For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஐபிஎல்: “3 வீரர்களில் அணியின் மொத்த பலம்” சிஎஸ்கேவுக்கு சவால் விடும் அகமதாபாத்.. யார் அவர்கள்!

அகமதாபாத்: ஐ.பி.எல். 15வது சீசன் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் வீரர்களுக்கான ஏலம் அடுத்த மாதம் முதல் வாரத்தில் நடைபெறுகிறது.

Recommended Video

Hardik Pandya முதல் Rashid Khan வரை.. வலுவான அணியாக மாறிய Ahmedabad

இந்த சீசனில் அகமதாபாத் மற்றும் லக்னோ என புதியதாக 2 அணிகள் பங்கேற்கின்றன. இதில் ஏலத்திற்கு முன்பே 3 வீரர்களை ஓப்பந்தம் செய்ய பி.சி.சி.ஐ.க்கு புதிய அணிகள் வாய்ப்பு வழங்கியது.

இந்த நிலையில், அகமதாபாத் அணி 3 முக்கிய வீரர்களை ஒப்பந்ததம் செய்து, மற்ற பலமான அணிகளுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.

ஐபிஎல் வரலாற்றில் புதிய ரெக்கார்ட் ரெடி!! இளம் வீரரை வாங்க பல கோடிகளை இறக்கும் 3 அணிகள் - காரணம்? ஐபிஎல் வரலாற்றில் புதிய ரெக்கார்ட் ரெடி!! இளம் வீரரை வாங்க பல கோடிகளை இறக்கும் 3 அணிகள் - காரணம்?

ஹர்திக் பாண்டியா

ஹர்திக் பாண்டியா

அகமதாபாத் அணி, முதல் வீரராக ஹர்திக் பாண்டியாவை 15 கோடி ரூபாய்க்கு தேர்வு செய்துள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம்பெற்றிருந்த ஹர்திக் பாண்டியாவை அந்த அணி தக்க வைக்கவில்லை. இதனையடுத்து, ஹர்திக் பாண்டியாவை ஏலத்திற்கு முன்பே அகமதாபாத் தட்டி தூக்கிவிட்டது. அகமதாபாத் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா செயல்படுவார் என்று அண்மையில் செய்தி வெளியானது. 2018ஆம் ஆண்டு ஹர்திக்கை 11 கோடி கொடுத்து மும்பை தக்கவைத்த நிலையில் தற்போது அவருக்கு 15 கோடி கிடைத்துள்ளது

ரஷித் கான்

ரஷித் கான்

அகமதாபாத் அணி 2வது வீரராக ரஷித் கானை அதே 15 கோடி ரூபாய்க்கு ஓப்பதம் செய்துள்ளது. சன்ரைசர்ஸ் அணி 9 கோடி ரூபாய் கொடுத்து 2018ஆம் ஆண்டு ரஷித் கானை வாங்கியது. அந்த அணிக்காக 76 போட்டியில் இடம்பெற்றிருந்த ரஷித் கான், 93 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த நிலையில் ஐதராபாத் அணியிலிருந்து வெளியேறுவதாக அறிவித்தார். தற்போது ஏலத்திற்கு முன்பே ,அவருக்கும் முதல் வீரருக்கு வழங்கும் அதே தொகையை வழங்கி ரஷித் கானை அகமதாபாத் அணி சரிக் கட்டியுள்ளது. ரஷித் கானின் சுழற்பந்துவீச்சு, அந்த அணிக்கு பெரும் பலமாக அமையும்.

சுப்மான் கில்

சுப்மான் கில்

அகமதாபாத் அணி 3வது வீரராக இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான சுப்மான் கில்லை தேர்வு செய்துள்ளது.அவருக்கு 7 கோடி ரூபாயை அகமதாபாத் அணி வழங்கியுள்ளது. கொல்கத்தா அணியில் இடம்பெற்றிருந்த அவர் இனி, அகமதாபாத் அணிக்காக விளையாட உள்ளார். கொல்கத்தா அணி கில்லை 1.8 கோடி ரூபாய்க்கு 2018ஆம் ஆண்டு ஏலத்தில் எடுத்தது குறிப்பிடத்தக்கது.

53 கோடி

53 கோடி

இந்தியாவை சேர்ந்த ஒரு ஆல் ரவுண்டர், ஒரு தொடக்க ஆட்டக்காரர், ஒரு வெளிநாட்டு சுழற்பந்துவீச்சாளர் என பலமான தேர்வை அகமதாபாத் அணி ஒப்பந்தம் செய்துள்ளது. தற்போது 90 கோடி ரூபாயில், அந்த அணி 3 வீரர்களை ஒப்பந்தம் செய்துள்ளதால் ஏலத்தில் அந்த அணி 53 கோடி தான் செலவு செய்ய முடியும். அகமதாபாத் அணியின் பயிற்சியாளராக கேரி கிறிஸ்டன், ஆஷிஸ் நேஹ்ரா ஆகியோர் செயல்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Story first published: Tuesday, January 18, 2022, 20:53 [IST]
Other articles published on Jan 18, 2022
English summary
IPL 2022- Team Ahmedabad picks 3 Key Players head of Mega auction ஐபிஎல்: “3 வீரர்களில் அணியின் மொத்த பலம்” சிஎஸ்கேவுக்கு சவால் விடும் அகமதாபாத்.. யார் அவர்கள்!
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X