‘என்னா மனசுயா’ தோனியின் சம்பளம் குறைப்பு ஏன்?.. கடைசி நேர ஆலோசனையில் நடந்தது என்ன? சுவாரஸ்ய பின்னணி

மும்பை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தக்கவைப்பு பட்டியல் வெளியிட்ட போது தோனியின் சம்பளம் அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது.

ஐபிஎல் 2022ம் ஆண்டுக்காக மெகா ஏலம் நடைபெறவுள்ளது. இதனால் ஒவ்வொரு அணியும் தாங்கள் தக்கவைக்கப்போகும் வீரர்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது.

மிகப்பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே நடப்பு சாம்பியனான சிஎஸ்கே அணி முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது.

 சென்னை அணி

சென்னை அணி

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சார்பில் கேப்டன் எம்.எஸ்.தோனி, ரவீந்திர ஜடேஜா, மொயீன் அலி, ருதுராஜ் கெயிக்வாட் ஆகியோர் தக்கவைக்கப்பட்டுள்ளனர். அந்த அணியின் முதன்மை தேர்வாக கேப்டன் எம்.எஸ்.தோனி தான் இருப்பார் என உரிமையாளர் காசி விஸ்வநாதன் ஏற்கனவே அறிவித்துவிட்டார். இதனால் அவருக்கு ரூ. 16 கோடி ஊதியமாக இருக்கும் என நிர்ணயிக்கப்பட வேண்டியிருந்தது.

திடீர் மாற்றம்

திடீர் மாற்றம்

இந்நிலையில் இன்று சிஎஸ்கே அணி வெளியிட்ட அறிவிப்பில் தொடக்கமே ட்விஸ்ட் காத்திருந்தது. அதாவது தோனிக்கு பதிலாக ரவீந்திர ஜடேஜா முதன்மை வீரராக தேர்வு செய்யப்பட்டிருந்தார். அவருக்கு ரூ.16 கோடி ஊதியம் கொடுக்கப்பட்டிருந்தது. தோனி 2வது வீரராக தேர்வு செய்யப்பட்டு ரூ.12 கோடி மட்டுமே ஊதியம் கொடுக்கப்பட்டிருந்தது. தோனி சம்பளம் குறைக்கப்பட்டதற்கு பின்னால் என்ன காரணம் உள்ளது என அனைவரும் கேட்டு வருகின்றனர்.

காரணம் என்ன?

காரணம் என்ன?

தோனிக்கு வயதாகிவிட்டதால், அடுத்தாண்டு நிச்சயம் ஓய்வை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கேற்றார் போல சென்னையில் தான் கடைசி போட்டி இருக்கும் என தெரிவித்துவிட்டார். இதனால் அவருக்கு பின்னர் ஜடேஜா தான் அணியை வழிநடத்த அதிக வாய்ப்பு இருப்பதால், அவரை ரூ. 16 கோடி ஒப்பந்தம் செய்துள்ளது. இதுமட்டுமல்லாமல் தோனியே தன்னை தக்கவைக்க வேண்டாம் என்று தான் சிஎஸ்கே அணி நிர்வாகத்திடம் தெரிவித்திருந்துள்ளார்.

தோனியின் கோரிக்கை

தோனியின் கோரிக்கை

அதாவது சிஎஸ்கே அணியின் ஆலோசனை கூட்டத்தில், தோனி ரூ.16 கோடி செலவு செய்து தக்கவைக்காதீர்கள், அணியின் நலனை கருத்தில் கொண்டு தன்னை ஏலத்தில் விடுமாறு கேட்டுக்கொண்டதாக தெரிகிறது. ஆனால் இதற்கு உடன்படாத சென்னை அணி சம்பளத்தை குறைத்து மீண்டும் அணிக்குள் கொண்டு வந்துள்ளது. இதனால் தோனியின் நல்ல மனதை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Reason behind CSK Skipper Dhoni's salary Cut in IPL 2022 Retention, CSK's master plan ahead of IPL 2022
Story first published: Tuesday, November 30, 2021, 23:17 [IST]
Other articles published on Nov 30, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X