For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

“நான் கிரவுண்டில் இருந்திருக்கனும்..” சிஎஸ்கே - கொல்கத்தா போட்டி.. சுரேஷ் ரெய்னா உருக்கமான பேச்சு!

மும்பை: சுரேஷ் ரெய்னா கமெண்ட்டேட்டரிக்கு செல்வதற்கு முன்னதாக கூறிய வார்த்தைகள் ரசிகர்கள் மனதை உருகவைத்துள்ளது.

Recommended Video

IPL 2022: Suresh Raina Gets Emotional Ahead Of CSK’s First Match | Oneindia Tamil

ஐபிஎல் 15வது சீசனின் முதல் போட்டி இன்று வான்கடே மைதானத்தில் தொடங்குகிறது. சிஎஸ்கே மற்றும் கொல்கத்தா அணிகள் மோதுகின்றனர்.

ஐபிஎல் வரலாற்றில் இந்த போட்டி சென்னை அணி ரசிகர்களுக்கு மிகவும் சுவாரஸ்யமான ஒன்றாக இருக்கப்போகிறது.

IPL : எதிர்பாராத சிக்கல்; முற்றிலும் புதுமுகம்.. சிஎஸ்கே அணி பலம் மற்றும் பலவீனம் என்ன??.. ஓர் அலசல்IPL : எதிர்பாராத சிக்கல்; முற்றிலும் புதுமுகம்.. சிஎஸ்கே அணி பலம் மற்றும் பலவீனம் என்ன??.. ஓர் அலசல்

ரசிகர்களுக்கு புது அணி

ரசிகர்களுக்கு புது அணி

சென்னை அணியின் கேப்டன் பதவியில் இருந்து எம்.எஸ்.தோனி பதவி விலகினார். புதிய கேப்டன் ரவீந்திர ஜடேஜாவின் தலைமையில் சென்னை அணி களமிறங்கியது. இது ஒருபுறம் இருக்க சின்ன தல என்று ரசிகர்களால் அழைக்கப்படும் சுரேஷ் ரெய்னாவை புறக்கணித்துவிட்டு, சென்னை அணி இந்த முறை விளையாடுகிறது.

ரெய்னாவின் புது அவதாரம்

ரெய்னாவின் புது அவதாரம்

ஐபிஎல் தொடரில் எந்த அணியும் சுரேஷ் ரெய்னா மீது ஆர்வம் காட்டவில்லை. இதனால் அவர் வர்ணனையாளராக அவதாரம் எடுத்துள்ளார். ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் இந்தி மொழி கமெண்டேட்டராக சுரேஷ் ரெய்னா பணியாற்றுகிறார். இதற்காக இன்று அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. நடனம் ஆடிக்கொண்டும், விசில் அடித்துக்கொண்டும் அலுவலகத்திற்குள் சென்ற வீடியோ இணையத்தை கலக்கி வருகிறார்.

மனம் திறந்த ரெய்னா

மனம் திறந்த ரெய்னா

நிகழ்ச்சியின் போது பேசிய அவர், ரவீந்திர ஜடேஜா புதிய கேப்டனாகியிருப்பது மகிழ்ச்சியாக தான் உள்ளது. ஆனால் எம்.எஸ்.தோனி தான் எங்களுக்கு எப்போதுமே நிரந்தர கேப்டன் எனக்கூறினார். மேலும், நான் இந்த நேரத்தில் மைதானத்தில் மஞ்சள் நிற ஜெர்ஸியுடன் விளையாட சென்றிருக்க வேண்டும். இங்கு இருக்கிறேன் என மன வருத்தத்துடன் கூறினார்.

ரசிகர்களின் நம்பிக்கை

ரசிகர்களின் நம்பிக்கை

ஏற்கனவே ரெய்னா சென்னை அணியில் இல்லை என்ற கவலையில் இருக்கும் ரசிகர்கள், தற்போது அவர் இது போன்று பேசியிருப்பது ரசிகர்கள் மனதை உருகவைத்துள்ளது. அவர் எடுத்துள்ள 2வது அவதாரம் மிகச்சிறப்பாக இருக்க வேண்டும் என்றும், அடுத்தாண்டு அவரை கண்டிப்பாக பார்ப்போம் என்றும் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Story first published: Saturday, March 26, 2022, 20:08 [IST]
Other articles published on Mar 26, 2022
English summary
IPL 2022: Suresh raina heartful speech about CSk vs KKR opening match
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X