For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தோனியை திடீரென்று பாராட்டிய சேவாக்.. சிஎஸ்கே அடுத்த கேப்டன் குறித்தும் யோசனை.. சரியான முடிவு தான்

மும்பை: ஐபிஎல் தொடரில் கேப்டன் பிரச்சினையால் சிஎஸ்கே அணி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அடுத்த கேப்டனாக யாரை நியமிக்கலாம் என்று சேவாக் யோசனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள சேவாக், சிஎஸ்கேக்கு தற்போதைய தேவை தோனி போல் அதிக காலம் இருக்க வேண்டிய கேப்டன்.

3 வீரர்களுக்கு இந்திய அணியில் வாய்ப்பு? கங்குலியே வியப்பில் கூறிய வார்த்தை தமிழக வீரரும் இருக்கிறார்3 வீரர்களுக்கு இந்திய அணியில் வாய்ப்பு? கங்குலியே வியப்பில் கூறிய வார்த்தை தமிழக வீரரும் இருக்கிறார்

ஆனால் ஜடேஜா வெறும் 8 போட்டியில் தான் கேப்டனாக நீடித்தார். இதனால் ஜடேஜாவை நியமித்து சிஎஸ்கே தவறு செய்தது.

அடுத்த கேப்டன்

அடுத்த கேப்டன்

ஜடேஜா விலகிய நிலையில், ஏற்கனவே சிஎஸ்கே அடுத்த கேப்டன் குறித்து யோசிக்க தொடங்கிவிட்டது. என்னை பொறுத்தவரை ருத்துராஜ் கெய்க்வாட் கேப்டனாக நீண்ட காலம் செயல்பட சரியான நபராக இருப்பார் என தோன்றுகிறது. ஆனால் ருத்துராஜ் இன்னும் தனது பேட்டிங்கில் நிரூபிக்க வேண்டும்.

நிரூபிக்க வேண்டும்

நிரூபிக்க வேண்டும்

குறைந்தபட்சம் 2 அல்லது 3 தொடர்களிலாவது பேட்டிங்கில் தொடர்ந்து ருத்துராஜ் தன்னை நிரூபிக்க வேண்டும். யாருக்கு வேண்டுமானாலும் ஒரு சீசன் சிறப்பாக அமையலாம். ஆனால் தொடர்ந்து 2,3 சீசன் ரன் குவிக்கும் போது தான், அவர்களது உண்மையான திறமை தெரியவரும். தோனி ஏன் நல்ல கேப்டன் என்று நாம் பாராட்டுகிறோம்.

தோனிக்கு பாராட்டு

தோனிக்கு பாராட்டு

தோனி நெருக்கடியான சூழலை கூட கூலாக கையாள்வார். முடிவை அவரே எடுப்பார். பந்துவீச்சாளர்களை சரியான நேரத்தில் மாற்றுவார். பேட்டிங்கிலும் கலக்குவார் தோனிக்கு லக்கும் கொஞ்சம் உள்ளது. ஆனால் யார் துணிச்சலாக இருக்கிறார்களோ, அவர்களுக்கு தான் லக் சாதகமாக இருக்கும். ருத்துராஜின் லக் குறித்து எனக்கு தெரியாது, ஆனால் மற்ற விஷயங்கள் உள்ளது.

ருத்துராஜ் என் சாய்ஸ்

ருத்துராஜ் என் சாய்ஸ்

ருத்துராஜ் சதம் அடித்தாலும், டக் அவுட்டானாலும் பெரியதாக முகத்தில் காட்டி கொள்ள மாட்டார். மகாராஷ்டிரா அணிக்காக கேப்டனாக செயல்பட்டுள்ளார். அந்த அனுபவம் நிச்சயம் அவருக்கு கைக்கொடுக்கும். களத்தில் அமைதியாக இருக்கிறார். இவை அனைத்துமே ருத்துராஜ்க்கு சிஎஸ்கே கேப்டனாக இருக்கும் அனைத்து தகுதிகளும் உள்ளது என்று சேவாக் தெரிவித்துள்ளார்..

Story first published: Tuesday, May 17, 2022, 22:25 [IST]
Other articles published on May 17, 2022
English summary
IPL 2022 – Virendar sehwag about CSK Future captain தோனியை திடீரென்று பாராட்டிய சேவாக்.. சிஎஸ்கே அடுத்த கேப்டனாக ருத்துராஜ் கெய்க்வாட்டை நியமிக்க யோசனை
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X