For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்தாண்டே தோனி ஓய்வு??.. சுனில் கவாஸ்கர் சொன்ன முக்கிய தகவல்.. மும்பை போட்டியிலேயே தீர்மானம்!

மும்பை: சிஎஸ்கே கேப்டன் எம்.எஸ்.தோனி ஓய்வு குறித்து முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் முக்கிய தகவலை பகிர்ந்துள்ளார்.

ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் மும்பை அணியிடம் சிஎஸ்கே 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது.

இந்த தோல்வியின் மூலம் சென்னை அணி அதிகாரப்பூர்வமாக ப்ளே ஆஃப் செல்லும் வாய்ப்பை இழந்துள்ளது.

“எதிரிக்கு கூட உங்கள பிடிக்குதே”.. மும்பை போட்டியில் தோனி செய்த விஷயம்.. ரசிகர்கள் நெகிழ்ச்சி! “எதிரிக்கு கூட உங்கள பிடிக்குதே”.. மும்பை போட்டியில் தோனி செய்த விஷயம்.. ரசிகர்கள் நெகிழ்ச்சி!

தோனி ஓய்வா?

தோனி ஓய்வா?

இதனையடுத்து சென்னை அணியின் கேப்டன் தோனி இந்தாண்டுடன் ஓய்வை அறிவிக்கவுள்ளார் என்ற தகவல்கள் பரவி வருகின்றன. 41 வயதை நெருங்கி வரும் தோனி அடுத்தாண்டு முதல் சிஎஸ்கே அணியின் ஆலோகராகவும் செயல்படப்போவதாக தகவல்கள் பரவின. இதற்கேற்றார் போல தான் நேற்று ஒரு சம்பவமும் நடந்தது.

தோனியின் ஃபார்ம்

தோனியின் ஃபார்ம்

அதாவது போட்டி முடிந்தவுடன் மும்பை வீரர்கள் மற்றும் சிஎஸ்கே ஊழியர்களுக்கு ஜெர்ஸிகளில் கையெழுத்திட்டு பரிசாக கொத்தார். மும்பைக்கு எதிராக அவர் ஆடிய கடைசி ஆட்டமாக இது இருக்கலாம் எனக்கூறினர். ஆனால் தோனி இன்னும் ஃபிட்டாக தான் இருக்கிறார். நேற்று 36 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்து தடுமாறிய சிஎஸ்கேவை தோனி தான் 97 ரன்கள் வரை கொண்டு சென்றார். 2 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 36 ரன்களை சேர்த்து தோனி கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

கவாஸ்கர் புது தகவல்

கவாஸ்கர் புது தகவல்

இந்நிலையில் தோனி ஓய்வு குறித்து கவாஸ்கர் முக்கிய தகவலை பகிர்ந்துள்ளார். அதில், தோனி ஆடிய விதத்தை பாருங்கள், கிரிக்கெட் மீது இன்னும் அதே ஆர்வம் மற்றும் துடிப்புடன் இருக்கிறார். வயதாகிவிட்டால் களத்தில் ஓட முடியாது எனக்கூறுவார்கள். ஆனால் நேற்று தோனி அவ்வளவு துடிப்புடன் ரன் எடுக்க ஓடியது ஆச்சரியமாக இருந்தது.

தோனி புரிதல்

தோனி புரிதல்

சென்னை அணி 2 - 3 விக்கெட்களை வெகுசீக்கிரமாக இழந்தவுடனேயே தோனி தனது நேரம் வந்துவிட்டது என புரிந்துக்கொண்டார். அவரின் அந்த பொறுப்பு தான் நேற்று சிஎஸ்கேவை காப்பாற்றியது. இதையெல்லாம் வைத்து பார்த்தால் நிச்சயமாக ஓய்வு பெற மாட்டார் எனக்கூறியுள்ளார்.

Story first published: Friday, May 13, 2022, 18:36 [IST]
Other articles published on May 13, 2022
English summary
IPL 2022: Sunil gavaskar Gives important note on MS Dhoni's Retirement
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X