For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

IPL மெகா ஏலம்.. ஒரே இரவில் ஓபாமாவான வீரர்கள்..! லட்சத்திலிருந்து கோடிகளுக்கு சென்றவர்கள் பட்டியல்..

பெங்களூரு: ஐபிஎல் விளையாட்டு தொடர் மூலம் ஒரு வேளை சாப்பிட்டிற்காக கஷ்டப்பட்ட வீரர்கள், பலர் பணக்காரர்களான கதை உண்டு

Recommended Video

IPL Mega Auction | லட்சத்திலிருந்து கோடிகளுக்கு சென்றவர்கள் பட்டியல் | Oneindia Tamil

அது இம்முறை ஐபிஎல் மெகா ஏலத்திலும் நடைபெற்றுள்ளது. ஆரம்ப விலையான 20 அல்லது 40 லட்சத்திலிருந்து பல வீரர்கள் கோடி கணக்கில் விலை போய் உள்ளனர்.

நடிகர் வடிவேலு சொல்வது போல் அப்படி ஒரே இரவில் ஓபாமாவான
வீரர்களை தான் நாம் தற்போது காண உள்ளோம்.

அபிஷேக் சர்மா

அபிஷேக் சர்மா

2018 U19 உலககோப்பையில் விளையாடிய அதிரடி ஆல் ரவுண்டர் அபிஷேக் சர்மா. சுழற்பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் அசத்துவார். ஏற்கனவே ஐபிஎல் தொடரில் ஐதராபாத் அணிக்காக விளையாடியுள்ளார். இந்த நிலையில், 20 லட்சம் அடிப்படை தொகை கொண்ட அபிஷேக் சர்மாவை வாங்க கடும் போட்டி நிலவியது. இறுதியில் அபிஷேக் சர்மாவை ஆறரை கோடிக்கு ஐதராபாத் அணி ஏலம் எடுத்தது.

கார்த்திக் தியாகி

கார்த்திக் தியாகி

2020 அண்டர் 19 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் விளையாடிய வேகப்பந்துவீச்சாளர் கார்த்திக் தியாகியை 20 லட்சம் கொடுத்து ராஜஸ்தான் அணி, கடந்த ஐபிஎல் தொடரில் எடுத்தது. தற்போதைய ஏலத்தில் 20 லட்சம் ரூபாய் அடிப்படை விலையாக கொண்ட இவரை 4 கோடி ரூபாய் கொடுத்து ஏலத்தில் எடுத்தது ஐதராபாத் அணி.

அனுஜ் ராவத்

அனுஜ் ராவத்

டெல்லி அணிக்காக விளையாடி வரும் 23 வயதான அனுஜ் ராவத், இடதுகை பேட்ஸ்மேன் மற்றும் விக்கெட் கப்பர் ஆவார். விஜய் ஹசாரரே, ரஞ்சி கோப்பை, சையது முஸ்தாக் கோப்பை போன்ற தொடரில் விளையாடியவர் அனுஜ் ராவத்தை 20 லட்சம் ரூபாய்க்கு கடந்த ஏலத்தில் ராஜஸ்தான் எடுத்தது. தற்போது அதே அடிப்படை விலையில் ஏலத்துக்கு வந்த அனுஜை பெங்களூரு அணி 3.4 கோடி ரூபாய்க்கு வாங்கியது

பராக்

பராக்

2018 அண்டர் 19 உலகக் கோப்பையில் விளையாடிய ரியான் பாராக் அசாம் மாநிலத்தை சேர்ந்தவர். இவரை கடந்த 2019ஆம் ஆண்டு 20 லட்சம் ரூபாய் கொடுத்து ராஜஸ்தான் அணி வாங்கியது. ஐபிஎல் தொடரில் அரைசதம் அடித்த இளம் வீரர் என்ற பெருமையை பெற்ற பராக், கடந்த சீசனில் சரியாக விளையாடவில்லை. எனினும் அவரை தற்போதைய ஏலத்தில் 3 கோடியே 80 லட்சம் ருபாய் கொடுத்து ராஜஸ்தான் அணி ஏலம் எடுத்துள்ளது.

ராஜ் பவா

ராஜ் பவா

அண்டர் 19 கிரிக்கெட்டில் அதிவேக சதம், ஒரு போட்டியில் அதிக ரன்கள் அடித்த வீரர் மற்றும் இறுதிபோட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற பல சாதனையை படைத்த ராஜ் பவாவுக்கு இந்த ஏலத்தில் அடிப்படை விலையாக 20 லட்சம் நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் அதை விட 10 மடங்கு விலை உயர்ந்து 2 கோடி ரூபாய்க்கு பஞ்சாப் அணி வாங்கியது.

ஷாரூக்கான்

ஷாரூக்கான்

தமிழக வீரர் ஷாரூக்கான் ஏற்கனவே கடந்த ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணி அவரை 5 கோடிக்கு மேல் எடுத்தது. இந்த நிலையில், தற்போதைய ஏலத்தில் அவர் தனது அடிப்படை விலையை 40 லட்சமாக தான் நிர்ணயித்தார். அவருக்கு எதிர்பார்த்தது போல் கடும் போட்டி நிலவ, அவரை 9 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது ஐதராபாத் அணி

Story first published: Monday, February 14, 2022, 8:55 [IST]
Other articles published on Feb 14, 2022
English summary
IPL Auction 2022 List of Young Players who got higher amount than base price IPL மெகா ஏலம்.. ஒரே இரவில் ஓபாமாவான வீரர்கள்..! லட்சத்திலிருந்து கோடிகளுக்கு சென்றவர்கள் பட்டியல்..
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X