For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

“இனி தான் தரமான சம்பவம் இருக்கு”.. விராட் கோலி சொன்ன சூசக தகவல்.. கொண்டாடித் தீர்க்கும் ரசிகர்கள்!

சென்னை: பெங்களூரு அணியால் தக்கவைக்கப்பட்ட முன்னாள் கேப்டன் விராட் கோலி புதிய சபதம் ஒன்றை ஏற்றுள்ளார்.

2022ம் ஆண்டுகான ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் நடைபெறவிருக்கிறது. இதற்காக ஒவ்வொரு அணியும் தாங்கள் தக்கவைக்கும் வீரர்களின் விவரங்களை நேற்று வெளியிட்டது.

இதில் இதுவரை ஒருமுறை கூட கோப்பையை வெல்லாத ஆர்சிபி அணி இந்த முறை அதிரடி முடிவுகளை எடுத்திருந்தது.

முக்கிய வீரர்களை வளைத்த 2 புதிய அணிகள்.. பல கோடிகளில் ஊதியம் தர முடிவு.. அதுவும் ஏலத்திற்கு முன்பே? முக்கிய வீரர்களை வளைத்த 2 புதிய அணிகள்.. பல கோடிகளில் ஊதியம் தர முடிவு.. அதுவும் ஏலத்திற்கு முன்பே?

ஆர்சிபியின் அறிவிப்பு

ஆர்சிபியின் அறிவிப்பு

ஒவ்வொரு அணியும் அதிகபட்சமாக 4 வீரர்கள் வரை தக்கவைத்துக் கொள்ளலாம் எனக்கூறப்பட்டு வந்த நிலையில் பெங்களூர் அணி 3 வீரர்களை மட்டும் தக்க வைத்துள்ளது. இதில் பெங்களூரு அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலியின் ஊதியத்தை அந்த அணி நிர்வாகம் அதிடியாக குறைத்துள்ளது. முதல் வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ள விராட் கோலி கடந்த ஐ.பி.எல். தொடரில் 17 கோடி ரூபாய் கொடுத்த பெங்களூரு அணி நிர்வாகம் , தற்போது 15 கோடி ரூபாய் தான் தந்துள்ளது.

 என்ன காரணம்

என்ன காரணம்

இதுவரை ஒரு கோப்பையை கூட வென்று கொடுக்காமல் இருக்கும் விராட் கோலி கடந்த சீசனுடன் கேப்டன் பதவியில் இருந்து விலகினார். இதனையடுத்து புதிய கேப்டனை தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயத்தில் ஆர்சிபி அணி உள்ளது. இவற்றையெல்லாம் மனதில் வைத்துதான் அவரின் ஊதியம் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் விராட் கோலியின் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கோலியின் விளக்கம்

கோலியின் விளக்கம்

இந்நிலையில் இதுகுறித்து விராட் கோலி மனம் திறந்துள்ளார். அவர் பேசியுள்ள வீடியோவில், ஆர்சிபி அணியுடனான எனது பயணம் தொடர்வதில் மகிழ்ச்சியாக உள்ளது. அணி நிர்வாகத்திடம் இருந்து எனக்கு அழைப்பு வந்தபோது, எந்தவித குழப்பமுமின்றி தெளிவாக இருந்தேன். ஏனென்றால் ஆர்சிபியில் தான் விளையாடப்போகிறேன் என்பது தெரியும். இத்தனை ஆண்டுகள் சிறப்பானதாக இருந்த இந்த பயணம் அடுத்த 3 ஆண்டுகளுக்கும் நீடித்துள்ளது.

கோலி சபதம்

கோலி சபதம்

ஆர்சிபி அணியின் புதிய ஆட்டத்தை அடுத்தாண்டிலிருந்து காணலாம். சிறப்பான தரமான சம்பவங்களை இனி தான் பார்க்கப்போகிறீர்கள். அடுத்தாண்டு என்ன நடக்கப்போகிறது என்பதை காண ஆவலுடன் உள்ளேன். எங்களுக்கு ரசிகர்கள் தரும் ஆதரவு அளவற்றது. புத்துணர்ச்சியுடனும், புதிய பரிமாணத்துடனும் அடுத்தாண்டு களத்தில் என்னை பார்ப்பீர்கள் என கோலி சபதம் எடுத்துள்ளார்.

Recommended Video

Dhoni, Kohli Take Salary Cuts for CSK and RCB | IPL 2022 Retention | OneIndia Tamil
மேலும் 2 வீரர்கள்

மேலும் 2 வீரர்கள்

விராட் கோலிக்கு அடுத்தபடியாக ஆர்சிபி அணி, ஆஸ்திரேலிய அணியின் அதிரடி வீரர் மேக்ஸ்வெல்லை 2வது வீரராக தேர்வு செய்துள்ளது. அவருக்கு 11 கோடி ரூபாய் வழங்கப்பட உள்ளது. பேட்டிங், பந்துவீச்சு என கலக்கி வந்த மேக்ஸ்வெல், பெங்களூரு அணியில் தொடர்ந்து பயணிப்பது, கூடுதல் பலமாகவே கருதப்படுகிறது. இந்திய அணி வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜ் மூன்றாவது வீரராக பெங்களூரு அணி தக்க வைத்து கொண்டுள்ளது. முகமது சிராஜ்க்கு 7 கோடி ரூபாய் ஊதியம் வழங்கப்படுகிறது.

Story first published: Wednesday, December 1, 2021, 13:39 [IST]
Other articles published on Dec 1, 2021
English summary
The mega auction for the 2022 IPL series is about to take place. To this end, each team released the details of the players they will retain yesterday. Former Bangalore captain Virat Kohli has taken a new oath.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X