For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஐ.பி.எல் தொடக்க தேதி இது தான்..!! பி.சி.சி.ஐ. அவசர ஆலோசனை..!! வெளிநாடா? இந்தியாவா? கருத்து கேட்பு

மும்பை: ஐ.பி.எல். 15வது சீசன் குறித்து 10 அணிகளுடன் பி.சி.சி.ஐ. இன்று காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தியது.

இதில், போட்டியை எங்கு நடத்தலாம், எப்போது தொடங்கலாம் என்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

கொரோனா காலக் கட்டத்தில் ஏலத்தை எப்படி நடத்தலாம் என்பது குறித்தும் இந்த ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

இங்கிலாந்து வீரர்களை புறக்கணிக்க ஐ.பி.எல். அணிகள் முடிவு..!! ECB போட்ட கண்டிஷனால் அதிருப்தி..இங்கிலாந்து வீரர்களை புறக்கணிக்க ஐ.பி.எல். அணிகள் முடிவு..!! ECB போட்ட கண்டிஷனால் அதிருப்தி..

பி.சி.சி.ஐ. ஆலோசனை

பி.சி.சி.ஐ. ஆலோசனை

ஐ.பி.எல். அணிகளுக்கு ஏலத்திற்கான நடைமுறை, விதிகளை இந்த கூட்டத்தில் பி.சி.சி.ஐ. முதலில் விளக்கியது. ஏலத்தில் பங்கேற்க பதிவு செய்துள்ள வீரர்கள் யார் எல்லாம் தேவை என்பதை தேர்வு செய்து இறுதிப் பட்டியலை தயார் செய்து அனுப்புமாறு இந்த கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. தற்போது வரை வரும் 12அல்லது 13ஆம் தேதி தான் ஏலத்தை நடத்துவது என்று பி.சி.சி.ஐ. தெளிவாக உள்ளதாகவும், கொரோனா சூழ்நிலையை கருத்தில் கொண்டு தேவையிருந்தால் மாற்றி கொள்ளலாம் என்று பி.சி.சி.ஐ. தெரிவித்துள்ளது.

எங்கு நடத்தலாம்?

எங்கு நடத்தலாம்?

ஐ.பி.எல். 15வது சீசன் மார்ச் 27ஆம் தேதி தொடங்கி வரும் மே இறுதி வரை நடத்தலாம் என்று இந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. போட்டிகள் அனைத்தும் மும்பையில் உள்ள 3 கிரிக்கெட் மைதானங்களில் நடத்தவது குறித்து பி.சி.சி.ஐ. தங்களது பிளானை கூறியது. அதற்கு அணிகள் புனேவையும் 4வது மைதானமாக சேர்த்து கொள்ளும் படி கோரிக்கை வைத்துள்ளனர்

யு.ஏ.இ. தான் வேண்டும்

யு.ஏ.இ. தான் வேண்டும்

மேலும், கொரோனா அச்சுறுத்தல் தொடர்ந்தால் போட்டியை தென்னாப்பிரிக்காவில் நடத்தலாமா இல்லை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தலாமா என்று பி.சி.சி.ஐ. அணி நிர்வாகிகளிடம் கருத்து கேட்டது. அதற்கு பெரும்பாலான அணிகள், வெளிநாட்டில் நடத்துவதாக இருந்தால் ஐக்கிய அரபு அமீரகத்திலேயே நடத்துங்கள், தென்னாப்பிரிக்கா வேண்டாம் என்று தெரிவித்துள்ளது.

ரசிகர்களுக்கு அனுமதி இல்லை

ரசிகர்களுக்கு அனுமதி இல்லை

இதே போன்று ஐ.பி.எல். போட்டிகள் இந்தியாவில் நடந்தால் பார்வையாளர்களுக்கு அனுமதி தருவது இல்லை என்று இந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதாக தெரிகிறது. மேலும் இந்த கூட்டத்தில் வருமானத்தை எப்படி அணிகளுக்கு பிரித்து வழங்குவது தொடர்பாகவும் ஆலோசனை நடத்தப்பட்டது.

Story first published: Saturday, January 22, 2022, 18:51 [IST]
Other articles published on Jan 22, 2022
English summary
IPL 2022 schedule, Venue is Discussed with franchises,ஐ.பி.எல் தொடக்க தேதி இது தான்..!! பி.சி.சி.ஐ. அவசர ஆலோசனை..!! வெளிநாடா? இந்தியாவா? கருத்து கேட்பு
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X