For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தோனியின் விக்கெட்.. தகாத வார்த்தை சொல்லி கொண்டாடிய கோலி.. கொதித்தெழுந்த ரசிகர்கள் - வீடியோ!

மும்பை: தோனியின் விக்கெட் வீழ்ந்த பிறகு விராட் கோலி தவறான வார்த்தைகளை பயன்படுத்தியது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

ஐபிஎல் தொடரின் 49வது லீக் போட்டியில் ஆர்சிபியிடம் சிஎஸ்கே அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணி 173/8 ரன்களை குவித்தது. இதன் பின்னர் வந்த சிஎஸ்கே 160/8 ரன்களை மட்டுமே எடுத்தது.

கோலி அடித்த கவர் டிரைவ் சிக்சர்.. ஆர்சிபியின் அதிவேக சாதனை.. சிஎஸ்கே வை பொளந்து கட்டிய ஆர்சிபிகோலி அடித்த கவர் டிரைவ் சிக்சர்.. ஆர்சிபியின் அதிவேக சாதனை.. சிஎஸ்கே வை பொளந்து கட்டிய ஆர்சிபி

 தோனியின் விக்கெட்

தோனியின் விக்கெட்

இதில் தோனியின் விக்கெட் தான் சர்ச்சையை கிளப்பியது. சென்னை அணி 133 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து 6வது விக்கெட்டிற்கு களமிறங்கிய தோனி வெறும் 2 ரன்களுக்கு வெளியேறினார். ஹாசல்வுட் வீசிய ஷார்ட் பாலை, தோனி டீப் மிட் விக்கெட்டில் அடிக்க முயன்றார். அப்போது ராஜத் பட்டிதர் சிறப்பாக கேட்ச் பிடித்து அசத்தினார்.

 கோலியின் செயல்

கோலியின் செயல்

இந்நிலையில் தோனி விக்கெட் வீழ்ந்த பிறகு களத்தில் இருந்த ஆர்சிபி வீரர் விராட் கோலி மிகவும் ஆக்ரோஷமாக கத்தினார். இதுமட்டுமல்லாமல் கைகளை ஓங்கி வீசி, தகாத சில வார்த்தைகளை உதிர்த்த வீடியோவும் வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் கோபமடைந்துள்ளனர்.

Recommended Video

IPL 2022: Sanga's Cricket Wrap | Dhoniயை திட்டிய Virat Kohli? | Arjun Tendulkar's Debut?|
 கொதிக்கும் ரசிகர்கள்

கொதிக்கும் ரசிகர்கள்

தோனி மீது பெரும் மரியாதை இருப்பதாக கூறும் விராட் கோலி, அவரின் விக்கெட்டிற்கு, இப்படி கடும் ஆக்ரோஷத்துடன் கத்தி கொண்டாடியது சரியல்ல என கூறி சமூக வலைதளங்களில் ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். மேலும் விராட் கோலிக்கு எதிராக ஹேஷ்டேக்குகளையும் அள்ளி வீசி வருகின்றனர்.

கோலி தரப்பு நியாயம் என்ன

தோனி களத்தில் இருந்த போது கடைசி 12 பந்துகளில் 38 ரன்கள் தேவைப்பட்டது. தற்போது தோனி நல்ல ஃபார்மில் இருப்பதால், மும்பைக்கு எதிராக வென்றது போன்று, அதிரடி காட்டி வெற்றி பெற செய்துவிடுவார். அப்படிப்பட்ட வீரரை விக்கெட் எடுத்த மகிழ்ச்சியில் தான் கோலி உணர்ச்சிவசப்பட்டு விட்டார் என விளக்கம் அளிக்கப்படுகிறது.

Story first published: Thursday, May 5, 2022, 23:45 [IST]
Other articles published on May 5, 2022
English summary
IPL 2022: Virat Kohli's aggressive celebration after Dhoni's wicket in RCB vs CSK
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X