For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

வாட்ச்-க்கு ஆசைப்பட்டு ரூ.2.5 கோடி அபேஸ்.. மோசடி வழக்கில் ரிஷப் பண்ட்.. அப்படி என்ன நடந்தது!

மும்பை: இந்திய அணி வீரர் ரிஷப் பண்ட், ரூ.2.6 கோடியை ஏமாந்துவிட்டதாக போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.

Recommended Video

Rishabh Pant-ஐ ஏமாற்றிய நபர்.. 3 கோடி மோசடி #Cricket

இந்திய அணியின் முதன்மை விக்கெட் கீப்பரும், டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டனாகவும் ஜொலித்து வருபவர் ரிஷப் பண்ட்.

இவரின் தலைமையிலான டெல்லி அணி சமீபத்தில் ஐபிஎல் தொடரில் இருந்து நாக் அவுட்டானது.

ரொம்ப கஷ்டம் தான்.. இந்திய அணியின் ப்ளேயிங் 11.. சீனியர் கொடுத்த முக்கிய தகவல்! ரொம்ப கஷ்டம் தான்.. இந்திய அணியின் ப்ளேயிங் 11.. சீனியர் கொடுத்த முக்கிய தகவல்!

மோசடி வழக்கு

மோசடி வழக்கு

இந்நிலையில் ஐபிஎல் - ல் வெளியேறியவுடன் ஒரு வழக்கில் பிசியாகியுள்ளார். ஆடம்பர பொருட்கள் மீது அதிக ஆர்வம் கொண்ட ரிஷப் பண்ட் வாட்ச்-காக ரூ. 3 கோடியை பறிகொடுத்துள்ளார். இதுகுறித்து மும்பை போலீசாரிடம் பண்ட்-ன் மேலாளர் புனித் சொலாங்கி வழக்கு தொடர்ந்துள்ளார்.

என்னதான் நடந்தது

என்னதான் நடந்தது

ஹரியானாவை சேர்ந்த கிரிக்கெட் வீரர் ம்ரினங்க் சிங் என்பவர் கடந்தாண்டு ஜனவரி மாதம் ரிஷப் பண்ட்-ஐ சந்தித்துள்ளார். அப்போது, அதிக விலைமதிப்புடைய வாட்ச்கள் மற்றும் நகைகளை குறைந்த விலையில் விற்பதாகவும், அதனை வாங்கி அதிக தொகைக்கு விற்றுக்கொள்ளுமாறும் ஆசை வார்த்தைக் கூறியுள்ளார். இதற்கு முன் பல கிரிக்கெட் வீரர்களும் இவரிடம் நகை வாங்கியுள்ளதாகவும் ஏமாற்றியுள்ளார்.

2 வாட்ச்கள்

2 வாட்ச்கள்

இதனை முழுவதுமாக நம்பிய ரிஷப் பண்ட் வாட்ச்களை வாங்க ரூ. 2 கோடியை கொடுத்து அனுப்பியுள்ளார். இதுமட்டுமல்லாமல் தன்னிடம் இருந்த ரூ.36.25 லட்சம் மதிப்புக்கொண்ட ஃப்ராங்க் முல்லெர் வாட்ச் மற்றும் ரூ. 62.60 லட்சம் மதிப்புக்கொண்ட ரிச்சர்ட் மில்லே இரண்டையும் கொடுத்து விற்றுக்கொடுக்குமாறு தெரிவித்துள்ளார்.

உணர்ந்தது எப்போது?

உணர்ந்தது எப்போது?

ஆனால் நீண்ட நாட்களாக எந்தவித பதிலும் வராத பின்னர் தான் பண்ட், தான் ஏமற்றப்பட்டதை உணர்ந்தார். இதனையடுத்து தனது பணம் மொத்தமாக ரூ.3 கோடியை திருப்பிக் கொடுக்குமாறு கோரியுள்ளார். முழு பணத்தையும் தர முடியாத ம்ரினங்க் சிங் ரூ1.63 கோடிக்கு காசோலை கொடுத்துள்ளார். ஆனால் அதில் பணமே இல்லை.

வழக்கு நிலைமை

வழக்கு நிலைமை

இறுதியில் ஏமாந்துவிட்டதாக போலீசாரிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மும்பை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பிரபல கிரிக்கெட் வீரர் இப்படி மோசமாக ஏமாற்றப்பட்டிருப்பது ரசிகர்களை பதற செய்துள்ளது.

Story first published: Monday, May 23, 2022, 22:47 [IST]
Other articles published on May 23, 2022
English summary
IPL 2022: Rishabh pant got cheated of rs.1.63 crore for a watch
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X