ஐ.பி.எல். 2022- தமிழக வீரர் ஷாரூக்கானுக்கு ஏன் இவ்வளவு கம்மியான விலை..!! என்ன பிளான்..?

சென்னை: ஐ.பி.எல். 2022ஆம் ஆண்டு ஏலத்திற்கான முழு பட்டியலை பி.சி.சி.ஐ. வெளியிட்டுள்ளது. இதில் நட்சத்திர வீரர்களின் பட்டியல் 2 கோடி ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது

அதற்கு அடுத்த படியாக 1.50 கோடி ரூபாயாகவும், மூன்றாவது நிலையாக 1 கோடி ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதை தவிர 50 லட்சம் ரூபாய்க்கு ஒரு பட்டியலும், குறைந்தபட்சமாக 20 லட்சம் ரூபாய்க்கு வீரர்களின் பட்டியலும் உள்ளது

ஐ.பி.எல். மெகா ஏலத்தில் பங்கேற்காத நட்சத்திர வீரர்கள்.. ரசிகர்கள் கவலை..!!ஐ.பி.எல். மெகா ஏலத்தில் பங்கேற்காத நட்சத்திர வீரர்கள்.. ரசிகர்கள் கவலை..!!

ஷாரூக்கான் மறுப்பு

ஷாரூக்கான் மறுப்பு

இந்த நிலையில், கடந்த ஆண்டு ஐ.பி.எல். சீசனில் 20 லட்சம் ரூபாய்க்கு தனது பெயரை ஷாரூக்கான் பதிவு செய்து இருநதார். ஆனால் ஏலத்தில் 5 கோடியே 25 லட்சம் ரூபாய்க்கு பஞ்சாப் அணி அவரை தட்டி சென்றது. இந்த நிலையில், புதிய சீசனையொட்டி, அவரை தக்க வைக்க பஞ்சாப் அணி 11 கோடி ரூபாய் வரை தர முன் வந்தது. ஆனால் ஷாரூக்கான் ஏற்கவில்லை.

ஐ,பி.எல் அணிகள் போட்டி

ஐ,பி.எல் அணிகள் போட்டி

இந்த நிலையில், சையது முஸ்தாக் அலி கோப்பை, விஜய் ஹசாரே கோப்பையில் ஷாரூக்கான் அதிரடியாக விளையாடி தமிழக அணிக்கு வெற்றிகளை தேடி தந்துள்ளார். இதனால், கடந்த முறை விட இம்முறை ஷாரூக்கான் அதிக விலைக்கு செல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. பல அணிகளும் ஷாரூக்கானை குறிவைத்துள்ளது

20 லட்சம்

20 லட்சம்

இதனால் ஷாரூக்கான் தனது விலையை 2 கோடி ரூபாய் என முதல் தர வீரர்கள் பட்டியலில் பதிவு செய்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஷாரூக்கான் அதற்கு நேர் மாறாக 20 லட்சம் ரூபாய்க்கு தனது பெயரை பதிவு செய்துள்ளார். ஷாரூக்கானின் இந்த முடிவு ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது

காரணம்

காரணம்

ஷாரூக்கானின் இந்த முடிவுக்கு பின்னால் ஒரு சூப்பர் பிளான் உள்ளதாக தெரிகிறது. ஷாரூக்கான் சென்னை அல்லது மும்பை போன்ற அணியில் விளையாட ஆர்வமாக உள்ளார். ஆனால் இந்த அணியின் கையிருப்பு குறைவாக உள்ளது. இதனால் தமது விலையை குறைவாக வைத்தால், இவ்விரு அணிகளும் நிச்சயமாக தம்மை குறிவைத்து காய் நகர்த்த ஏதுவாக இருக்கம். இதுவே ஆரம்ப விலையே 2 கோடி என்றால், நிச்சயம், அது பெரும் தொகையில் சென்று நிற்கும். அப்போது சென்னை, மும்பை அணிகளால் வாங்க முடியாது. இதனால் தான் ஷாரூக்கான் இவ்வாறு காய் நகர்த்தியுள்ளார்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
IPL 2022 Reason for Sharukh khan set his base price for 20 Lakhs only ஐ.பி.எல். 2022- தமிழக வீரர் ஷாரூக்கானுக்கு ஏன் இவ்வளவு கம்மியான விலை..!! என்ன பிளான்..?
Story first published: Saturday, January 22, 2022, 15:01 [IST]
Other articles published on Jan 22, 2022
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X