For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பானிபூரி விற்று.. தங்க இடம் இல்லாமல் தவித்து.. ஐபிஎல்-இல் கோடீஸ்வரன் ஆன இளம் வீரர்!

Recommended Video

பானிபூரி விற்று கஷ்டம் ... ஐபிஎல்-இல் கோடீஸ்வரன் ஆன இளம் வீரர்!

கொல்கத்தா : மும்பையை சேர்ந்த இளம் வீரர் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் வாழ்க்கையில் உணவுக்கே சிரமப்பட்டாலும், கிரிக்கெட் வீரராக வேண்டும் என்ற வெறியில் இருந்தவர்.

அவரது விடா முயற்சி இன்று அவரை கோடீஸ்வரனாக மாற்றி இருக்கிறது. அத்துடன் அவரது கனவான கிரிக்கெட்டிலும் அவர் அடுத்த நிலைக்கு சென்று இருக்கிறார்.

15 மடங்கு அதிக விலை கொடுத்து ஹெட்மயரை வாங்கிய டெல்லி கேபிடல்ஸ்15 மடங்கு அதிக விலை கொடுத்து ஹெட்மயரை வாங்கிய டெல்லி கேபிடல்ஸ்

தீராத காதல்

தீராத காதல்

யாஷஸ்வி ஜெய்ஸ்வால் உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர். எனினும், கிரிக்கெட் மீதும், சச்சின் மீதும் கொண்ட தீராத காதல் காரணமாக தான் ஒரு கிரிக்கெட் வீரனாக வேண்டும் என்ற ஆசையில் தந்தையுடன் மும்பை வந்தார்.

அந்த ஆசை

அந்த ஆசை

மும்பையில் கிரிக்கெட் பயிற்சி பெற விரும்பினார் அவர். அதற்காக தந்தையுடன் மும்பை வந்தார். ஆனால், தெரியாத ஊரில் அடுத்த வேளை உணவுக்கே கஷ்டம் என்ற நிலையில், அவரது தந்தை சில நாட்களில் உத்தரபிரதேசத்திற்கு திரும்பினார்.

மும்பை

மும்பை

ஆனால், கிரிக்கெட் மீது இருந்த காதலை விட தயாராக இல்லாத ஜெய்ஸ்வால், மும்பையிலேயே தனியாக இருந்தார். தங்க இடம் இல்லை. அடுத்த வேளை உணவுக்கு வழியில்லை.

தங்க இடம் இல்லை

தங்க இடம் இல்லை

பானி பூரி கடையில் மாலை நேரத்தில் வேலைக்கு சேர்ந்த அவர், பகலில் கிரிக்கெட் பயிற்சி பெற்று வந்தார். காசு கொடுத்து அறை வாடகைக்கு எடுக்க முடியாததால் அந்த மைதானத்திலேயே தங்கினார்.

பரிசாக கிடைத்த கூடாரம்

பரிசாக கிடைத்த கூடாரம்

பயிற்சியாளர் ஒருவர் ஒரு உள்ளூர் போட்டியில் சிறப்பாக ஆடினால் ஒரு கூடாரம் ஏற்பாடு செய்து தருவதாகக் கூற, அந்தப் போட்டியில் சிறப்பாக ஆடி தனக்கு தங்க ஒரு கூடாரத்தை ஏற்படுத்திக் கொண்டார் ஜெய்ஸ்வால்.

இரட்டை சதம் அடித்தார்

இரட்டை சதம் அடித்தார்

அவரது விளையாட்டைக் கண்டு சிலர் அவருக்கு பொருள் உதவி செய்ய, வேகமாக வளர்ந்த ஜெய்ஸ்வால் சில வாரங்கள் முன்பு நடந்த விஜய் ஹசாரே தொடரில் இரட்டை சதம் அடித்து தனக்கென ஒரு அடையாளத்தை பெற்றார்.

ஜெய்ஸ்வால் சாதனை

ஜெய்ஸ்வால் சாதனை

மிக இளம் வயதில் லிஸ்ட் ஏ போட்டிகளில் இரட்டை சதம் அடித்த வீரர் என்ற சாதனையை செய்தார் ஜெய்ஸ்வால். அதை தொடர்ந்து இந்தியா அண்டர் 19 அணியில் இடம் பெற்றார்.

2.40 கோடிக்கு வாங்கிய ராஜஸ்தான்

2.40 கோடிக்கு வாங்கிய ராஜஸ்தான்

தற்போது ஐபிஎல் ஏலத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் 2.40 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டார் ஜெய்ஸ்வால். இது மிகப் பெரிய திருப்புமுனையாக மாறி உள்ளது.

சிறந்த வாய்ப்பு

சிறந்த வாய்ப்பு

ஒருவேளை ஐபிஎல் போட்டிகளில் களமிறங்கும் வாய்ப்பு ஜெய்ஸ்வால்-க்கு கிடைக்காமல் போனாலும், சர்வதேச அளவில் தலைசிறந்து விளங்கும் ஸ்டீவ் ஸ்மித், பென் ஸ்டோக்ஸ், ஆர்ச்சர் போன்ற வீரர்களை அருகே சந்தித்து அவர்களின் அனுபவங்களை கற்றுக் கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும்.

Story first published: Friday, December 20, 2019, 11:40 [IST]
Other articles published on Dec 20, 2019
English summary
IPL Auction 2020 : Yashasvi Jaiswal bagged a fantastic IPL deal with Rajasthan Royals
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X