For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

“டோட்டல் வேஸ்ட்”.. திடீர் பல்டி அடித்த ரவி சாஸ்திரி.. விழிப்பிதுங்கி நிற்கும் முக்கிய அணி- என்ன ஆனது

மும்பை: ஐபிஎல் தொடரில் களமிறங்குவது குறித்து இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பல்டி அடித்துள்ளார்.

2022ம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் இந்த முறை மெகா ஏலம், 2 புதிய அணிகள் என பல்வேறு சுவாரஸ்யங்கள் வரவிருப்பதால் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

மெகா ஏலம் வரும் பிப்ரவரி 12, 13ம் தேதிகளில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக வீரர்களுடன் தனிப்பட்ட முறையில் அணிகள் பேசி வருகின்றனர்.

ரசிகர்கள் எதிர்பார்ப்பு

ரசிகர்கள் எதிர்பார்ப்பு

இந்த முறை ஐபிஎல் தொடரில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது அகமதாபாத் அணி தான். சூதாட்ட புகாரில் இருந்து தப்பித்துள்ள அந்த அணி தற்போது வீரர்கள் தேர்வில் மும்முரமாக களமிறங்கியுள்ளது. அதில் ஸ்ரேயாஸ் ஐயர் அணியின் கேப்டனாகவும், ஆரோன் பின்ச், பென் ஸ்டோக்ஸ், தினேஷ் கார்த்திக் போன்றோர் உறுதுணை வீரர்களாக களமிறக்க திட்டமிட்டுள்ளது.

அணி பயிற்சியாளர்

அணி பயிற்சியாளர்

இது ஒருபுறம் இருக்க அணியின் தலைமை பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியை நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியானது. இதுகுறித்து அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு விட்டதாகவும், அவரின் பயிற்சியில் இந்த முறை கோப்பையை வெல்ல எதிர்பார்ப்புகள் இருந்தது.

ரவி சாஸ்திரி விளக்கம்

ரவி சாஸ்திரி விளக்கம்

இந்நிலையில் இந்த அறிவிப்புகள் குறித்து ரவிசாஸ்திரி அதிகாரப்பூர்வமாக பதிலளித்துள்ளார். அதில், நான் இப்போதுதான் பயோ பபுளில் இருந்து வெளியேறியுள்ளேன். எனக்கு வெளியுலக காற்றை சுவாசிக்க வேண்டும். இதனால் எந்தவொரு அணியுடனும் நான் பேச்சுவார்த்தையில் ஈடுபடவில்லை. அனைத்து தவறான தகவல்கள் எனக்கூறியுள்ளார்.

Recommended Video

IPL Auction likely to be held in February! BCCI to conduct meeting amid Omicron concerns
அடுத்த நடவடிக்கை என்ன?

அடுத்த நடவடிக்கை என்ன?

அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் என்னவாக இருக்கும் என்ற கேள்விக்கு பதிலளித்த ரவி சாஸ்திரி, என்னைப்பொறுத்தவரை தற்போது நன்றாக வெளியில் சுற்றி மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். அணி பயிற்சியாளராக செல்லவில்லை. எனினும் நான் நிச்சயமாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு திரும்புவேன், அது எனக்கு பிடித்தமான ஒன்று என ரவி சாஸ்திரி பேசியுள்ளார்.

Story first published: Friday, December 24, 2021, 10:37 [IST]
Other articles published on Dec 24, 2021
English summary
Ravi Shastri says no to work as a head coach for Ahmedabad team in IPL 2022
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X