For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சென்னைக்கு இனி இல்லை முரளி விஜய்... டெல்லியிடம் ரூ. 5 கோடிக்கு விலை போனார்!

பெங்களூர்: இதுவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக சிறப்பாக ஆடி வந்த முரளி விஜய் இனிமேல் சென்னைக்காக ஆட மாட்டார்.. மண்ணின் மைந்தரான முரளி இனிமேல் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக ஆடப் போகிறார்.

பெங்களூரில் இன்று தொடங்கிய ஐபிஎல் 7வது வீரர்கள் ஏலத்தில் அவரை டெல்லி டேர்டெவில்ஸ் அணி ரூ. 5 கோடிக்கு விலைக்கு வாங்கி விட்டது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கோப்பை வெற்றிகளில் முரளி விஜய்யின் பங்கும் பெரிதாக இருந்தது என்பது நினைவிருக்கலாம். அதேபோல ஐபிஎல் போட்டிகளில் சென்னை அணி மூலம்தான் அவர் அதிரடி வீரராகவும் திகழ்ந்து, இந்திய அணிக்குள்ளும் ஈஸியாக நுழைய முடிந்தது.

ஆனால் இனிமேல் அவருக்கு டோணி கேப்டன் இடையாது.. மாறாக டெல்லிக்கு இடம் பெயருகிறார்.

பெங்களூரில் ஏலம்

பெங்களூரில் ஏலம்

பெங்களூரில் இன்று காலை 9.30 மணியளவில் ஏலம் தொடங்கியது.

513 வீரர்கள்

513 வீரர்கள்

மொத்தம் 513 வீரர்கள் ஏலம் விடப்படுகின்றனர். ஏலத்ததை ஐபிஎல் தலைவர் ரஞ்சிப் பிஸ்வால் தொடங்கி வைத்தார்.

ஏலம் விட்ட ரிச்சர்ட் மேட்லி

ஏலம் விட்ட ரிச்சர்ட் மேட்லி

ரிட்டர்ட் மேட்லிதான் ஏலத்தை நடத்தி வருகிறார். முதலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அசைக்க முடியாத வீரராக இருந்து வந்த முரளி விஜய் ஏலம் விடப்பட்டார். அவரது அடிப்படை விலை ரூ. 2 கோடியாகும்.

ரூ. 5 கோடிக்கு விற்பனையான விஜய்

ரூ. 5 கோடிக்கு விற்பனையான விஜய்

அவரை டெல்லி டெர்டேவில்ஸ் அணி ரூ. 5 கோடிக்கு வாங்கியது.

6 போட்டிகளில் சென்னையுடன்

6 போட்டிகளில் சென்னையுடன்

சென்னை வீரரான முரளி விஜய் கடந்த 6 போட்டிகளிலும் சென்னை சூப்பர் கிங்ஸுக்காக ஆடி வந்தார். அந்த அணியின் முக்கிய வெற்றிகளில் இவருக்கும் கணிசமான பங்கு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

கெவின் பீட்டர்சனும் டெல்லிக்கே

கெவின் பீட்டர்சனும் டெல்லிக்கே

இந்த ஏலத்திலேயே கடும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியவர் கெவின் பீட்டர்சன்தான். அவரை ரூ. 9 கோடிக்கு டெல்லி வாங்கி விட்டது.

வார்னர் ஹைதராபாத்துக்கு

வார்னர் ஹைதராபாத்துக்கு

டெல்லி அணின் டேவிட் வார்னரை ரூ. 5.5. கோடிக்கு வாங்கியது ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணி.

மி்ட்சலுக்கு ரூ. 6.5 கோடி

மி்ட்சலுக்கு ரூ. 6.5 கோடி

ஆஸ்திரேலியாவின் மிட்சல் ஜான்சனை ரூ. 6.5 கோடிக்கு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு விற்கப்பட்டார்.

Story first published: Wednesday, February 12, 2014, 11:58 [IST]
Other articles published on Feb 12, 2014
English summary
The big day in this season's Indian Premier League is here. It is time for the IPL 7 Players' Auction here in Bangalore. There are 513 players who are set to go under the hammer. Follow all the action here.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X