For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அடேங்கப்பா.. ரூ. 14 கோடிக்கு விலைபோன யுவராஜ் சிங்.. இவர்தான் காஸ்ட்லி!

பெங்களூர்: புற்று நோய் தாக்கத்திலிருந்து மீண்டு மீண்டும் கிரிக்கெட் விளையாடி வரும் யுவராஜ் சிங்குக்கு திடீரென ஐபிஎல் வீரர்கள் ஏலத்தில் கடும் கிராக்கி ஏற்பட்டது. இதனால் அதிக விலைக்கு அவர் ஏலம் போயுள்ளார்.

இதுவரை ஏலம் போன வீரர்களிலேயே அவர்தான் அதிக விலைக்கு எடுக்கப்பட்டவர் ஆவார்.

யுவராஜ் சிங்கை ரூ. 14 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி.

அணி மாற்றம்

அணி மாற்றம்

யுவராஜ் சிங் இதுவரை 2 அணிகளுக்காக ஆடியுள்ளார். தற்போது 3வது அணிக்கு மாறியுள்ளார்.

ஆரம்பத்தில் பஞ்சாப்

ஆரம்பத்தில் பஞ்சாப்

ஆரம்பத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக ஆடி வந்தார் யுவராஜ் சிங். அதாவது 2008 முதல் 2010 வரை.

அடுத்து புனே வாரியர்ஸ்

அடுத்து புனே வாரியர்ஸ்

அடுத்து 2010ல் புனே வாரியர்ஸ் அணிக்கு மாறினார். அங்கு போனது முதலே அவருக்கு நேரம் சரியில்லை. அந்த அணியும் தேறவில்லை, யுவராஜுக்கும் ஏற்றம் கிடைக்கவில்லை.

தற்போது பெங்களூர்

தற்போது பெங்களூர்

இந்த நிலையில் தற்போது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு மாறியுள்ளார் யுவராஜ் சிங். அதுவும் மிகப் பெரிய விலைக்கு.

விராத் கோஹ்லி தலைமையில்

விராத் கோஹ்லி தலைமையில்

பெங்களூர் அணி விராத் கோஹ்லி தலைமையில் இயங்கி வருகிறது. அந்த அணியில் கிறிஸ் கெய்ல் என சூப்பர் வீரர்கள் உள்ளனர். இந்த நிலையில் அவர்களுடன் யுவராஜ்சிங்கும் இணைகிறார்.

மிகப் பெரிய தொகை

மிகப் பெரிய தொகை

அதிக அளவில் எதிர்பார்க்கப்பட்ட வீரர் கெவின் பீட்டர்சன்தான். ஆனால் அவரை மிஞ்சி விட்டார் யுவராஜ் சிங்.

Story first published: Wednesday, February 12, 2014, 12:09 [IST]
Other articles published on Feb 12, 2014
English summary
Yuvraj Singh turned out to be the costliest player in the opening session of IPL 7 Players' Auction. The left-hander was bought by Royal Challengers Bangalore for Rs 14 crores.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X