For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சிஎஸ்கே எல்லாம் ஓரம் போங்க.. மும்பை இந்தியன்ஸ் தான் அடுத்த முறை டாப் - பயிற்சியாளர் மார்க் பவுச்சர்

டர்பன் : வரும் ஐபிஎல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணி தான் டாப் அணியாக விளங்கும் என்று அந்த அணியின் புதிய பயிற்சியாளர் மார்க் பவுச்சர் தெரிவித்துள்ளார்.

தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இருந்த மார்க் பவுச்சர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இதனை அடுத்து மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பு மார்க் பவுச்சருக்கு வழங்கப்பட்டது.

மகளிர் ஐபிஎல் தொடங்கும் நாள் இதுதான்.. தயாராகும் இந்திய வீராங்கனைகள்.. வெளியான முக்கிய தகவல்! மகளிர் ஐபிஎல் தொடங்கும் நாள் இதுதான்.. தயாராகும் இந்திய வீராங்கனைகள்.. வெளியான முக்கிய தகவல்!

அனுபவம்

அனுபவம்

ஏற்கனவே அந்த பணியில் இருந்த மகேலா ஜெயவர்த்தனே MI கேப் டவுன் ,MI அபுதாபி , மும்பை இந்தியன்ஸ் ஆகிய மூன்று அணிகளுக்கும் இயக்குனராக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.இந்த நிலையில் தனது புதிய பொறுப்பு குறித்து பேசி உள்ள மார்க் பவுச்சர், நான் பயிற்சியாளராக சில ஆண்டுகள் செயல்பட்டு இருக்கிறேன். எனக்கு டி20 லீக் தொடர்களில் எப்படி பயிற்சியாளராக செயல்பட வேண்டும் என்ற அனுபவமும், சர்வதேச அனுபவமும் இருக்கிறது.

சவாலாக இருக்கும்

சவாலாக இருக்கும்

ஆனால் ஐபிஎல் கலாச்சாரம் முற்றிலும் மாறுபட்டவை

நான் வீரராக இருக்கும்போதே ஐபிஎல் தொடர் எப்படி செயல்படும் என்று எனக்கு தெரியும்.இப்போது இது எனக்கு புதிய சவால். இந்த சவாலை எதிர்நோக்கி காத்திருக்கிறேன். நான் ஐபிஎல் தொடரில் சில ஆண்டுகள் விளையாடாமல் இருந்தேன். மும்பை அணியில் உள்ள சர்வதேச வீரர்கள் பற்றி அனைவருக்கும் தெரியும்.

ஆனால் நான் இரண்டு இளம் வீரர்களின் வீடியோவை பார்த்து ஆச்சரியப்பட்டேன்.

திறமையான வீரர்கள்

திறமையான வீரர்கள்

மும்பை இந்தியன்ஸ் அணியில் திறமை வாய்ந்த இளம் வீரர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். குமார் கார்த்திகேயா என்ற வீரர் இரண்டு விதமான ஸ்டைலில் பந்து வீசுவதை காணும் போது ஆச்சரியமாக இருக்கிறது.இது போன்ற திறமை நிச்சயம் அணிக்கு முக்கியமானதாக இருக்கும். பல வீரர்களுடன் இணைந்து செயல்பட மிகவும் ஆர்வமாக இருக்கிறேன். மும்பை இந்தியன்ஸ் அணியில் ஒவ்வொரு வீரருக்கும் ஒவ்வொரு பொறுப்பு வழங்கி அவர்கள் அந்த பணியை சரியாக செய்ய நான் என் உதவியை செய்வேன்.

மும்பை அணி டாப்

மும்பை அணி டாப்

ஐ பி எல் தொடரில் கடும் அழுத்தம் இருக்கும்.அதில் தற்போது பயிற்சியாளராக காலடித்து வைப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.வரும் ஐபிஎல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணி டாப் அணியாக விளங்கும். தென் ஆப்பிரிக்காவில் நடைபெறும் புதிய எஸ்.ஏ. டி20 தொடர் மூலம் நிறைய இளம் வீரர்கள் தங்களுடைய திறமையை நிரூபிப்பார்கள்.பயிற்சியாளர்கள் ஓய்வு எடுத்துக் கொள்ளும் முறைக்கு நான் ரசிகன் கிடையாது .ஆனால் தொடர்ந்து போட்டிகளில் விளையாடிக் கொண்டிருந்தால் மனதளவில் சோர்வு ஏற்படும். அதற்காக வேண்டுமென்றால் நாம் ஓய்வு எடுத்துக் கொள்ளலாம்.

Story first published: Tuesday, December 6, 2022, 14:34 [IST]
Other articles published on Dec 6, 2022
English summary
IPL 2023 - Mumbai Indians will be on top - New Head coach Mark boucher huge statement
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X