For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

“சொன்னதை செய்த தோனி”.. சிஎஸ்கே தக்கவைக்கும் 4 வீரர்களின் விவரம் இதோ.. கைவிடப்பட்ட சீனியர் வீரர்!

சென்னை: ஐபிஎல்-ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தக்கவைக்கப்போகும் வீரர்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

ஐபிஎல் தொடரில் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மெகா ஏலம் அடுத்தாண்டு நடைபெறவுள்ளது. இதில் கூடுதலாக 2 அணிகள் வரவுள்ளதால் சுவாரஸ்யம் அதிகரித்துள்ளது.

3 ஆண்டுகள் போராட்டத்திற்கு பிறகு உண்மையான “பிகில்” அணிக்கு அங்கீகாரம்..!!3 ஆண்டுகள் போராட்டத்திற்கு பிறகு உண்மையான “பிகில்” அணிக்கு அங்கீகாரம்..!!

இந்த மெகா ஏலத்தின் போது ஒவ்வொரு அணியில் இருந்தும் பெருவாரியான வீரர்கள் வேறு அணிகளுக்கு மாற வாய்ப்புகள் உள்ளது.

ஐபிஎல் மெகா ஏலம்

ஐபிஎல் மெகா ஏலம்

அதன்படி ஒவ்வொரு அணியும் அதிகபட்சமாக 4 வீரர்களை தக்கவைத்துக் கொள்ளலாம் என பிசிசிஐ அறிவித்துள்ளது. இதில் குறைந்த பட்சம் ஒரு அயல்நாட்டு வீரராவது இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தக்கவைக்கப்போகும் வீரர்களின் பட்டியலை வரும் நவம்பர் 30ம் தேதிக்குள் சமர்பிக்க காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது.

 சிஎஸ்கே திட்டம்

சிஎஸ்கே திட்டம்

இந்நிலையில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எந்தெந்த வீரர்களை தக்கவைக்க போகிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது. அந்த அணியை பொறுத்தவரை கேப்டன் தோனியை முதன்மை வீரராக தக்கவைக்கப்போவதாக உரிமையாளர் சீனிவாசன் ஏற்கனவே அறிவித்துவிட்டார். இதனால் மீதமுள்ள 3 இடங்களுக்கு தான் போட்டிகள் அதிகரித்துள்ளன.

எதிர்கால திட்டம்

எதிர்கால திட்டம்

அதன்படி 2வது வீரராக அணியின் சீனியர் வீரரான ரவீந்திர ஜடேஜாவை தக்கவைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சிஎஸ்கே அணியின் ஆல்ரவுண்டராக இருக்கும் ஜடேஜா அடுத்த கேப்டனாக கூட நியமிக்கப்படலாம் என்ற பேச்சுக்கள் உலா வருகின்றனர். 3வது வீரராக தென்னாப்பிரிக்காவை சேர்ந்த ஃபாப் டூப்ளசிஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சென்னை அணியின் அஸ்திவாரமாக இவர் பார்க்கப்படுவதால் இவர் தக்கவைக்கப்படவுள்ளார்.

சிஎஸ்கேவின் எதிர்காலம்

சிஎஸ்கேவின் எதிர்காலம்

அணியின் 4வது தேர்வாக ஓப்பனிங் வீரர் ருதுராஜ் கெயிக்வாட்டை தக்கவைக்க சிஎஸ்கே நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. கடந்தாண்டு ஐபிஎல்-ல் அதிக ரன் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்ற ருதுராஜ், சென்னை அணியின் எதிர்காலமாக பார்க்கப்படுகிறார். சிஎஸ்கே அடுத்த 10 ஆண்டுகள் எதிர்காலத்தை மையப்படுத்தியே ஏலம் எடுக்கும் என ஏற்கனவே தோனி குறிப்பிட்டிருந்ததற்கு ருதுராஜ் தான் விடை.

Recommended Video

Dhoni-ஐ வியக்க வைத்த Sharukh Khan.. இணையத்தை கலக்கும் புகைப்படம்!
ரெய்னாவை கைவிட்ட சிஎஸ்கே

ரெய்னாவை கைவிட்ட சிஎஸ்கே

இந்த தக்கவைப்போர் பட்டியலில் சுரேஷ் ரெய்னாவை சிஎஸ்கே கைவிட்டுள்ளது. சென்னை அணிக்காக பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றுக்கொடுத்துள்ள ரெய்னா, சமீப காலமாக ஃபார்ம் அவுட்டில் உள்ளார். கடந்தாண்டு ஐபிஎல் தொடரிலேயே அவரின் செயல்பாடுகள் சரியில்லாததால் ராபின் உத்தப்பா அணிக்குள் களமிறக்கப்பட்டார். எனவே ஏலத்தின் போது கூட அவரை சிஎஸ்கே வாங்குமா என்பது சந்தேகம் தான் எனக்கூறப்படுகிறது.

Story first published: Wednesday, November 24, 2021, 21:27 [IST]
Other articles published on Nov 24, 2021
English summary
CSK's Retaining players details are out ahead of IPL 2022 mega auction, Suresh raina's name is not included on that
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X