For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தோனி அடிக்கடி பேட்டை கடிப்பது ஏன்.. உண்மை காரணத்தை கூறிய மிஷ்ரா.. ரசிகர்கள் வியப்பு!

மும்பை: பேட்டிங் செல்வதற்கு முன் தோனி தனது பேட்டை கடிப்பதற்கு பின்னால் உள்ள காரணத்தை முன்னாள் வீரர் ஒருவர் பகிர்ந்துள்ளார்.

Recommended Video

Ms Dhoni-யிடம் மன்னிப்பு கேட்ட Rishabh Pant என்ன நடந்தது? | OneindiaTamil

ஐபிஎல் 55வது லீக் ஆட்டத்தில் நேற்று டெல்லி அணியை சிஎஸ்கே 91 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே 20 ஓவர்களில் 208 /6 ரன்களை குவித்தது. இதன்பின்னர் ஆடிய டெல்லி அணி 17.4 ஓவர்களில் 117 ரன்களுக்கெல்லாம் ஆல் அவுட்டானது.

தோனி புதிய சாதனை.. கோலியை தவிர யாரும் செய்யல.. எப்படி செய்தார் தெரியுமா?தோனி புதிய சாதனை.. கோலியை தவிர யாரும் செய்யல.. எப்படி செய்தார் தெரியுமா?

 எப்பர் வெற்றி பெற்றது

எப்பர் வெற்றி பெற்றது

சென்னை அணித் தரப்பில் பேட்டிங்கில் ருதுராஜ் கெயிக்வாட் 41ரன்கள், டெவோன் கான்வே 87 ரன்கள், ஷிவம் துபே 32, தோனி 21 ரன்களும் அடித்தனர். பவுலிங்கை பொறுத்தவரையில் மொயீன் அலி 3, பிராவோ, சிமர்ஜீத் சிங், முகேஷ் சௌத்ரி ஆகியோர் தலா 2 விக்கெட்களை எடுத்தனர்.

தோனி செய்த விஷயம்

தோனி செய்த விஷயம்

இந்நிலையில் இந்த போட்டியில் பேட்டிங், பவுலிங்கை தாண்டி, தோனி செய்த ஒரு விஷயம் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்தது. அதாவது டக் அவுட்டில் உட்கார்ந்து அவர் தனது பேட்டை கடித்துக் கொண்டிருந்தது தான் ரசிகர்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. இது டெல்லிக்கு எதிரான போட்டியில் மட்டுமல்ல, பல போட்டிகளில் தோனி இதை செய்து பார்த்திருப்போம்.

 என்ன காரணம்

என்ன காரணம்

இதற்கான காரணத்தை முன்னாள் வீரர் அமித் மிஷ்ரா கூறியுள்ளார். அதில், " தோனி பேட்டை கடிப்பது ஆச்சரியமாக இருக்கலாம். அவரின் பேட்டில் உள்ள டேப்கள், நூல்கள் ஏதேனும் வெளியே வந்திருந்தால் அதனை சுத்தம் செய்துக்கொண்டே இருப்பார். இதனால் தான் எம்.எஸ்.பேட்டிங் செய்கையில் ஒரு நூல் அல்லது டேப் கூட அவரின் பேட்டில் இருந்து வந்ததே இல்லை. முன்கூட்டியே அதனை கணித்து சரிசெய்துவிடுவார் எனக்கூறியுள்ளார்.

தோனியின் அதிரடி

தோனியின் அதிரடி

நேற்றைய போட்டியிலும் தோனி தனது அதிரடியை காட்ட தவறவில்லை. 8 பந்துகளை சந்தித்த அவர், 2 சிக்ஸர்கள், 1 பவுண்டரி என விளாசினார். கடைசி நேரத்தில் இதுதான் சிஎஸ்கே ரன்களை உயர்த்தியது. இந்த வெற்றியின் மூலம் சென்னை அணி புள்ளிப்பட்டியலில் 8 புள்ளிகளுடன் 8வது இடத்திற்கு முன்னேறியதும் குறிப்பிடத்தக்கது.

Story first published: Monday, May 9, 2022, 9:58 [IST]
Other articles published on May 9, 2022
English summary
IPL 2022: Reason behind why MS Dhoni eating his bat before going to bat in CSK vs DC match
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X