For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

“பொசுக்குனு இப்படியா சொல்றது”.. சிஎஸ்கேவின் மோசமான தோல்வி.. யுவ்ராஜ் சிங் - ரெய்னா கிண்டல் - வீடியோ!

மும்பை: சிஎஸ்கே அணியின் தோல்வி குறித்து யுவ்ராஜ் சிங் கேட்ட கேள்விக்கு ரெய்னா அளித்த பதில் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

ஐபிஎல் தொடரின் 59வது லீக் போட்டியில் மும்பை அணியிடம் சிஎஸ்கே படுமோசமாக தோல்வியடைந்தது.

முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி 16 ஓவர்களில் 97 ரன்களுக்கே அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதன் பின்னர் ஆடிய மும்பை அணி 14.5 ஓவர்களில் 103 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.

அடுத்த சீசனில் சிஎஸ்கே குறிவைக்க போகும் வீரர்கள்.. மாஸான 4 பேர்.. கிடைத்தால் செம லக்அடுத்த சீசனில் சிஎஸ்கே குறிவைக்க போகும் வீரர்கள்.. மாஸான 4 பேர்.. கிடைத்தால் செம லக்

சிஎஸ்கேவின் தோல்வி

சிஎஸ்கேவின் தோல்வி

ஐபிஎல் வரலாற்றில் சிஎஸ்கே அணி மூன்றாவது முறையாக மிகக்குறைந்த ஸ்கோரை அடித்துள்ளது. இந்த 3 முறையுமே மும்பை அணிக்கு எதிராக தான் விளையாடியுள்ளது. அதுவும் இதே வான்கடே மைதானத்தில் நடந்தவை தான். 2013ம் ஆண்டு 79 ரன்கள், 2019 109 ரன்களை அடித்திருந்தது. நேற்றைய போட்டியில் தோனி மட்டும் 36 ரன்கள் அடித்து உதவாமல் இருந்திருந்தால் 97 ரன்களும் கூட வந்திருக்காது.

யுவ்ராஜ் சிங்கின் கேள்வி

யுவ்ராஜ் சிங்கின் கேள்வி

இந்நிலையில் சிஎஸ்கேவின் இந்த மோசமான தோல்விக்குறித்து முன்னாள் வீரர்கள் சுரேஷ் ரெய்னா, யுவ்ராஜ் சிங் பேசியுள்ளனர். அவர்கள் இருவரும் சேர்ந்து நேற்று இரவு கால்பந்து ஆட்டத்தை பார்க்க சென்றுள்ளனர். அங்கு ரெய்னாவிடன் சிஎஸ்கே 97 ரன்களுக்கு அவுட்டாகிவிட்டது, நீங்கள் என்ன கூற விரும்புகிறீர்கள் என யுவ்ராஜ் சிங் கிண்டலாக சிரித்துக்கொண்டே கேட்கிறார்?

Recommended Video

IPL 2022: 5 வருடத்திற்கு பிறகு முடிவுக்கு வந்த CSK, Mumbai அணிகளின் ஆதிக்கம்.. யார் காரணம்?
ரெய்னா பதில்

ரெய்னா பதில்

இந்த கேள்விக்கு சிரித்துக்கொண்டே பதிலளித்த சுரேஷ் ரெய்னா, அந்த போட்டியில் நான் ஆடவே இல்லையே, நான் ஏன் பதில் சொல்ல வேண்டும் என பதிலளித்தார். ரெய்னாவின் இந்த பதில் அவர் சிஎஸ்கேவுக்கு எவ்வளவு தேவை என்பதை உணர்த்துவதாக கூறி ரசிகர்கள் இணையத்தில் பரப்பி வருகின்றனர்.

சிஎஸ்கே செய்த தவறு

ஐபிஎல் வரலாற்றில் சென்னை அணி இதுவரை விளையாடிய 12 சீசன்களில் 2 முறை மட்டுமே லீக் சுற்றுகளிலேயே வெளியேறியுள்ளது. அந்த இரண்டு சீசனிலுமே சுரேஷ் ரெய்னா சிஎஸ்கேவில் இல்லை. மீதமுள்ள 10 சீசன்களிலும் சென்னை அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதற்கு சுரேஷ் ரெய்னா தான் முக்கிய காரணமாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Friday, May 13, 2022, 17:13 [IST]
Other articles published on May 13, 2022
English summary
Yuvraj sing, suresh raina on CSK ( சிஎஸ்கே தோல்வி குறித்து யுவ்ராஜ் சிங், சுரேஷ் ரெய்னா கிண்டல் ) மும்பை அணிக்கு எதிராக சிஎஸ்கே படுமோசமாக தோல்வியடைந்தது குறித்து யுவ்ராஜ் சிங் மற்றும் சுரேஷ் ரெய்னா கிண்டலடித்துள்ளனர்.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X