For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இவர்கள் எல்லாம் தேவைதானா... ஐபிஎல் ஏலத்தில் எடுத்திருக்ககூடாத 5 வீரர்கள்

சென்னை: ஐபிஎல் ஏலத்தில் அணிகளுக்கு தேவையில்லாத , ஏலம் எடுத்திருக்கப்படக்கூடாத 5 வீரர்கள் கணிக்கப்பட்டுள்ளது.

ஐபில் 14வது சீசனுக்கான வீரர்கள் ஏலம் கடந்த 18ம் தேதி நடந்து முடிந்தது. இதில் நட்சத்திர வீரர்கள் பலர் அணிகளால் கண்டுகொள்ளப்படவில்லை.

6 ரன்கள்தான்... பெவிலியனுக்கு திரும்பிய கேப்டன்... அறிமுக போட்டியில் அக்சர் அபாரம்! 6 ரன்கள்தான்... பெவிலியனுக்கு திரும்பிய கேப்டன்... அறிமுக போட்டியில் அக்சர் அபாரம்!

ஆனால் அணிகளுக்கு தேவைப்படாத, ஏலம் எடுத்திருக்கவே கூடாத 5 வீரர்களை ரசிகர்கள் கணித்துள்ளனர்.

நெகி

நெகி

பவன் நெகி 2016ம் ஆண்டு அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட இந்திய வீரர் ஆகும். டெல்லி அணி ரூ.8.5 கோடிக்கு எடுத்தது. ஆனால் அவர் அந்தாண்டு 11 போட்டிகளில் ஆடி 119 ரன்களே எடுத்தார். இவர் கடைசியாக 2018ல் கொல்கத்தா அணிக்கு 50 லட்சத்திற்கு போனதே பேசுப்பொருள் ஆனது. ஆனால் இந்த முறை ஆர்.சி.பி அணி எடுத்துள்ளது. அவர் எப்படியும் பென்ச்சில் தான் இருப்பார் என தெரிகிறது.

தேவைப்படாத கருண் நாயர்

தேவைப்படாத கருண் நாயர்

கடந்த ஆண்டு பஞ்சாப் அணிக்காக ஆடிய கருண் நாயர் 4 போட்டிகளில் ஆடி 16 ரன் மட்டுமே எடுத்தார். இந்த முறை அவரை கொல்கத்தா அணி ஆரம்ப தொகையான ரூ.50 லட்சத்திற்கு எடுத்துள்ளது. கொல்கத்தா அணியில் ஏற்கனவே சுப்மன் கில், திருப்பாதி, ரானா உள்ளிட்டோர் உள்ளதால் கருண் நாயர் பேட்டிங்கில் தேவைப்பட மாட்டார்.

சட்டீஸ்வர் புஜாரா

சட்டீஸ்வர் புஜாரா

புஜரா இந்தியாவின் சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன் ஆவார். இவர் கடைசியாக கடந்த 2014ம் ஆண்டு பஞ்சாப் அணியில் தொடக்க வீரராக களமிறங்கி திணறினார். இந்நிலையில் சென்னை அணிக்கு இந்த முறை எப்படி தேவைப்படுவார் என்பதில் குழப்பம் நீடிக்கிறது. இவருக்கு வாய்ப்பு வழங்கினால் டி20க்காக தயாரான ருத்ராஜ், ஜகதீசன், உள்ளிட்ட இளம் வீரர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட வேண்டும்.

சச்சின் மகன்

சச்சின் மகன்

சையது முஷ்டக் அலி கோப்பையில் சிறப்பாக ஆடிய அர்ஜுன் டெண்டுல்கர் மும்பை அணியால் அறிமுகமாகியுள்ளார். மும்பை அணியில் ஏற்கனவே பும்ரா, ஹர்த்திக் பாண்டியா, க்ருணால் பாண்டியா போன்ற சிறந்த பவுலர்கள் உள்ளதால் அர்ஜுனுக்கு வாய்ப்பு கிடைக்காது. அப்படி கிடைத்தால் நெப்போட்டிசம் குற்றச்சாட்டு எழும் என்பதில் சந்தேகம் இல்லை.

ஜாதவ்

ஜாதவ்

கடந்த சீசனில் கேதர் ஜாதவின் ஆட்டம் கடும் விமர்சனங்களுக்கு உள்ளானது. இந்த முறை இவரை ஐதராபாத் அணி ரூ.2 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது. அணியில் ஏற்கனவே கேன் வில்லியம்சன், மணிஷ் பாண்டே, விஜய் சங்கர், ப்ரியம் கார்க், அபிஷேக் சர்மா உள்ளிட்ட சிறந்த வீரர்கள் உள்ளதால் ஜாதவ் தேவைப்படமாட்டார்.

Story first published: Sunday, February 21, 2021, 8:19 [IST]
Other articles published on Feb 21, 2021
English summary
IPL Auction 2021 : 5 Indian Players Who Shouldn’t Have Been Picked in Teams
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X