For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

7 பந்தில் மாறிய ஆட்டம்..! புவின்னா ஃபயரு..! கடைசி நேரத்தில் பதறிய மும்பை.. தப்பித்த ஐதராபாத்

மும்பை: ஐபிஎல் தொடரில் ஐதராபாத் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில், மும்பை அணி வெற்றி அருகே வரை சென்று கோட்டை விட்டது

வாழ்வா சாவா என்ற கட்டத்தில் உள்ள ஐதராபாத் அணி, மும்பை அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

வில்லியம்சனுக்கு மாற்றாக பிரியம் கார்க் தொடக்க வீரராக அபிஷேக் சர்மாவுடன் இணைந்தார்.

ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை.. ராகுல் திரிபாதி மரண பேட்டிங்.. ஒரே ஓவரில் ஆட்டத்தை மாற்றிய மும்பைஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை.. ராகுல் திரிபாதி மரண பேட்டிங்.. ஒரே ஓவரில் ஆட்டத்தை மாற்றிய மும்பை

சூப்பர் பவர்பிளே

சூப்பர் பவர்பிளே

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அபிஷேக் சர்மா 9 ரன்களில் வெளியேறினார். இதனை தொடர்ந்து ஜோடி சேர்ந்த பிரியம் கார்க் மற்றும் ராகுல் திரிபாதி ஜோடி அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர். குறிப்பாக பும்ரா ஓவரிலேயே 15 ரன்கள் விளாசப்பட்டது. இதனால் பவர்பிளேவில் ஐதராபாத் அணி 57 ரன்களை விளாசி இருந்தது. பிரியம் கார்க் 26 பந்துகளில் 42 ரன்கள் விளாசினார். இதில் 4 பவுண்டரிகளும், 2 சிக்சர்களும் அடங்கும்.

மாஸ் காட்டிய திரிபாதி

மாஸ் காட்டிய திரிபாதி

மறுமுனையில் ராகுல் திரிபாதி ரன் குவிக்கும் வேகத்தை அதிகரிக்க, 32 பந்தில் அரைசதம் அடித்தார். ஐதராபாத் அணி 10.1வது ஓவரில் 100 ரன்களை எட்டியது. சிறப்பாக விளையாடிய ராகுல் திரிபாதி 44 பந்துகளில் 76 ரன்கள் குவித்தார். இதில் 3 சிக்சர், 9 பவுண்டரிகள் அடங்கும். இதன் பின்னர் நிக்கோலஸ் பூரானும் தன் பங்கிற்கு 22 பந்துகளில் 38 ரன்கள் விளாசினார். ரமன்தீப் சிங் 18வது ஓவரில் 2 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி 2 ரன்களை மட்டுமே விட்டு கொடுத்தார். இதனால் ஐதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 193 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

அதிரடி தொடக்கம்

அதிரடி தொடக்கம்

194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய மும்பை அணியில் ரோகித் சர்மா, இஷான் கிஷன் ஜோடி அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தது. ரோகித் சர்மா 4 சிக்சர்கள் உள்பட 48 ரன்களை விளாச, இஷான் கிஷன் தன் பங்கிற்கு 5 பவுண்டரிகள் விளாசி 43 ரன்கள் சேர்த்தார். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 95 ரன்களை சேர்த்தது. இருவரும் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, நடுவரிசை வீரர்களும் ஏமாற்றினர்.

மாற்றிய ஒரு ரன்அவுட்

மாற்றிய ஒரு ரன்அவுட்

இருப்பினும் டிம் டேவிட் மட்டும் சிக்சர்களை பறக்கவிட்டார். குறிப்பாக நடராஜன் வீசிய 18வது ஓவரில் டேவிட் 4 சிக்சர்களை பறக்கவிட, கடைசி பந்தில் நடராஜன் கையில் ரன் அவுட் ஆனார். இது ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. இதனையடுத்து புவனேஸ்வர் குமார் வீசிய 19வது ஓவரில் மும்பை அணி ஒரு விக்கெட்டை இழந்து விக்கெட் மெய்டனாக மாற, ஏழே பந்துகளில் ஆட்டம் தலைக்கீழ் மாறியது.கடைசிஓவரில் 19 ரன்கள் தேவைப்பட மும்பை அணி கடைசி 3 பந்தில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் அடித்து 3 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதன் மூலம் 5 தோல்விக்கு பிறகு ஐதராபாத் அணி வெற்றி பாதைக்கு திரும்பி பிளே ஆப் பந்தயத்தில் உள்ளது.

Story first published: Tuesday, May 17, 2022, 23:50 [IST]
Other articles published on May 17, 2022
English summary
IPL 2022 – SRH Beat MI by 3 runs and keeps Playoff hopes alive7 பந்தில் மாறிய ஆட்டம்..! புவின்னா ஃபயரு..! கடைசி நேரத்தில் பதறிய மும்பை.. தப்பித்த ஐதராபாத்
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X