For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

“அமீரகம் தராத 3 நல்ல விஷயங்கள்” ஐபிஎல் தொடருக்காக தென்னாப்பிரிக்கா தந்த ஆஃபர்.. சிந்திக்கும் பிசிசிஐ

மும்பை: ஐபிஎல் 2022ம் ஆண்டுக்காக 3 நல்ல விஷயங்களை செய்துக்கொடுப்பதாக தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் ஆஃபர் கொடுத்துள்ளது.

Recommended Video

UAE-ல் இல்லாத நல்ல விஷயங்கள்.. IPL-க்கு South Africa கொடுத்த Offer

2 புதிய அணிகளின் ஒப்பந்தம், வீரர்களின் பங்கேற்பு என 2022ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன.

896 இந்திய வீரர்கள், 318 அயல்நாட்டு வீரர்கள் என மொத்தமாக 1,214 பேர் பங்கேற்கும் மெகா ஏலம் வரும் பிப்ரவரி 12 - 13ம் தேதிகளில் நடைபெறவுள்ளது.

ஐபிஎல் தொடருக்கான இடம்

ஐபிஎல் தொடருக்கான இடம்

இதுகுறித்து பேசியிருந்த பிசிசிஐ செயல் தலைவர் ஜெய் ஷா, ஐபிஎல் தொடர் வரும் மார்ச் மாதம் கடைசி வாரத்தில் தொடங்கி மே மாதம் கடைசி வரை நடைபெறும் எனக் கூறியிருந்தார். ஆனால் போட்டிகள் எங்கு நடைபெறும் என்பதில் தான் குழப்பம் நீடித்து வருகிறது. கொரோனா அச்சுறுத்தலால் இந்த முறையும் அயல்நாட்டிற்கு மாற்றப்படலாம். இந்நிலையில் ஐபிஎல் போட்டிகளை நடந்த பிசிசிஐ-க்கு சூப்பர் ஆஃபர்களை தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் கொடுத்துள்ளது.

செலவுகள்

செலவுகள்

அமீரகத்தில் ஐபிஎல் போட்டிகள் நடத்தப்படுவதால், பிசிசிஐ-க்கு பல மடங்கு கூடுதல் செலவுகள் ஏற்படுகின்றன. பாகிஸ்தான் உட்பட பல்வேறு நாடுகள் தங்களது தொடர்களை அங்கு நடத்த விரும்புவதால், அதற்கான டிமாண்ட் அதிகமாகி அதிக தொகை கேட்கப்படுகின்றன. ஆனால் மிக குறைந்த பணத்தை வாங்கிக்கொண்டு மைதானங்களை தர தென்னாப்பிரிக்கா தயாராகவுள்ளது. கொரோனாவால் கடும் பண சிக்கலில் உள்ள அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்திற்கு ஐபிஎல் தொடர் பெரும் லாபத்தை கொடுக்கும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

பசுமை ஹோட்டல்கள்

பசுமை ஹோட்டல்கள்

தென்னாப்பிரிக்காவில் மிகவும் பாதுகாப்பாகவும், குறைந்த விலையுடனும் ஹோட்டல்கள் கிடைக்கின்றன. அடர்ந்த காடுகள், ஏரிகள் உள்ள பசுமையான இடத்தில் ஹோட்டல்கள் உள்ளதால் வீரர்களுக்கு பயோ பபுள் அழுத்தம் இருக்காது. அமீரகத்தில் பயோ பபுள் பாதுகாப்பு சிறப்பாக இருந்த போதும், வீரர்களின் மனநிலை பாதிப்படைந்ததாக கூறப்பட்டது. இங்கு அந்த பிரச்சினைகளும், செலவு பிரச்சினைகளும் ஐபிஎல் அணிகளுக்கு இருக்காது.

 மைதானங்கள்

மைதானங்கள்

அமீரகத்தில் 3 மைதானங்களே உள்ளன. ஆனால் தென்னாப்பிரிக்க வாரியம் 4 மைதானங்களை கொடுக்க முன்வந்துள்ளது. வாண்டரர்ஸ், செஞ்சூரியன் பார்க், வில்லோமூரே பார்க், சென்வெஸ் கிரிக்கெட் ஸ்டேடியம் என 4 இடங்களை கொடுக்கிறது. இந்த 4 இடங்களுக்கும் குறைந்த நேர விமான பயணங்களே இருக்கும் என்பதால், வீரர்களின் பாதுகாப்பு குறித்த பயம் இருக்காது எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

Story first published: Tuesday, January 25, 2022, 15:47 [IST]
Other articles published on Jan 25, 2022
English summary
South africa Cricket gives 3 offers to BCCI to host IPL 2022, plans are ready
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X