For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

டிம் டேவிட்-ன் ரிவ்யூவ் எடுக்காதது ஏன்? ரிஷப் பண்ட் கூறிய விளக்கம்.. டெல்லி விதியை மாற்றிய முடிவு!!

மும்பை: டெல்லி அணியின் விதியை மாற்றிய ஒரே ஒரு முடிவு குறித்து கேப்டன் ரிஷப் பண்ட் விளக்கம் அளித்துள்ளார்.

Recommended Video

Delhi Capitals-க்கு ஆப்பு வைத்த ஒரேயொரு முடிவு.. Rishabh Pant விளக்கம் #cricket

ஐபிஎல் தொடரின் 69வது லீக் போட்டியில் நேற்று டெல்லி மற்றும் மும்பை அணிகள் மோதின.

டெல்லி அணி வெற்றி பெற்றால் தான் ப்ளே ஆஃப் செல்ல முடியும் என்ற சூழலில் இந்த போட்டி நடைபெற்றது.

பும்ரா சாதனை.. கேட்ச்சால் மாறிய ஆட்டம்.. டெல்லி அணி சொதப்பல்.. வெற்றியுடன் முடிக்குமா மும்பை?பும்ரா சாதனை.. கேட்ச்சால் மாறிய ஆட்டம்.. டெல்லி அணி சொதப்பல்.. வெற்றியுடன் முடிக்குமா மும்பை?

டெல்லி அணி தோல்வி

டெல்லி அணி தோல்வி

அதன்படி டெல்லி அணியின் கையில் தான் வெற்றி வாய்ப்பு இருந்தது. ஆனால் ஒரே ஒரு முடிவு எடுக்கும் வரை. டெல்லி நிர்ணயித்த 160 என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய மும்பை அணி 95 ரன்களுக்கெல்லாம் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. கடைசி நம்பிக்கையாக இருந்த டிம் டேவிட்டும் சீக்கிரமாக அவுட்டாகியிருக்க வேண்டும்.

சர்ச்சை முடிவு

சர்ச்சை முடிவு

டிம் டேவிட் களமிறங்கிய முதல் பந்திலேயே பந்து எட்ஜாகி கேட்ச் ஆனது. ஆனால் கள நடுவர் இதற்கு அவுட் தர மறுத்தார். பந்து பேட்டில் எட்ஜானது நன்கு தெரிந்தது. ஆனால், ரிஷப் பண்ட் தன்வசம் 2 ரிவ்யூவ் வைத்திருந்தும் எடுக்க மறுத்தார். இது ஏன் என்றே யாருக்கும் புரியவில்லை. கடைசியில் டிம் டேவிட் தான் எமனாக அமைந்தார். 11 பந்துகளில் 34 ரன்களை விளாசி வெற்றிக்கு காரணமாக அமைந்தார். இதனால் ரிஷப் பண்ட் மீது விமர்சனங்கள் குவிந்தன.

ரிஷப் பண்ட் விளக்கம்

ரிஷப் பண்ட் விளக்கம்

இந்நிலையில் ரிவ்யூவ் எடுக்காதது ஏன் என்பது குறித்து பண்ட் பேசியுள்ளார். அதில், எனக்கு கேட்ச் நன்றாக தான் வந்தது. பேட்டில் பட்டதால், ரிவ்யூவ் எடுத்திருக்கலாம். ஆனால் அருகே இருந்த எங்கள் யாருக்குமே அது உறுதியாக தெரியவில்லை. பேட்டில் படவில்லை என்று தான் நினைத்தோம். சக வீரர்களும் உறுதிபட கூறவில்லை. அதனால் ரிவ்யூவ் எடுக்காமல் விட்டுவிட்டேன் எனக் கூறினார்.

தோல்விக்கான காரணம் என்ன

தோல்விக்கான காரணம் என்ன

தொடர்ந்து பேசிய அவர், நடப்பு சீசனில் தொடர்ந்து சிறப்பாக தான் ஆடினோம். இன்று தான் சரியாக செயல்படவில்லை. இதற்கு காரணம் அதிகப்படியான அழுத்தம் தான். 5 - 7 ரன்கள் குறைவாக அடித்துவிட்டோம். தவறுகளை சரிசெய்துக்கொண்டு அடுத்தாண்டு பலமான கம்பேக் கொடுப்போம் என பண்ட் கூறியுள்ளார்.

Story first published: Sunday, May 22, 2022, 16:25 [IST]
Other articles published on May 22, 2022
English summary
Rishabh pant Explanation on review ( மும்பை இந்தியன்ஸ் vs டெல்லி கேப்பிடல்ஸ் போட்டி ) டிம் டேவிட்டின் விக்கெட்டில் ரிவ்யூவ் எடுக்காதது குறித்து டெல்லி கேப்பிடல்ஸ் அணி கேப்டன் ரிஷப் பண்ட் விளக்கம் அளித்துள்ளார்.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X