4 நாள் லேட்.. இது மட்டும் கொஞ்சம் சரியா நடந்து இருந்தா.. கதையே வேற.. அஸ்வின் சொன்ன அந்த விஷயம்!

சென்னை: நியூசிலாந்து இளம் வீரர் டேவன் கான்வாயை தமிழக வீரர் அஸ்வின் வித்தியாசமாக பாராட்டி இருக்கிறார்.

இந்தியா இங்கிலாந்து இடையிலான கிரிக்கெட் தொடர் நடந்து வரும் நிலையில் நேற்று ஆஸ்திரேலியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் டி 20 போட்டி நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலிய அணியில் ஆடும் ஆர்சிபி வீரர்கள் யாரும் நேற்று சரியாக ஆடவில்லை.

6 ரன்கள்தான்... பெவிலியனுக்கு திரும்பிய கேப்டன்... அறிமுக போட்டியில் அக்சர் அபாரம்!

கேன் ரிச்சர்ட்ஸன், மேக்ஸ்வெல், சாம்பா, ஜோஸ் பிளிப் என்ற ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆர்சிபி வீரர்கள் எல்லோரும் சொதப்பினார்கள். இது ஐபிஎல் ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.

ஆர்சிபி

ஆர்சிபி

இன்னொரு பக்கம் ஆர்சிபி அணியால் 15 கோடி ரூபாய் கொடுத்து எடுக்கப்பட்ட நியூசிலாந்து வீரர் கைலி ஜெமிசனும் நேற்று மிக மோசமாக பவுலிங் செய்தார். நேற்று இவர்களின் ஆட்டம் விமர்சனம் செய்யப்பட்ட நிலையில் இளம் வீரர் டேவன் கான்வாய் மட்டும் சிறப்பாக ஆடினார். நியூசிலாந்து அணியில் சிறப்பாக ஆடிய டேவன் கான்வாய் 99 ரன்கள் எடுத்து அதிரடி காட்டினார்.

பேட்டிங்

பேட்டிங்

இதனால் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 5 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் எடுத்தது. அதன்பின் ஆடிய ஆஸ்திரேலிய அணி 17.3 ஓவரில் 10 விக்கெட்டையும் இழந்து 131 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. டேவன் கான்வாய்தான் நேற்று நியூசிலாந்து அணி வெற்றிபெற காரணமாக இருந்தார்.

பாராட்டு

பாராட்டு

இந்த நிலையில் நியூசிலாந்து இளம் வீரர் டேவன் கான்வாயை தமிழக வீரர் அஸ்வின் வித்தியாசமாக பாராட்டி இருக்கிறார். அஸ்வின் தனது பேட்டியில், ஐபிஎல் ஏலம் முடிந்து நான்கு நாட்களுக்கு பின் இப்படி ஆட்டத்தை டேவன் கான்வாய் ஆடி இருக்கிறார். இது முன்பே நடந்து இருந்தால் ஐபிஎல் ஏலத்தில் கதையே வேறு மாதிரி மாறி இருக்கும், என்று அஸ்வின் கூறியுள்ளார்.

டேவன் கான்வாய்

டேவன் கான்வாய்

இவரை பல கோடிக்கு எடுத்து இருப்பார்கள் என்று பொருள்படும் வகையில் அஸ்வின் இப்படி குறிப்பிட்டு உள்ளார்.

டேவன் கான்வாய் கடந்த ஒரு வருடமாக மிகவும் நன்றாக ஆடி வருகிறார். கடைசியாக ஆடிய பல டி 20 போட்டிகளில் இவர் 90+ ரன்களை எடுத்துள்ளார். டி 20 உலகக் கோப்பை தொடரில் நியூசிலாந்து அணியின் துருப்பு சீட்டு இவர்தான் என்கிறார்கள் .

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
IPL Auction 2021: Ashwin appreciates Devon Conway batting in the Aus vs Nz match yesterday.
Story first published: Tuesday, February 23, 2021, 18:10 [IST]
Other articles published on Feb 23, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X