For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஒரே ஓவரில் மாறிய கதை.. டெல்லிக்கு அதிர்ச்சி அளித்த ஆர்சிபி.. கோப்பையை அடிக்குமா பெங்களூரு

மும்பை: ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் ஆர்சிபி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் புள்ளி பட்டியலில் 3வது இடத்துக்கு ஆர்சிபி முன்னேறியது.

டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. பெங்களூரு அணியின் பிளேயிங் லெவனில் ஹர்சல் பட்டேல் மீண்டும் இணைந்தார்.

இதனையடுத்து தொடக்க வீரராக டுபினஸிஸ் மற்றும் ராவத் களமிறங்கினர். பெரிய ஸ்கோர் அடிக்க வேண்டிய நெருக்கடிய களமிறங்கிய அந்த அணிக்கு ஆரம்பமே ஏமாற்றமாக அமைந்தது.

தினேஷ் கார்த்திக் சூறாவளி ஆட்டம்.. 26 பந்தில் அரைசதம்.. அடித்து நொறுக்கிய ஆர்சிபிதினேஷ் கார்த்திக் சூறாவளி ஆட்டம்.. 26 பந்தில் அரைசதம்.. அடித்து நொறுக்கிய ஆர்சிபி

ஏமாற்றம்

ஏமாற்றம்

அனுஜ் ராவத் டக் அவுட்டாகி வெளியேற, கேப்டன் டுபிளஸிஸ் 8 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி 12 ரன்கள் மட்டுமே எடுத்து பெவிலியன் திரும்பினார். இதனால் ஆர்சிபி 40 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டை இழந்தது. இதனையடுத்து அணியை சரிவிலிருந்து மீட்கும் முயற்சியில் மேக்ஸ்வெல் இறங்கினார்.

தினேஷ் கார்த்திக் அதிரடி

தினேஷ் கார்த்திக் அதிரடி

சிறப்பாக விளையாடிய மேக்ஸ்வெல் 34 பந்துகளில் 55 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். இதில் 7 பவுண்டரிகளும், 2 சிக்சர்களும் அடங்கும் மேக்ஸ்வெல்லும் சென்றதால் மீண்டும் ஆர்சிபி இன்னிங்ஸ் தடுமாறியது. அப்போது களத்துக்கு வந்த தினேஷ் கார்த்திக், மரண பேட்டிங்கை வெளிப்படுத்தினார். 26 பந்தில் அரைசதம் கடந்தார் தினேஷ் கார்த்திக். தொடர்ந்து வாண வேடிக்கை காட்ட 34 பந்துகளில் 66 ரன்கள் அடித்தார். இதில் 5 பவுண்டரிகளும், 5 சிக்சர்களும் அடங்கும். இதன் மூலம் ஆர்சிபி அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்கள் எடுத்தது.

வார்னர் அதிரடி

வார்னர் அதிரடி

190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணியிலும் வார்னர் அதிரடியை காட்டினார். 29 பந்துகளில் அரைசதம் அடித்து வார்னர் அசத்தினார். இது ஐபில் வரலாற்றில் வார்னருக்கு 52வது அரைசதமாகும். வார்னர் 38 பந்துகளில் 66 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார். கேப்டன் ரிஷப் பண்ட் தனது வழக்கமான பேட்டிங்கை காட்டினார்.

Recommended Video

DC vs RCB: Karthik, Hazlewood shine as RCB beat Delhi Capitals by 16 runs | Oneindia Tamil
திருப்புமுனை

திருப்புமுனை

17 பந்துகளில் ரிஷப் 34 ரன்கள் அடித்திருந்த நிலையில், விராட் கோலியின் அபார கேட்சால் ஆட்டமிழந்தார். ஒரு கட்டத்தில் டெல்லி வெற்றியை நோக்கி முன்னேறிய நிலையில் ஹேசல்வுட் 7 பந்துகள் இடைவெளியில் போவேல், லலித் யாதவ், ஷர்துல் தாக்கூர் ஆகிய விக்கெட்டுகளை அடுத்தடுத்து வீழ்த்தினார். இதனால் டெல்லி 16 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

Story first published: Saturday, April 16, 2022, 23:53 [IST]
Other articles published on Apr 16, 2022
English summary
IPL 2022 – RCB beat Delhi by 16 runs and 3rd in points table ஒரே ஓவரில் மாறிய கதை.. டெல்லிக்கு அதிர்ச்சி அளித்த ஆர்சிபி.. கோப்பையை அடிக்குமா பெங்களூரு
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X