“மும்பை அணி அவங்கள தக்கவைக்கலயே” அதிருப்தியில் ஆழ்ந்த ரோகித் சர்மா.. ஏலத்திற்காக புதிய ப்ளான்!

மும்பை: முக்கிய வீரர்கள் சிலரை மும்பை அணி தக்கவைக்காததால் கேப்டன் ரோகித் சர்மா அதிருப்தியடைந்துள்ளார்.

IPL 2022: Mumbai Indians Predicted Retention List | OneIndia Tamil

2022ம் ஆண்டுக்கான ஐபிஎல் மெகா ஏலத்திற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் அனைத்து அணிகளும் தாங்கள் தக்கவைக்கப்போகும் வீரர்களின் பட்டியலை சமீபத்தில் வெளியிட்டன.

இஷானுக்கு பதிலாக ஏன் சூர்யகுமார்? 3 மிக முக்கிய காரணங்கள்.. கடைசி நேரத்தில் எடுக்கப்பட்ட முடிவு! இஷானுக்கு பதிலாக ஏன் சூர்யகுமார்? 3 மிக முக்கிய காரணங்கள்.. கடைசி நேரத்தில் எடுக்கப்பட்ட முடிவு!

சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை, டெல்லி, கொல்கத்தா போன்ற அணிகள் அதிகபட்சமாக 4 வீரர்களை தக்கவைத்துக்கொண்டன.

மும்பை அணியின் தேர்வு

மும்பை அணியின் தேர்வு

இதில் அனைவராலும் பெரிதும் கவனிக்கப்பட்ட விஷயம் மும்பை இந்தியன்ஸ் அணியின் பட்டியல் தான். 5 முறை சாம்பியனான அந்த அணியில் நீண்ட நாட்களாக விளையாடிய வீரர்கள் ஒதுக்கப்படவேண்டியிருந்தது. கேப்டன் ரோகித் சர்மா முதல் தேர்வாக தக்கவைப்பட்டார். அவருக்கு அடுத்தபடியாக பும்ரா, சூர்யகுமார் யாதவ், கெயீரன் பொல்லார்ட் ஆகியோர் தக்கவைக்கப்பட்டனர். மும்பை அணிக்காக சிறப்பாக விளையாடி வந்த பாண்ட்யா சகோதரர்கள், ட்ரெண்ட் போல்ட், இஷான் கிஷான் ஆகியோர் கழட்டிவிடப்பட்டனர்.

 ரோகித் அதிருப்தி

ரோகித் அதிருப்தி

இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் தக்கவைப்புகள் அதிர்ச்சியாக இருந்ததாக ரோகித் சர்மா தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், இந்த வருடம் மும்பை இந்தியன்ஸ் அணியின் தக்கவைப்பு பட்டியலை தேர்வு செய்வது மிக கடினமாக இருந்துள்ளது. எங்கள் அணியில் நிலையான வீரர்கள், மட்டும் மிக அற்புதமான வீரர்கள் உள்ளனர். அவர்களை எல்லாம் தற்போது ஏலத்தில் விட்டது மனவருத்தமாக உள்ளது.

நம்பிக்கை

நம்பிக்கை

பாண்ட்யா சகோதரர்கள், இஷான், போல்ட் ஆகியோர் மும்பை அணிக்காக பல்வேறு முக்கியமான விஷயங்களை செய்தவர்கள். நிறைய நல்ல நியாபகங்களை உருவாக்கியவர்கள். அவர்களை வெளியேற்றியது மனதிற்கு கஷ்டமாக உள்ளது. தற்போது தக்கவைக்கப்பட்டுள்ள நாஙகள் 4 பேரும் மீண்டும் ஒரு தரமான அணியை உருவாக்குவோம் என்ற நம்பிக்கை உள்ளது. எங்களின் தற்போதைய இலக்கு மெகா ஏலம் மட்டும் தான். சரியான இடத்திற்கு சரியான வீரர்களை தேர்வு செய்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

வீரர்களின் ப்ளான்

வீரர்களின் ப்ளான்

மும்பை அணியில் இருந்து வெளியேற்றப்பட்ட பாண்ட்யா சகோதரர்கள் அடுத்தபடியாக அகமதாபாத் அணியால் அணுகப்பட்டுள்ளனர். அவர்களின் சொந்த ஊர் அணி என்பதால் அவர்கள் அங்கு செல்வதற்கு தான் அதிக வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது. சூர்யகுமார் யாதவ் மற்றும் ட்ரெண்ட் போல்ட்-ஐ மீண்டும் மும்பை அணியே ஏலத்தில் எடுக்க தீவிரம் காட்டி வருகிறது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Rohit Sharma feels bad after mumbai Indians Not Being Able To Retain All "Gun Players"
Story first published: Thursday, December 2, 2021, 14:37 [IST]
Other articles published on Dec 2, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X