For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இது லிஸ்ட்ல இல்லையே.. கிறிஸ் கெயில், டிவில்லியர்ஸை திடீரென்று அழைத்த ஆர்சிபி..ரசிகர்கள் மகிழ்ச்சி

மும்பை: ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணி பிளே ஆப்க்கு செல்ல வேண்டும் என்றால், கடைசி ஆட்டத்தில் குஜராத்தை வீழ்த்த வேண்டும்.

இந்தப் போட்டி வரும் வியாழக்கிழமை நடைபெறுகிறது. இதில் வென்றாலும் கூட மற்ற அணிகளின் தயவு ஆர்சிபிக்கு தேவைப்படுகிறது.

இந்த நிலையில், ஆர்சிபி அணி எடுத்துள்ள முக்கிய நடவடிக்கை ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகத்தையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.

இந்தியாவுக்கு சவால் விட்ட தெ. ஆப்பிரிக்கா.. ஐபிஎல்லில் கலக்கியவர்களுக்கு வாய்ப்பு..முக்கிய வீரர் இல்லைஇந்தியாவுக்கு சவால் விட்ட தெ. ஆப்பிரிக்கா.. ஐபிஎல்லில் கலக்கியவர்களுக்கு வாய்ப்பு..முக்கிய வீரர் இல்லை

வீரர்களின் ஆசை

வீரர்களின் ஆசை

அண்மையில் தினேஷ் கார்த்திக் விளையாடுவதை பார்க்கும் போது, தாமும்

மீண்டும் விளையாட வேண்டும் என்று ஆசைப்படுவதாக டிவில்லியர்ஸ் கூறினார். மேலும் டிவில்லியர்ஸ் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் களமிறங்குவார் என்று சூசகமாக கூறினார். இதே போன்று கிறிஸ் கெயில், மீண்டும் ஐபிஎல் போட்டியில் ஆர்சிபி அல்லது பஞ்சாப் அணிக்காக விளையாடுவேன் என்று கூறி இருந்தார்.

ஆர்சிபி கவுரவம்

ஆர்சிபி கவுரவம்

இந்த நிலையில், ஆர்சிபி அணி இவ்விரு ஜாம்பவான்களையும் கவரும் வகையில், யாரும் செய்யாத காரியத்தை செய்துள்ளது. அதன் படி ஐசிசி கிரிக்கெட் ஜாம்பவான்களுக்கு Hall of fame என்ற அந்தஸ்தை வழங்கும். அதே போல் ஆர்சிபி அணியும் ஹால் ஆஃப் பேம் என்ற அந்தஸ்தை வழங்க முடிவு எடுத்தது.

என்ன தகுதி?

என்ன தகுதி?

அதன்படி, ஆர்சிபி அணியில் குறைந்தது 3 ஆண்டுகள் விளையாடி இருக்க வேண்டும். தற்போது வேறு எந்த அணியிலும் இருக்க கூடாது. ஆர்சிபி அணிக்காக பல போட்டிகளை வென்று தந்திருக்க வேண்டும். அந்த 3 விதிகளின் படி, கெயில் மற்றும் டிவில்லியர்ஸை, ஹால் ஆப் பேம் அந்தஸ்தை வழங்கி ஆர்சிபி அணி கவுரவித்தது. இந்த நிகழ்ச்சியில் காணொலி காட்சி மூலம் பேசிய கெயில், டிவில்லியர்ஸ், ஆர்சிபி அணிக்கு வாழ்த்துகளையும் நன்றியையும் தெரிவித்து கொண்டனர். இது ஆர்சிபி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

வெளிநாட்டு வீரர்கள் ஏன்?

வெளிநாட்டு வீரர்கள் ஏன்?

இந்த நிகழ்ச்சி அடுத்த ஆண்டு பெங்களூருவில் நடைபெறும் என்று ரசிகர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். இதுவரை ஆர்சிபி அணிக்காக 157 போட்டியில் விளையாடியுள்ள டிவில்லியர்ஸ் 4522 ரன்களும், கெயில் 91 போட்டியில் விளையாடி 3420 ரன்களும் விளாசியுள்ளனர். இந்த நிலையில், ஆர்சிபி அணிக்காக முதல் முறையாக விளையாடிய டிராவிட், கும்ப்ளே போன்ற இந்தியர்களுக்கு தராமல் வெளிநாட்டு வீரர்களுக்கு ஆர்சிபி வழங்கியுள்ளதாக சில ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Story first published: Tuesday, May 17, 2022, 17:54 [IST]
Other articles published on May 17, 2022
English summary
IPL 2022 – RCB Inducted Gayle and AB Devilliers in to Hall of fame
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X