For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஐ.பி.எல். ஏலத்தில் எந்த அணிக்கு எவ்வளவு பணம் மிச்சம் இருக்கு..??

மும்பை: ஐ.பி.எல். 2022 ஆம் ஆண்டு சீசனை முன்னிட்டு மெகா ஏலம் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெறுகிறது.

Recommended Video

Dhoni, Kohli Take Salary Cuts for CSK and RCB | IPL 2022 Retention | OneIndia Tamil

இதற்காக அணிகள் தாங்கள் தக்க வைத்துள்ள வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில் ஒவ்வொரு அணியும் அதிகபட்சமாக வீரர்களின் ஏலத்தில் 90 கோடி ரூபாய் வரை செலவு செய்ய முடியும். ஒரு அணி 4 விரர்களை தக்க வைத்து கொண்டால், அவர்களின் 90 கோடி ரூபாய் கணக்கிலிருந்து 42 கோடி ரூபாய் பிடித்தம் செய்யப்படும். அதுவே 3 வீரர்கள் என்றால் ரூ. 33 கோடி, 2 வீரர்கள் என்றால் ரூ.24 கோடி அல்லது ஒரு வீரரை மற்றும் தக்க வைத்து கொண்டது என்றால் ரூ.14 கோடி ரூபாய் பிடித்தம் செய்யப்படும்.

ஐபிஎல்: யாரும் எதிர்பாராத முடிவு.. 3 அணிகளின் தக்கவைப்பு பட்டியல் வெளியானது.. யாருக்கெல்லாம் இடம்? ஐபிஎல்: யாரும் எதிர்பாராத முடிவு.. 3 அணிகளின் தக்கவைப்பு பட்டியல் வெளியானது.. யாருக்கெல்லாம் இடம்?

தற்போது வீரர்கள் தக்கவைக்கப்பட்டுள்ள நிலையில் ஒவ்வொரு அணிக்கும் எவ்வளவு பணம் மிச்சம் உள்ளது என்பதை தற்போது காணலாம்

பஞ்சாப் அணி

பஞ்சாப் அணி

வரும் ஐ.பி.எல். ஏலத்தில் அதிக பணம் உள்ள அணி என்ற பெருமையை பஞ்சாப் அணி பெற உள்ளது. பஞ்சாப் அணி 2 விரர்களை மட்டுமே தக்கவைத்து 16 கோடி ரூபாய் செலவு செய்துள்ளது. இதனால் அந்த அணியிடம் 72 கோடி ரூபாய் உள்ளது. இதனால் ஏலத்தில் பஞ்சாப் அணி பெரிய வீரர்களை குறிவைக்கும்

ஐதராபாத் அணி

ஐதராபாத் அணி

அதற்கு அடுத்ததாக ஐதராபாத் அணியிடம் 68 கோடி ரூபாய் பணம் உள்ளது. ஐதராபாத் அணி வில்லியம்சன், அப்துல் சமத், உம்ரான் மாலிக் என 3 வீரர்களை மட்டுமே தக்க வைத்து 22 கோடி ரூபாயை செலவு செய்துள்ளது.

ராஜஸ்தான் அணி

ராஜஸ்தான் அணி

மூன்றாவதாக ராஜஸ்தான் அணியிடம் 62 கோடி ரூபாய் வரை ஏலத்தில் செலவு செய்ய பணம் உள்ளது. அந்த அணி சாம்சன், பட்லர்,ஜெய்ஷ்வால் என 3 வீரர்களை மட்டுமே தக்கவைத்து 28 கோடி ரூபாயை செலவு செய்துள்ளது. இதனால் ராஜஸ்தான் அணியும் ஏலத்தில் புகுந்து விளையாடலாம்.

பெங்களூரு அணி

பெங்களூரு அணி

இதற்கு அடுத்ததாக பெங்களூரு அணியிடம் 57 கோடி ரூபாய் வரை உள்ளது. அந்த அணி விராட் கோலி, மேக்ஸ்வெல், சிராஜ் என 3 வீரர்களை மட்டுமே தக்கவைத்து 33 கோடி ரூபாய் வரை செலவு செய்துள்ளது. இதனால் அந்த அணியும் ஏலத்தில் முக்கிய வீரர்களுக்கு குறிவைக்கலாம்

மற்ற அணிகள்

மற்ற அணிகள்

இதனிடையே, சென்னை, மும்பை, கொல்கத்தா ஆகிய அணிகள் தலா 4 வீரர்களை தக்க வைத்துள்ளது. இதன் மூலம் இந்த 4 அணிக்கும் ஏலத்தில் 48 கோடி ரூபாய் மிச்சம் உள்ளது. டெல்லி அணி 4 வீரர்களை தக்கவைத்துள்ளது. 4வது வீரரான நோக்கியாவுக்கு 50 லட்சம் கூடுதலாக வழங்கியுள்ளதால் அந்த அணிக்கு 47.5 கோடியே மிச்சம் உள்ளது.

Story first published: Wednesday, December 1, 2021, 13:35 [IST]
Other articles published on Dec 1, 2021
English summary
PBKS thus have the highest salary purse available with INR 72 crore while Delhi Capitals have least at INR 47.50 to be used at the mega auction.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X