For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

4000% சம்பள உயர்வு.. ஐபிஎல்-ல் கலக்கும் இளம் வீரர்கள்.. அதிக சம்பள உயர்வு பெற்ற வீரர்கள் பட்டியல்!

சென்னை: 2022ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்காக வெங்கடேஷ் ஐயர் உள்ளிட்ட 10 வீரர்கள் இமாலய உயர்வுடன் ஊதியத்தை பெற்றுள்ளனர்.

Recommended Video

Dhoni, Kohli Take Salary Cuts for CSK and RCB | IPL 2022 Retention | OneIndia Tamil

அடுத்தாண்டு ஐபிஎல் தொடருக்காக மெகா ஏலம் நடைபெறவுள்ளது. 2 புதிய அணிகளும் வருகை தரவுள்ளதால் விதிமுறைகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.

அதன்படி ஒவ்வொரு அணியும், தாங்கள் தக்கவைக்கவுள்ள வீரர்களின் பட்டியலை நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

ஐபிஎல் 2022: கோலிக்கு ஆரம்பத்திலேயே அநீதி.. ஆர்சிபி எடுத்த அதிரடி முடிவு.. தக்கவைத்த வீரர்கள் யார்? ஐபிஎல் 2022: கோலிக்கு ஆரம்பத்திலேயே அநீதி.. ஆர்சிபி எடுத்த அதிரடி முடிவு.. தக்கவைத்த வீரர்கள் யார்?

வீரர்கள் தக்கவைப்பு

வீரர்கள் தக்கவைப்பு

நேற்று வெளியிடப்பட்ட பட்டியலில் இளம் வீரர்களுக்கு பெரும் அதிர்ஷ்டம் அடித்தது. இதில் குறிப்பாக வெங்டேஷ் ஐயருக்கு 4000% சதவீதம் ஊதிய உயர்வு ஏற்பட்டுள்ளது என்றால் நம்ப முடிகிறதா?. ஆம், கடந்த சீசனில் இளம் வீரர் வெங்கடேஷ் ஐயரை கொல்கத்தா அணி ரூ.20 லட்சத்திற்கு ஏலம் எடுத்தது. ஆனால் இந்தாண்டு அவர் ரூ. 8 கோடிக்கு தக்கவைக்கப்பட்டுள்ளார். ஐபிஎல் 2வது பாதியில் மட்டுமே விளையாடிய வெங்கடேஷ் ஐயர், கேகேஆர் அணி இறுதிப்போட்டிக்கு செல்ல முக்கிய காரணமாக இருந்தார்.

இருவருக்கு அடித்த அதிர்ஷ்டம்

இருவருக்கு அடித்த அதிர்ஷ்டம்

வெங்டேஷ் ஐயர் மட்டுமின்றி சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமே ஆகாத அப்துல் சமாத் மற்றும் உம்ரான் மாலிக் ஆகியோரும் பெரும் ஊதிய உயர்வை பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு ரூ.10 லட்சத்திற்கு ஏலம் எடுக்கப்பட்ட உம்ரான் மாலிக் தற்போது ரூ.4 கோடிக்கு தக்கவைக்கப்பட்டார். இதே போல கடந்தாண்டு ரூ.20 லட்சத்திற்கு ஏலம் எடுக்கப்பட்ட அப்துல் சமாத் தற்போது ரூ.4 கோடிக்கு தக்கவைக்கப்பட்டார். சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி இவர்கள் இருவரையும் தக்கவைத்துள்ளது.

முன்னணி வீரர்களின் நிலை

முன்னணி வீரர்களின் நிலை

சர்வதேச போட்டிகளில் களம் கண்ட பஞ்சாப் கிங்ஸ் வீரர் மயங்க் அகர்வாலுக்கு கடந்தாண்டு ரூ.1 கோடி தான் சம்பளமாக இருந்தது. ஆனால் இந்தாண்டு ரூ.12 கோடிக்கு அவர் தக்கவைக்கப்பட்டுள்ளார். இதே போல ஐதராபாத் அணியில் கேன் வில்லியம்சனுக்கு ரூ.3 கோடிக்கு சம்பளமாக இருந்தது. தற்போது ரூ.14 கோடிக்கு தக்கவைக்கப்பட்டார். சிஎஸ்கே வீரர் ஜடேஜா ரூ. 16 கோடி சம்பளம் பெறவுள்ளார்.

 இளம் வீரர்களின் சம்பள உயர்வு

இளம் வீரர்களின் சம்பள உயர்வு

வெங்கடேஷ் ஐயர் - ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.8 கோடி

உம்ரான் மாலிக் - ரூ. 10 லட்சத்தில் இருந்து ரூ.4 கோடி

அப்துல் சமாத் - ரூ. 20 லட்சத்தில் இருந்து ரூ.4 கோடி

ருதுராஜ் கெயிக்வாட் - ரூ.40 லட்சத்தில் இருந்து ரூ.6 கோடி

அர்ஷ்தீப் சிங் - ரூ. 20 லட்சத்தில் இருந்து ரூ. 4 கோடி

பிரித்வி ஷா - ரூ. 1.2 கோடியில் இருந்து ரூ.7.5 கோடி

முகமது சிராஜ் - ரூ.2.6 கோடியில் இருந்து ரூ.14 கோடி

சஞ்சு சாம்சன் - ரூ. 8.5 கோடியில் இருந்து ரூ.14 கோடி

சீனியர் வீரர்களின் சம்பளம்

சீனியர் வீரர்களின் சம்பளம்

ரவீந்திர ஜடேஜா - அதிகபட்ச சம்பளம்

மயங்க் அகர்வால் - ரூ.1 கோடியில் இருந்து ரூ. 12 கோடி

வில்லியம்சன் - ரூ. 3 கோடியில் இருந்து ரூ. 14 கோடி

ஆண்ட்ரே ரஸல் - ரூ.8.5 கோடியில் இருந்து ரூ.12 கோடி

ஜஸ்பிரித் பும்ரா - ரூ. 7 கோடியில் இருந்து ரூ. 12 கோடி

ஜாஸ் பட்லர் - ரூ. 4.4 கோடியில் இருந்து ரூ. 10 கோடி

சூர்யகுமார் யாதவ் - ரூ. 3.2 கோடியில் இருந்து ரூ.8 கோடி

Story first published: Wednesday, December 1, 2021, 12:32 [IST]
Other articles published on Dec 1, 2021
English summary
Venkatesh Iyer got 4000% hike in salary, list of players who have got highest salary hikes in IPL 2022 Retention
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X