For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அடப் பாவமே.. இவங்களை வாங்க ஒரு பயலும் இல்லையாமே...!!

பெங்களூர்: பல முன்னணி வீரர்களுக்கு ஐபிஎல் 7 ஏலத்தில் பெரும் அதிர்ச்சியே கிடைத்துள்ளது. அவர்களை வாங்க எந்த அணியும் முன்வராததே இதற்குக் காரணம்.

இந்த விலை போகாத வீரர்களில் முக்கியமானவர்கள் இலங்கையின் மஹளா ஜெயவர்த்தனே மற்றும் நியூசிலாந்தின் ராஸ் டெய்லர் ஆகியோர் ரொம்ப முக்கியமானவர்கள்.

நியூசிலாந்து தொடரின்போது இந்திய வீரர்களை அச்சுறுத்தும் வகையில் ஆடியவர் ராஸ் டெய்லர். டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டவர் ஜெயவர்த்தனே.

இப்படி பெருமைகள் இருந்தாலும் கூட இவர்களை யாருமே வாங்க முன்வராத நிலை ஏற்பட்டுள்ளது.

மஹளா ஜெயவர்த்தனே

மஹளா ஜெயவர்த்தனே

வங்கதேசத்திற்கு எதிரான சமீபத்திய தொடரில் கலக்கியவர் ஜெயவர்த்தனே. ஆனால் அது அவருக்கு ஐபிஎல் ஏலத்தில் உதவவில்லை. யாருமே அவரை இதுவரை வாங்க முன்வரவில்லை.

முத்திரை இருந்தும் என்ன புண்ணியம்

முத்திரை இருந்தும் என்ன புண்ணியம்

இத்தனைக்கும் ஜெயவர்த்தனே முத்திரை வீரராக அறிவிக்கப்பட்டவர். அவருக்கு அடிப்படை ஏலத் தொகையாக ரூ. 2 கோடி நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால் என்ன பிரயோஜனம்.. வாங்க ஆளில்லையே...

டேவிட் ஹஸ்ஸி

டேவிட் ஹஸ்ஸி

அதேபோல சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மைக் ஹஸ்ஸியின் சகோதரர் டேவிட் ஹஸ்ஸியையும் எடுக்க ஆளில்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

ராஸ் டெய்லர்

ராஸ் டெய்லர்

நியூசிலாந்து அணியின் ராஸ் டெய்லர் தற்போது நல்ல பார்மில்தான் உள்ளார். ஆனாலும் அவரை எடுக்க ஆளில்லாத நிலை.

நமன் ஓஜா

நமன் ஓஜா

இந்திய வீரர் நமன் ஓஜாவையும் வாங்க ஆளில்லை. இதேபோ ஆஸ்திரேலியாவின் மாத்யூ வேட், கிரெக் கீஸ்வெட்டர் ஆகியோருக்கும் அணி கிடைக்காத இக்கட்டான நிலை ஏற்பட்டுள்ளது.

ஏஞ்சலோ மாத்யூஸுக்கும் ஆளில்லை

ஏஞ்சலோ மாத்யூஸுக்கும் ஆளில்லை

அதேபோல இலங்கை ஆல் ரவுண்டர் ஏஞ்சலோ மாத்யூஸுக்கும் வாங்க ஆளில்லை. இவரது அடிப்படை ஏலத் தொகை ரூ. 2 கோடியாகும்.

திலகரத்னே தில்ஷன்

திலகரத்னே தில்ஷன்

இன்னொரு முக்கிய இலங்கை வீரரான திலகரத்னே தில்ஷனையும் எடுக்க ஆளில்லை.

அஸார் மஹமூத்

அஸார் மஹமூத்

பாகிஸ்தானைச் சேர்நதவரும், இங்கிலாந்தில் செட்டிலாகி விட்டவருமான அஸார் மஹமூது நல்ல வீரர். ஆனால் அவரையும் எடுக்க ஆளில்லை.

பரிதாப பிரவீன் குமார்

பரிதாப பிரவீன் குமார்

இந்திய பந்து வீச்சாளர் பிரவீன் குமாருக்கும் அணி கிடைக்கவி்ல்லை. இவரது அடிப்படைத் தொகை ரூ. 2 கோடியாகும்.

அஜந்தா மெண்டிஸ்

அஜந்தா மெண்டிஸ்

இலங்கை வீரர் அஜந்தா மெண்டிஸையும் யாரும் வாங்கவில்லை. முத்தையா முரளிதரனை விட மிகப் பெரிய சுழற்பந்து வீச்சாளராக வருவார் என்று கணிக்கப்பட்டவர் இவர். இப்போது இவரை சீந்துவார் யாருமில்லாமல் போய் விட்டது.

முரளி கார்த்திக்

முரளி கார்த்திக்

முரளி கார்த்திக் இந்த முறை யாராலும் திரும்பிப் பார்க்கப்படாத வீரராக மாறியுள்ளார். நாதன் மெக்கல்லம், ராபின் பீட்டர்சன், கேமரூன் ஒயிட் ஆகியோருக்கும் அணி கிடைக்கவில்லை.

டேரன் பிராவோ

டேரன் பிராவோ

கடந்த ஐபிஎல் வரை நல்ல பார்மில் இருந்து வந்தவரான டேரன் பிராவோ இந்த முறை யாராலும் திரும்பிப் பார்க்கப்படவில்லை. அதேபோல அலெக்ஸ் ஹேல்ஸ், மர்லான் சாமுவேல்ஸ் ஆகியோரும் விற்கப்படவில்லை.

பத்ரிநாத்

பத்ரிநாத்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய வீரராக திகழ்ந்து வந்தவரான பத்ரிநாத் இந்த முறை விற்கப்படாத நிலைக்குப் போய் விட்டார். அவரைப் போல இயான் பெல், தமிம் இக்பால், லென்டில் சிம்மன்ஸ், டிம் பெய்ன் ஆகியோரும் விற்கப்படவில்லை.

திணேஷ் ராம்தின்

திணேஷ் ராம்தின்

இதேபோல திணேஷ் ராம்தின், பிரசன்னா ஜெயவர்த்தனே, ஆண்ட்ரி பிளட்சர், டேன் விலாஸ், கெளஷல் சில்வா, லூக் ரோன்சி, ஜான்சன் சார்லஸ், ஆண்ட்ரி ருஸ்ஸல், டேன் கிறிஸ்டியன், ரவி போபாரா ஆகியோரும் விற்கப்படவில்லை.

அட.. ஆர்.பி. சிங்.. பிரட் லீ

அட.. ஆர்.பி. சிங்.. பிரட் லீ

ஆர்.பி. சிங், லூக் ரைட், பிரட் லீ, முனாப் படேல், சுலைமான் பென், ரங்கனா ஹெரத், நாதன் லியான், இம்ரான் தஹிர், சூரஜ் ரந்தீவ், ரமேஷ் பவார், பிராட் ஹாக், அகிலா தனஞ்செயா, நீல் மெக்கன்சி, கிறிஸ் லின், ஹெர்ஷெல்லி ஜிப்ஸ், பென் ரோஹ்ரர், பர்தான் பெஹர்தியான், ஹென்றி டேவிட்ஸ் ஆகியோரும் விற்கப்படவில்லை.

வெர்னான் பிளான்டர்

வெர்னான் பிளான்டர்

தென் ஆப்பிரிக்க வீரர் வெர்னான் பிளான்டரும் விற்கப்படவில்லை. இவர் தவிர மேலும், 59 வீரர்கள் இன்று விலை போகவில்லை.

Story first published: Wednesday, February 12, 2014, 18:16 [IST]
Other articles published on Feb 12, 2014
English summary
Mahela Jayawardene was the lone marquee player who went unsold in the IPL 7 Auction here on Wednesday.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X