For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஐபிஎல்-ல் மீண்டும் எண்ட்ரி தரும் சுரேஷ் ரெய்னா.. இனி ஆட்டம் தூள் தான்.. முன்னணி அணிக்கு அடித்த லக்!!

மும்பை: மெகா ஏலத்தில் எந்த அணியாலும் வாங்கப்படாத சுரேஷ் ரெய்னா மீண்டும் ஐபிஎல்-க்கு வர பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தெரிகிறது.

Recommended Video

Suresh Raina enter Gujarat Titans for IPL 2022 ? | Oneindia Tamil

நடப்பாண்டுக்கான ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 26ம் தேதி முதல் மே 29ம் தேதி வரை நடைபெறும் என பிசிசிஐ சார்பில் அறிவிக்கப்பட்டது.

இதற்கான அட்டவணை இறுதி செய்துள்ள பிசிசிஐ, இந்த வாரத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிடும் எனத்தெரிகிறது.

முன்னணி வீரர் விலகல்

முன்னணி வீரர் விலகல்

ஐபிஎல் தொடங்க இன்னும் 3 வாரங்களே இருக்கும் நிலையில் இங்கிலாந்தின் முன்னணி வீரரான ஜேசன் ராய் ஐபிஎல்-ல் இருந்து வெளியேறுவதாக தெரிவித்துள்ளார். மெகா ஏலத்தில் இவரை குஜராத் லையன்ஸ் அணி அடிப்படை தொகையான ரூ.2 கோடிக்கு வாங்கியது. மேலும் ஓப்பனிங்கிற்கும் களமிறக்க வைத்திருந்தது. ஆனால் தற்போது அந்த அணி மாற்று வீரரை தீவிரமாக தேடி வருகிறது.

ஏன் ரெய்னா?

ஏன் ரெய்னா?

இந்நிலையில் முன்னணி வீரர் சுரேஷ் ரெய்னாவை அந்த இடத்தில் நிரப்ப பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐபிஎல்-ல் அதிக ஸ்கோர் அடித்த வீரர்கள் பட்டியலில் டாப் 5வது இடத்தில் இருப்பவர் ரெய்னா. இவ்வளவு அனுபவம் உள்ள வீரரை ஒரே ஒரு சீசனில் நன்றாக விளையாடவில்லை எனக்கூறி அனைத்து அணிகளும் புறக்கணித்தன. குறிப்பாக சிஎஸ்கே அணிக்கூட இவர் மீது ஆர்வம் காட்டாமல் சென்றுவிட்டது. ஆனால் குஜராத் டைட்டான்ஸ் அணிக்கு தற்போது அனுபவ வீரர் ஒருவர் தேவைப்படுகிறார். எனவே அவரை அங்கு நிரப்ப பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

ஓப்பனிங்கில் அப்போது யார்?

ஓப்பனிங்கில் அப்போது யார்?

ஆனால் ஓப்பனிங் இடம் தானே காலியாக உள்ளது, எப்படி ரெய்னாவை எடுப்பார்கள் என்ற கேள்வி உள்ளது. அதாவது அணியில் உள்ள மேத்யூவ் வேட் ஓப்பனிங் களமிறங்கக்கூடியவர். இதே போல விருதிமான் சாஹாவும் ஓப்பனிங் ஆடுவார். எனவே சுப்மன் கில்லுடன் அவர்களை விளையாடவைத்துவிட்டு, ரெய்னாவை மிடில் ஆர்டரில் ஆட வைக்கலாம்.

கேப்டன்சி பணி

கேப்டன்சி பணி

குஜராத் அணியை வழிநடத்தப்போவது ஹர்திக் பாண்ட்யாவாகும். கேப்டன்சியில் அவருக்கு அனுபவம் இல்லை என்பதால், ரெய்னா அவருக்கு உதவியாக இருப்பார். மேலும் தோனி, ரோகித் சர்மா ஆகியோரின் வியூகங்கள் குறித்து நன்கு அறிந்தவர். இது குஜராத் அணிக்கு கூடுதல் பலமாக இருக்கும் எனத்தெரிகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம்.

Story first published: Wednesday, March 2, 2022, 12:31 [IST]
Other articles published on Mar 2, 2022
English summary
Reports says, Suresh raina all set to join with Gujarat titan in IPl 2022
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X