For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

13 மடங்கு.. 971 வீரர்கள்.. ஏன்யா இப்படி? ஐபிஎல்-லுக்கு வாரிச் சுருட்டிக் கொண்டு ஓடி வந்த வீரர்கள்!

Recommended Video

IPL 2020: 971 players register for IPL 2020 auction

மும்பை : 2020 ஐபிஎல் தொடருக்கான ஏலம் வரும் டிசம்பர் 19 அன்று கொல்கத்தாவில் நடைபெற உள்ளது.

இந்த ஏலத்தில் பங்கேற்க 971 வீரர்கள் பதிவு செய்துள்ளனர். குறைந்தபட்சம் ஐபிஎல் அணிகளில் 73 இடங்கள் மட்டுமே காலியாக உள்ள நிலையில், அதைக் காட்டிலும் 13 மடங்கு வீரர்கள் ஏலத்தில் பங்கேற்க பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஏலங்களை காட்டிலும் இந்த முறை ஐபிஎல் ஏலத்திற்கு பெரிய அளவில் போட்டி உள்ளது.

அதிக பணம்

அதிக பணம்

இந்த முறை ஐபிஎல் அணிகள் அதிக வீரர்களை ஏலத்தில் எடுக்க உள்ளதாலும், ஒவ்வொரு அணியிடமும் அதிக பணம் இருப்பதாலும் ஏலத்தில் கடும் போட்டி இருக்கும் என கருதப்படுகிறது.

ஒட்டுமொத்த வீரர்கள்

ஒட்டுமொத்த வீரர்கள்

2௦20 ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்க 971 வீரர்கள் தங்கள் பெயர்களை கொடுத்துள்ளனர். அதில் 713 வீரர்கள் இந்தியர்கள். 258 வீரர்கள் வெளிநாட்டினர். ஐசிசி உறுப்பினர் அல்லாத நாட்டில் இருந்து 2 வீரர்களும் வெளிநாட்டினர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

சர்வதேச வீரர்கள்

சர்வதேச வீரர்கள்

இந்த 971 வீரர்களில் 215 வீரர்கள் சர்வதேச போட்டிகளில் ஆடிய வீரர்கள். 754 வீரர்கள் சர்வதேச போட்டிகளில் ஆடாத வீரர்கள். மீதமுள்ள இருவர் ஐசிசி உறுப்பினர் அல்லாத நாட்டில் இருந்து இடம் பெற்றவர்கள்.

இந்திய வீரர்கள்

இந்திய வீரர்கள்

713 இந்திய வீரர்களில் 19 வீரர்கள் மட்டுமே இந்திய அணிக்காக ஆடிய வீரர்கள். மீதமுள்ள 634 வீரர்கள் இந்திய அணியில் இடம் பெறாத உள்ளூர் வீரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச அனுபவம் கொண்ட வீரர்கள்

சர்வதேச அனுபவம் கொண்ட வீரர்கள்

வெளிநாட்டினரில் பெரும்பாலான வீரர்கள் சர்வதேச போட்டிகளில் ஆடியவர்களே. ஏலத்தில் இடம் பெற்றுள்ள 196 வெளிநாட்டு வீரர்கள் சர்வதேச போட்டிகளில் ஆடியவர்கள். 60 வீரர்கள் மட்டுமே சர்வதேச போட்டிகளில் பங்கேற்காத வீரர்கள்.

வெளிநாட்டு வீரர்கள்

வெளிநாட்டு வீரர்கள்

வெளிநாட்டு வீரர்களில் அதிகபட்சமாக 55 ஆஸ்திரேலிய வீரர்கள் தங்கள் பெயர்களை கொடுத்துள்ளனர். 54 தென்னாப்பிரிக்க வீரர்களும், 39 இலங்கை வீரர்களும், 34 வெஸ்ட் இண்டீஸ் வீரர்களும், 22 இங்கிலாந்து வீரர்களும், 24 நியூசிலாந்து வீரர்களும் தங்கள் பெயர்களை அளித்துள்ளனர்.

இங்கிலாந்து வீரர்கள்

இங்கிலாந்து வீரர்கள்

வழக்கம் போல இந்த ஆண்டும் வெஸ்ட் இண்டீஸ் வீரர்களுக்கு ஐபிஎல் அணிகள் இடையே அதிக போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முறை அதிரடிக்கு பெயர் போன இங்கிலாந்து வீரர்களுக்கும் அதிக போட்டி இருக்கும் என கூறப்படுகிறது.

ஆப்கானிஸ்தான் வீரர்கள்

ஆப்கானிஸ்தான் வீரர்கள்

ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து கடந்த முறை ரஷித் கான், முஜீப் உர் ரஹ்மான், முகமது நபி மட்டுமே ஐபிஎல் தொடரில் ஆடி இருந்த நிலையில், ஐபிஎல் தொடரில் அவர்களுக்கு கிடைத்த புகழை அடுத்து 19 ஆப்கானிஸ்தான் வீரர்கள் ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்க பெயர் கொடுத்துள்ளனர்.

ஏலத்தில் பாட் கம்மின்ஸ்

ஏலத்தில் பாட் கம்மின்ஸ்

2019இல் டெஸ்ட் போட்டிகள் மட்டுமில்லாது அனைத்து வகையான போட்டிகளிலும் கலக்கி வரும் ஆஸ்திரேலியாவின் அனுபவ வேகப் பந்துவீச்சாளர் பாட் கம்மின்ஸ் இந்த முறை ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்க பெயர் அளித்துள்ளது முக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது.

மோகம் குறையவில்லை

மோகம் குறையவில்லை

73 இடங்கள் மட்டுமே நிரப்ப வேண்டிய நிலையில் ஐபிஎல் அணிகள் இருக்கின்றன. ஆனால், 971 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். வீரர்கள் இடையே ஐபிஎல்-லுக்கான மோகம் குறையவில்லை என்பதையே இது காட்டுகிறது.

Story first published: Tuesday, December 3, 2019, 12:45 [IST]
Other articles published on Dec 3, 2019
English summary
IPL auction 2020 : 971 players register for 2020 IPL auction while only 73 spots to be filled by the IPL teams.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X