For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

மேக்ஸ்வெல்லைப் பதம் பார்ப்பாரா 'யூஸ்ஃபுல்' பதான்... 'ஃபயர்' பறக்கும் முதல் 'குவாலிஃபயர்'- இன்று!

கொல்கத்தா: அனல் பறக்கப் போகும் ஒரு கிரிக்கெட் போட்டியை இன்று ஐபிஎல் ரசிகர்கள் பார்க்கப் போகிறார்கள். கிங்ஸ் லெவன் பஞ்சாபுக்கும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் இடையிலான முதலாவது குவாலிஃபயர் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்குத் தொடங்குகிறது.

இரு அணிகளும் அதிரிபுதிரியான வீரர்கள் இருப்பதால் போட்டியில் அனல் பறப்பது கன்பர்ம்ட் என்று ரசிகர்கள் அடித்துக் கூறுகிறார்கள்.

பஞ்சாபில் மேக்ஸ்வெல் இருக்கிறார், டேவிட் மில்லர் இருக்கிறார். பெய்லியும் இருக்கிறார். அதேபோல பந்து வீச்சிலும் பக்காவாக உள்ளது பஞ்சாப். மறுபக்கம் கொல்கத்தா அணியிலும் கம்பீர், யூசுப் பதான் போன்றோர் உள்ளனர். அதிலும் கொல்கத்தாவின் கடைசி லீக் போட்டியில் அடித்து நொறுக்கி அந்த அணியை பிளே ஆப் பிரிவுக்குள் மின்னல் வேகத்தில் கூட்டி வந்த பெருமைக்குரிய பதான் புயல் இன்னும் அதி பயங்கரமாக வீசலாம் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.

ஸ்டிராங்கான பஞ்சாப்

ஸ்டிராங்கான பஞ்சாப்

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிதான் இந்தத் தொடரில் அசைக்க முடியாத அணியாக வலம் வருகிறது. மிகக் குறைந்த தோல்விகளுடன் முதலிடத்தில் இருந்த அணி பஞ்சாப்.

தடுமாறினாலும் பட்டையைக் கிளப்பிய கொல்கத்தா

தடுமாறினாலும் பட்டையைக் கிளப்பிய கொல்கத்தா

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பிளே ஆப்புக்கு வருவது சந்தேகம் என்றுதான் ஒரு கட்டத்தில் ரசிகர்கள் கருதினர். ஆனால் தட்டுத் தடுமாறிய அந்த அணி விஸ்வரூபம் எடுத்து எதிர்ப்புகளை தவிடுபொடியாக்கி பிளே ஆப்புக்குள் நுழைந்ததோடு மட்டுமல்லாமல் 2வது இடத்தையும் பிடித்து அசத்தி விட்ட அணியாகும்.

மேக்ஸ்வெல் மிராக்கிள்

மேக்ஸ்வெல் மிராக்கிள்

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் உயர்வுக்கும், தொடர் வெற்றிக்கும் முக்கியக் காரணம், அந்த அணியின் புயல் வேக வீரர் கிளன் மேக்ஸ்வெல் என்பதில் சந்தேகமே இல்லை. அதேபோல தூண் போல தாங்கி நிற்கும் டேவிட் மில்லரும் முக்கியமான ஒரு அம்சமாகும்.

பிரித்தெடுத்து உத்தப்பா.. மேக்ஸ்வெல்லையும் முந்தினார்

பிரித்தெடுத்து உத்தப்பா.. மேக்ஸ்வெல்லையும் முந்தினார்

அதேசமயம், கொல்கத்தாவில் ராபின் உத்தப்பாவின் திடீர் எழுச்சி அந்த அணிக்கு பெரும் பூஸ்ட் ஆக அமைந்தது. ரன் குவிப்பில் பஞ்சாபின் மேக்ஸ்வெல்லையே அவர் தூக்கிச் சாப்பிட்டு விட்டார்.

யூஸ்புல் பதான்

யூஸ்புல் பதான்

யூசுப் பதான் என்று சொல்வதை ரொம்ப யூஸ்ஃபுல்லான பதான் என்றுதான் இவரைச் சொல்ல வேண்டும். கடைசிப் போட்டியில் அவர் ஆடிய கதகளி ரசிகர்கள் கண்களிலிருந்து இன்னும் போகவில்லை. 22 பந்துகளில் 72 ரன்களைக் குவித்து இவர் தனது அணியை கரை சேர்த்த விதம்.. சூப்பர்ப்.

சொந்த மண்ணில்

சொந்த மண்ணில்

இன்று நடைபெறும் குவாலிஃபயர் போட்டியில் கொல்கத்தாவில் தனது சொந்த மண்ணில் அந்த அணி சந்திப்பது அதற்கு நல்ல உற்சாகத்தைக் கொடுக்கும். உள்ளூர் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவும் அந்த அணிக்கே கிடைக்கும் என்பதால் நிச்சயம் பஞ்சாப் அணிக்கு இது மைனஸ் பாயிண்ட்தான்.

உடைத்து நொறுக்குவாரா மேக்ஸ்வெல்

உடைத்து நொறுக்குவாரா மேக்ஸ்வெல்

அதேசமயம், இந்த ஆதரவு அலையை உடைத்து அதிரிபுதிரி ஆட்டத்தைக் காட்டி பஞ்சாபைக் கரை சேர்ப்பார், இறுதிப் போட்டிக்கு எடுத்துச் செல்வார் மேக்ஸ்வெல் என்ற நம்பிக்கை பஞ்சாப் ரசிகர்களிடம் உள்ளது.

பட்... தோத்தாலும் பரவாயில்லை பாஸ்...

பட்... தோத்தாலும் பரவாயில்லை பாஸ்...

அதேசமயம் இன்றைய போட்டியில் தோல்வியுறும் அணிக்கு இன்னொரு லைஃப்லைன் உள்ளது. அதாவது எலிமினேட்டர் போட்டியில் வெல்லும் அணியுடன் இன்று தோற்கும் அணி மோதும். அதில் வெற்றி பெறும் அணிதான் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் 2வது அணியாக இருக்கும். எனவே சற்று ஆறுதலாக விளையாடலாம்.

கொல்கத்தாவின் முக்கிய வீரர்கள்

கொல்கத்தாவின் முக்கிய வீரர்கள்

ராபின் உத்தப்பா, கேப்டன் கம்பீர், யூசுப் பதான், ஷாஹிக் அல் ஹசன், மார்னி மார்க்கல், சுனில் நரீன், வினய் குமார்.

பஞ்சாபின் முக்கிய வீரர்கள்

பஞ்சாபின் முக்கிய வீரர்கள்

ஜார்ஜ் பெய்லி, ஷேவாக், மனான் வோஹ்ரா, மேக்ஸ்வெல், மில்லர், சஹா, அக்ஷார் படேல், மிட்சல் ஜான்சன், ரிஷி தவன், எல்.பாலாஜி, சந்தீப் சர்மா,

ராத்திரி 8 மணிக்கு

ராத்திரி 8 மணிக்கு

இன்று இரவு 8 மணிக்கு பஞ்சாப், கொல்கத்தா இடையிலான போட்டி ஈடன் கார்டன் மைதானத்தில் தொடங்குகிறது.

Story first published: Tuesday, May 27, 2014, 12:24 [IST]
Other articles published on May 27, 2014
English summary
The most consistent team of this season will be up against the most resilient side of the current edition when Kings XI Punjab locks horns with Kolkata Knight Riders in the first Qualifier clash of the IPL here on Tuesday.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X