For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

மீண்டும் 32+ஆ.. இவங்க எல்லாம் எதுக்கு?.. சிஎஸ்கே முடிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்

சென்னை: இன்று நடைபெற்ற ஐபிஎல் ஏலத்திலும் சி.எஸ்.கே வயதானவர்களுக்கு தான் முன்னுரிமை வழங்குவதாகதான் விமர்சனங்கள் எழுந்துள்ளது.

14வது சீசன் ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலம் இன்று நடைபெற்றது. அனைத்து அணிகளும் இளம் வீரர்களை தேடிய நிலையில் சென்னை அணி மட்டும் வயதானவர்களை குறிவைத்தது.

6 ரன்கள்தான்... பெவிலியனுக்கு திரும்பிய கேப்டன்... அறிமுக போட்டியில் அக்சர் அபாரம்! 6 ரன்கள்தான்... பெவிலியனுக்கு திரும்பிய கேப்டன்... அறிமுக போட்டியில் அக்சர் அபாரம்!

இதனால் கடுப்பான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர்.

சி.எஸ்.கே

சி.எஸ்.கே

ஐபிஎல் தொடரில் மிக முக்கியமான அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் மீது வயதான அணி என்ற விமர்சனம் உள்ளது. அந்த அணி வீரர்கள் பெரும்பாலோனோர் 30 வயதை கடந்தவர்களாகவே இருப்பார்கள்.

மூத்த வீரர்கள்

மூத்த வீரர்கள்

ரசிகர்களின் விமர்சனங்களுக்கு முற்றுப்பள்ளி வைக்கும் விதமாக கேதர் ஜாதவ், ஹர்பஜன் உள்ளிட்டோர் அணியில் இருந்து கலட்டி விடப்பட்டனர். இதனால் அவர்களுக்கு பதிலாக இளம் படையை சென்னை கொண்டு வரும் என எதிர்பார்க்கப்பட்டது.

மீண்டும் மூத்தவர்கள்

மீண்டும் மூத்தவர்கள்

சென்னை அணியில் ஏற்கனவே தோனி, ஜடேஜா, ரெய்னா, டூப்ளசீஸ், அம்பத்தி ராயுடு உள்ளிட்ட மூத்த வீரர்கள் உள்ளனர். இந்நிலையில் இன்று நடைபெற்ற 2021 ஐபிஎல் ஏலத்தில் சென்னை அணி கிருஷ்ணப்பா கௌதம், மௌயின் அலி, புஜாரா ஆகியோரை ஏலத்தில் எடுத்துள்ளது. இவர்கள் மூவருமே 32 வயதுக்கு மேலானவர்கள் ஆகும்.

விமர்சனம்

விமர்சனம்

சி.எஸ்.கே ஏலம் குறித்து கொந்தளித்த ரசிகர்கள் இணையத்தில் மீம்களை அள்ளி தெரிக்கவிட்டு வருகின்றனர். குறிப்பாக புஜாராவை ஏன் அணியில் எடுத்தார்கள் என புலம்பி வருகிறார். எனினும் அனுபவ வீரர்களை கொண்டு தோனி சி.எஸ்.கேவை மீட்டு கொண்டு வருவாரா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Story first published: Friday, February 19, 2021, 8:28 [IST]
Other articles published on Feb 19, 2021
English summary
IPL Auction 2021: CSK Again gone for 32+... fans trolling on social media
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X