆகும். சதம் அடிக்கவில்லை, அதிக எதிர்பார்ப்பு, திருமணம், குழந்தை என பல குழப்பங்களால் விராட் கோலி வருத்தத்தில் உள்ளார்.

2 மாத ஓய்வு தேவை

2 மாத ஓய்வு தேவை

இதனால் கோலி மிகவும் நொந்துவிட்டார். அவருக்கு நிச்சயமாக தற்போது ஒரு ஓய்வு தேவை. கோலிக்கு இன்னும் 6 -7 ஆண்டு கிரிக்கெட் உள்ளது. இதனை நினைத்துக் கொண்டே அதனை இழந்துவிடக்கூடாது. 2 மாதங்கள் அல்லது ஒன்றரை மாதங்களாவது விராட் கோலி கிரிக்கெட்டில் இருந்து விலக வேண்டும்.

ஓய்வு எப்போது வேண்டும்

ஓய்வு எப்போது வேண்டும்

டி20 உலகக்கோப்பைக்கு முன்னதாக இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செல்கின்றனர். எனவே அதற்கு முன்னதாகவாவது அல்லது, சுற்றுப்பயணத்திற்கு பின்னர் கோலி ஓய்வெடுத்தே தீர வேண்டும். இல்லையென்றால் சிரமம் என ரவிசாஸ்திரி எச்சரித்துள்ளார்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Ravi Shastri on Virat kohli ( விராட் கோலி குறித்து ரவி சாஸ்திரி பேச்சு ) விராட் கோலியின் மோசமான ஃபார்ம் குறித்து முன்னாள் வீரர் ரவிசாஸ்திரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Story first published: Wednesday, April 20, 2022, 11:26 [IST]
Other articles published on Apr 20, 2022
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X