For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

7வது ஐ.பி.எல். : கோப்பையை வென்றது கொல்கத்தா அணி! பஞ்சாபின் ஷாகாவின் சதம் வீணானது!!

By Mathi

பெங்களூர்: 7வது ஐ.பி.எல். இறுதிப் போட்டியில் கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணியை வீழ்த்தி கோப்பையை வென்றுள்ளது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. ஐ.பி.எல். கோப்பையை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வெல்வது 2வது முறையாகும்.

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட்டின் 7-வது சீசன் போட்டிகள் கடந்த ஏப்ரல் 16-ந் தேதி தொடங்கின. பெங்களூரில் நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின.

இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. பேட்டிங்கில் களமிறங்கிய பஞ்சாப் அணி ஆட்டத்தின் துவக்கத்தில் திணறியது. ஆனால், பிற்பகுதியில் வொக்ரா மற்றும் சஹாவின் கூட்டணி அதிரடியாக கைகொடுத்தது.

தொடக்கத்தில் திணறல்

தொடக்கத்தில் திணறல்

பஞ்சாப் அணி தொடக்கம் முதலே அதிரடி இல்லாமல் குறைந்த ரன்னுடன் திணறியது. சேவாக் 7 ரன்களிலும் பெய்லி ஒரு ரன்னிலும் அவுட் ஆனார்கள். இதனையடுத்து வோக்ராவும், சஹாவும் கைகோர்த்தனர்.

சாதித்த சஹா -வோக்ரா கூட்டணி

சாதித்த சஹா -வோக்ரா கூட்டணி

10 ஓவர்கள் முடிவில் வோக்ரா 34, சஹா 15 ரன்களுடன் ஆட்டம் இழக்காமல் விளையாடினர். அதைத் தொடர்ந்து இருவரும் அதிரடி ஆட்டத்தில் இறங்கினர். சிக்சர், பவுண்ரி என நாலாபுறமும் பந்துகளை பறக்க செய்தனர்.

வோக்ரா 67 ரன்கள்

வோக்ரா 67 ரன்கள்

வோக்ரா 52 பந்துகளுக்கு 67 ரன்கள் அடித்து அவுட் ஆனார்.

டக் அவுட் ஆன மேக்ஸ்வெல்

டக் அவுட் ஆன மேக்ஸ்வெல்

இதனையடுத்து களம் இறங்கிய பஞ்சாப் அணியின் நட்சத்திர வீரர் மேக்ஸ்வெல் முதல் பந்திலே அவுட் ஆனார். சாவுலா வீசிய பந்தை அவர் அதிரடியுடன் அடித்தார். அப்போது பந்தை மோர்கல் கேட்ச் பிடித்து மேக்ஸ்வெல் ஆட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார். மேக்ஸ்வெல் வெறும் கையுடன் திரும்பினார்.

சஹாவால் சாதித்த பஞ்சாப்

சஹாவால் சாதித்த பஞ்சாப்

ஆனால் விருத்திமான் சஹா தனது அதிரடியான ஆட்டத்தை தொடர்ந்து அடித்து முதலில் திணறி வந்த பஞ்சாப் அணியை ரன்கள் குவிக்க செய்தார். சஹா 55 பந்துகளில் 115 ரன்கள் குவித்தார். மில்லர் ஒரு ரன்னுடன் களத்தில் இருந்தார்.

199 ரன்கள் குவிப்பு

199 ரன்கள் குவிப்பு

பஞ்சாப் அணி 20 ஓவர்களுக்கு 4 விக்கெட்களை இழந்து 199 ரன்கள் அடித்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு 200 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நிர்ணயம் செய்தது.

உத்தப்பா 5 ரன்கள்..

உத்தப்பா 5 ரன்கள்..

இதை அடுத்து களம் இறங்கிய கொல்கத்தா அணியில், தொடக்க வீரர் உத்தப்பா 3 பந்துகளில் ஒரு பவுண்டரியுடன் 5 ரன்களில் வெளியேறினார்.

கம்பீர் 23 ரன்கள்

கம்பீர் 23 ரன்கள்

கம்பீர் 17 பந்துகளில் 3 பவுண்டரியுடன் 23 ரன் எடுத்தார். அடுத்து வந்த பாண்டேயும் யூசுப் பதானும் அதிரடி காட்டினர்.

யூசுப் பதான்- பாண்டே அதிரடி

யூசுப் பதான்- பாண்டே அதிரடி

பதான் 22 பந்தில் 33 ரன்கள் எடுத்தார். இதில் 4 சிக்சர்கள் அடங்கும். பாண்டே 50 பந்துகளில் 6 சிக்ஸர், 7 பவுண்டரியுடன் 94 ரன் குவித்தார். இருவரும் ஆட்டம் இழந்த பின்னர் ஆட்டம் பஞ்சாப் கைகளுக்குச் சென்றது போல் இருந்தது.

பரபர கடைசி ஓவர்கள்

பரபர கடைசி ஓவர்கள்

ஆனால், வெற்றிக்கு ஒரு பந்துக்கு ஒரு ரன் என்ற நிலையில் கடைசி ஓவரை எதிர்கொண்ட சாவ்லா 5 பந்துகளில் தலா ஒரு சிக்ஸர் மற்றும் பவுண்டரியுடன் ஆட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தார்.

கடைசி ஓவரில் வெற்றி

கடைசி ஓவரில் வெற்றி

கொல்கத்தா அணி 19.3 ஓவரில் வெற்றிக்குத் தேவையான 200 ரன்களை 7 விக்கெட் இழந்து பெற்றது.

2வது முறையாக

2வது முறையாக

இதன் மூலம் 2வது முறையாக ஐபிஎல் சாம்பியன் பட்டம் வென்றது கோல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. கடந்த 2012ஆம் ஆண்டு கொல்கத்தா அணி, ஐ.பி.எல். கோப்பையைக் கைப்பற்றியிருந்தது.

பாராட்டுக்குரிய பஞ்சாப்

பாராட்டுக்குரிய பஞ்சாப்

நடப்பு ஐ.பி.எல். தொடரில் பஞ்சாப் அணி தொடக்கம் முதலே மிகச் சிறப்பாக விளையாடி வந்தது. இந்த முறை கோப்பையை வெல்லும் என்று அதிகம் எதிர்பார்க்கப்பட்ட அணியாகவும் இருந்தது. கடைசிக் போட்டியில் பரிதாபமாகத் தோற்றது.

Story first published: Monday, June 2, 2014, 10:07 [IST]
Other articles published on Jun 2, 2014
English summary
In the final of IPL 7, Kolkata Knight Riders beat Kings XI Punjab in a thrilling final to lift the IPL trophy for the second time. While the homeboy Manish Pandey scored a magical 94 in chase, it was Piyush Chawla who stole the show, game and more importantly the IPL trophy from KXIP.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X