இல்லை கூடவே கூடாது.. 8 ஐபிஎல் அணிகளுக்கும் ஆஸி. கிரிக்கெட் வாரியம் வைத்தே செக்.. பரபர இ மெயில்

சென்னை: ஐபிஎல் 2021 தொடர் தொடங்க உள்ள நிலையில் 8 ஐபிஎல் அணிகளுக்கும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் முக்கியமான கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளது.

2021 ஐபிஎல் ஏலம் முடிந்துள்ள நிலையில் ஒவ்வொரு அணியும் தங்கள் வீரர்களை ஐபிஎல் தொடருக்கு தயார் செய்யும் பணியில் இறங்கி உள்ளது. இன்னும் டிரேடிங் செயல்பாடு நடைமுறையில்தான் உள்ளது.

6 ரன்கள்தான்... பெவிலியனுக்கு திரும்பிய கேப்டன்... அறிமுக போட்டியில் அக்சர் அபாரம்!

வரும் ஏப்ரல் மாதம் இரண்டாம் வாரம் இந்த தொடர் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முறை இந்தியாவை சேர்ந்த இளம் வீரர்கள் பலர் ஐபிஎல் தொடரில் ஆதிக்கம் செலுத்த வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது .

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா

இந்த ஐபிஎல் 2021 தொடர் தொடங்க உள்ள நிலையில் 8 ஐபிஎல் அணிகளுக்கும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் முக்கியமான கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளது. அதில் ஐபிஎல்லில் ஆடும் ஆஸ்திரேலிய வீரர்களுக்கு அவர்களின் வாரியம் கட்டுப்பாட்டை விதித்து உள்ளது. பிசிசிஐ இந்த கட்டுப்பாடுகளை ஏற்றுக்கொண்டது.

விளம்பரம்

விளம்பரம்

ஆஸி. விதித்துள்ள கட்டுப்பாட்டின்படி அவர்கள் நாட்டு வீரர்கள் மதுபானம், போதைப்பொருள், அவசர உணவு, சூதாட்டம் போன்ற விளம்பரங்களில் நடிக்க கூடாது. அந்த அணியை இது போன்ற நிறுவனங்கள் ஸ்பான்சர் செய்து இருந்தாலும் அதை ஆஸி வீரர்கள் ஜெர்சியில் பயன்படுத்த கூடாது. இவர்களுக்கு மட்டும் இதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்.

விலக்கு

விலக்கு

அணியில் இருக்கும் மற்ற வீரர்கள் இந்த விளம்பரத்தில் நடிப்பதோ, ஜெர்சியில் இந்த நிறுவனங்களின் பெயர்களை பயன்படுத்துவது தவறு இல்லை. ஆனால் ஆஸி வீரர்கள் இதை பயன்படுத்த கூடாது என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது. ஆஸ்திரேலியாவின் இந்த கோரிக்கையை பிசிசிஐ ஏற்றுக்கொண்டுள்ளது.

 பிசிசிஐ கடிதம்

பிசிசிஐ கடிதம்

இது தொடர்பாக 8 அணிகளுக்கும் தற்போது பிசிசிஐ கடிதம் எழுதியுள்ளது. இந்திய கிரிக்கெட் வீரர்களே இது போன்ற விளம்பரங்களில் நடிக்க மாட்டார்கள். அதனால் ஆஸ்திரேலியாவின் இந்த கோரிக்கை ஐபிஎல் போட்டிகளில் எந்த விதமான பாதிப்பையும் ஏற்படுத்தாது என்கிறார்கள்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
IPL Auction 2021: Australian cricket players can't appear in the few advertisements according to CA rules.
Story first published: Tuesday, February 23, 2021, 17:15 [IST]
Other articles published on Feb 23, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X