“தரையை துடைக்கும் பணி முதல் கிரிக்கெட் வரை”.. யார் இந்த ரிங்கு சிங்.. நெகிழ வைக்கும் கதை!

மும்பை: லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் சிறாப்பாக விளையாடிய ரிங்கு சிங்கின் கதை ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

IPL 2022: Rinku Singh-ன் Successful story | KKR vs LSG | Aanee's Appeal | #Cricket | OneIndia Tamil

ஐபிஎல் தொடரின் 66வது லீக் போட்டியில் கொல்கத்தா அணியை 2 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி லக்னோ அணி த்ரில் வெற்றி பெற்றது. சுலபமாக பெற வேண்டிய வெற்றியை லக்னோ அணிக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தி ரிங்கு சிங் தனி கவனம் பெற்றார்.

தடுமாறிய கொல்கத்தா

தடுமாறிய கொல்கத்தா

211 என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய கொல்கத்தா அணியில் ஓப்பனிங் வீரர்கள் வெங்கடேஷ் ஐயர் டக் அவுட், அபிஜீத் தோமர் 4 ரன்களுக்கு வெளியேறினர். இதன் பின்னர் வந்த கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 50 ரன்கள், நிதிஷ் ராணா, சாம் பில்லிங்ஸ் 36 ரன்களை குவித்தனர். எனினும் கடைசி 20 பந்துகளில் 61 ரன்கள் தேவைப்பட்டது.

ரிங்கு அதிரடி

ரிங்கு அதிரடி

அப்போது வந்த இளம் வீரர் ரிங்கு சிங், லக்னோ பந்துவீச்சை துவம்சம் செய்தார். 15 பந்துகளை சந்தித்த அவர் 4 சிக்ஸர்கள், 2 பவுண்டரி என 40 ரன்களை விளாசினார். இதனால் கொல்கத்தா அணி கடைசி 2 பந்துகளில் 3 ரன்கள் அடித்தால் போதும் என்ற நிலைக்கு சென்றுவிட்டது. ஆனால் கடைசி நேரத்தில் விக்கெட் ஆனதால் தோற்றுவிட்டது. எனினும் யார் இந்த ரிங்கு சிங் என்ற கேள்வி ரசிகர்களிடையே இருந்து வருகிது. ற

யார் இந்த ரிங்கு சிங்

யார் இந்த ரிங்கு சிங்

24 வயதாகும் ரிங்கு சிங், உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர். அவரின் தந்தை கேஸ் சிலிண்டர் டெலிவர் செய்பவராவார். 4 பேர் உடன்பிறந்தவர்கள் ஆவார்கள். கடினமான சூழலில் வளர்ந்த ரிங்கு சிங் தினமும் கடைகளில் தரையை சுத்தப்படுத்துவது போன்ற பணிகளை செய்து தனது குடும்பத்திற்கு உதவி வந்தார். மற்றொரு புறம் கிரிக்கெட் மீதான காதல் அதிகம் இருந்தது.

பரிசாக வந்த பைக்

பரிசாக வந்த பைக்

மாநில ஜூனியர் அணிக்காக விளையாடுவதற்காக வந்த பணத்தையெல்லாம் கடன்களை அடைக்கவே சரியாக இருந்துள்ளது. ஒருமுறை போட்டியில் சிறப்பாக செயல்பட்டதற்காக இருசக்கர வாகனம் பரிசாக பெற்றார். எனினும் அதனை தனது தந்தைக்கு கேஸ் சிலிண்டர் ஏற்றி செல்ல கொடுத்துவிட்டார். இப்படிப்பட்ட சூழலில் இருந்தவர் இன்று ஐபிஎல்-ஐ கலக்கி வருகிறார்.

ரிங்குவின் பதில்

ரிங்குவின் பதில்

இதுகுறித்து பேசிய அவர், ரூ.20 லட்சத்திற்கு ஏலம் போனால் போதுமானது என்று தான் நான் நினைத்திருந்தேன். ஆனால் ரூ. 80 லட்சம் கொடுத்து கொல்கத்தா அணி என்னை வாங்கியது. அதை கேட்டவுடனே நான் நினைத்தது எனது சகோதரர் மற்றும் சகோதரியின் திருமணத்திற்கு என்னால் முடிந்த உதவியை செய்ய வேண்டும் என்பது தான் எனக் கூறி நெகிழ்ச்சியடைந்தார்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
IPL 2022: Who is Rinku singh, Successful story of the power hitter in KKR vs LSG match
Story first published: Thursday, May 19, 2022, 13:25 [IST]
Other articles published on May 19, 2022
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X