For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

நிறைவுற்றது ஐபிஎல் மெகா ஏலம் - வீரர்களை அள்ளிய அணிகள்.. சிஎஸ்கே படு மாஸ்!

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த ஐபிஎல் 2022 மெகா ஏலம் இன்று பெங்களூருவில் தொடங்கவுள்ளது.

10 அணிகள் பங்கேற்கும் இந்த மெகா ஏலத்தில் மொத்தமாக 590 வீரர்கள் ஏலம் விடப்பட்டுள்ளனர்.

ஒவ்வொரு அணியும் அதிகபட்சமாக தலா 4 வீரர்களை மட்டுமே தக்கவைத்துள்ளதால், அதிகப்படியான வீரர்களை ஏலம் எடுக்க போட்டிப்போட்டு வருகின்றன.

Feb 13, 2022, 9:16 pm IST

2022ம் ஆண்டிற்கான ஐபிஎல் மெகா ஏலம் முடிவடைந்தது. ஒவ்வொரு அணியும் 20 முதல் 25 வீரர்கள் வரை ஏலம் எடுத்தனர்.

Feb 13, 2022, 5:21 pm IST

மும்பையை சேர்ந்த லெக் ஸ்பின்னர் பிரசாந்த் சோலங்கியை 1.2 கோடிக்கு வாங்கிய சென்னை

Feb 13, 2022, 5:19 pm IST

கடைசி நேர ட்விஸ்ட்... முன்னணி வீரர்களை அள்ளிய சிஎஸ்கே.. அதுவும் குறைந்த விலைக்கு!

Feb 13, 2022, 5:08 pm IST

அதிரடி வீரர் டிம் டேவிட்டை 8.25 கோடிக்கு ஏலம் எடுத்தது மும்பை அணி

Feb 13, 2022, 4:50 pm IST

ஓடிசாவை சேர்ந்த தொடக்க வீரர் சேனாபதியை 20 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுத்தது சென்னை

Feb 13, 2022, 4:49 pm IST
Mykhel

கடந்த மாதமே சேனாதிபதியை சென்னை அணி குறிவைத்துள்ளதாக நாம் குறிப்பிட்டு இருந்த நிலையில், சிஎஸ்கே எடுத்தது

Feb 13, 2022, 4:48 pm IST

நியூசிலாந்து பவுலர் ஆடம் மில்னேவை ரூ. 1.90 கோடிக்கு ஏலம் எடுத்தது சிஎஸ்கே அணி

Feb 13, 2022, 4:35 pm IST

மேற்கிந்திய தீவுகள் அணியின் ரோமரியோ செஃபர்ட்டை 7.75 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்த ஐதராபாத்

Feb 13, 2022, 4:27 pm IST

நியூசிலாந்து வீரர் மிட்செல் சாண்ட்னரை 1.9 கோடிக்கு எடுத்த சென்னை அணி

Feb 13, 2022, 4:27 pm IST

தென்னாப்பிரிக்க வீரர் பிரிட்டோரியஸை ரூ.50 லட்சத்துக்கு வாங்கிய சென்னை அணி

Feb 13, 2022, 4:22 pm IST

ஆல் ரவுண்டர் ரிஷி தவானை வாங்கிய பஞ்சாப் அணி

Feb 13, 2022, 4:17 pm IST

இங்கிலாந்து வீரர் ஜோஃப்ரா ஆர்ச்சரை 8 கோடி கொடுத்து வாங்கிய மும்பை அணி

Feb 13, 2022, 4:16 pm IST

இந்தியாவுக்கு எதிரான தொடரில் கலக்கிய தென்னாப்பிரிக்க வீரர் ராஸி வாண்டர் டசன் ஏலம் போகவில்லை

Feb 13, 2022, 4:16 pm IST

இந்திய முன்னணி வீரர் கருண் நாயர் ஏலம் போகவில்லை

Feb 13, 2022, 4:04 pm IST

நியூசிலாந்து வீரர் டெவொன் கான்வேவை ரூ. 1 கோடிக்கு ஏலம் எடுத்தது சிஎஸ்கே அணி!

Feb 13, 2022, 4:04 pm IST

நியூசிலாந்து இளம் வீரர் ஃபின் ஆலனை ரூ. 80 லட்சத்திற்கு ஏலம் எடுத்தது ஆர்சிபி அணி!

Feb 13, 2022, 3:46 pm IST

சிமார்ஜீட் சிங் என்ற இளம் வீரரை ரூ. 20 லட்சத்திற்கு ஏலம் எடுத்த சிஎஸ்கே அணி!

Feb 13, 2022, 3:44 pm IST

மகாராஷ்டிராவை சேர்ந்த ராஜ்வர்தன் ஹங்காகேகர் என்ற இளம் வீரரை ரூ. 1.50 கோடிக்கு ஏலம் எடுத்தது சிஎஸ்கே அணி, இவர் விஜய் ஹசாரே, சையது முஷ்டக் அலி கோப்பையில் சிறப்பாக விளையாடியவர்.

Feb 13, 2022, 3:38 pm IST

U19 உலகக்கோப்பையில் சிறப்பாக ஆடிய ராஜ் பவாவை ரூ. 2 கோடிக்கு ஏலம் எடுத்தது பஞ்சாப் அணி!

Feb 13, 2022, 3:21 pm IST

ஆல்ரவுண்டர் திலக் வர்மாவை ரூ.1.7 கோடிக்கு எடுத்தது மும்பை அணி

Feb 13, 2022, 3:14 pm IST

டெல்லியை சேர்ந்த யாஷ் துல் U-19 உலககோப்பை அரையிறுதியில் ஆஸிக்கு எதிராக சதம் விளாசியவர்

Feb 13, 2022, 3:14 pm IST

U-19 கேப்டன் யாஷ் துல்லை ரூ.50 லட்சத்துக்கு ஏலம் எடுத்தது டெல்லி அணி

Feb 13, 2022, 3:13 pm IST

லலித் யாதவை 65 லட்சம் ரூபாய்க்கு எடுத்தது டெல்லி அணி

Feb 13, 2022, 3:11 pm IST

ஐபிஎல் மெகா ஏலம் மீண்டும் தொடங்கியது

Feb 13, 2022, 2:15 pm IST

U-19 வீரர் ஹர்னூர் சிங் ஏலம் போகவில்லை

Feb 13, 2022, 2:14 pm IST

ஜாம்பவான்கள் கரண் சர்மா, பியூஷ் சாவ்லா ஆகியோர் ஏலம் போகவில்லை

Feb 13, 2022, 2:13 pm IST

11 சர்வதேச டி20 போட்டிகளை விளையாடிய தீக்சானா 9 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்

Feb 13, 2022, 2:12 pm IST
Mykhel

இலங்கை அணிக்காக ஒரு சர்வதேச போட்டியில் விளையாடியவர் தீக்சானா

Feb 13, 2022, 2:10 pm IST

இலங்கை சுழற்பந்துவீச்சாளர் மகிஷ் தீக்சானாவை 70 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுத்த சென்னை அணி

Feb 13, 2022, 2:09 pm IST

சாபாஷ் நதீம்மை 50 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுத்த லக்னோ

Feb 13, 2022, 2:09 pm IST

தரவரிசையில் நம்பர் 1 டி20 வீரராக உள்ள தப்பைரஸ் ஷாம்சி விலை போகவில்லை

Feb 13, 2022, 2:07 pm IST

மாயங் மார்கன்டேவை 65 லட்சத்துக்கு வாங்கிய மும்பை அணி

Feb 13, 2022, 2:04 pm IST
Mykhel

சென்னை அணியை விமர்சித்து வைரலாகும் மீம்ஸ்..

Feb 13, 2022, 2:02 pm IST

ஜெய்தேவ் உனட்கட்டை கடைசியாக வாங்கிய மும்பை அணி

Feb 13, 2022, 1:55 pm IST

நவதீப் சைனியை 2.6 ரூபாய்க்கு ஏலம் எடுத்தது ராஜஸ்தான் அணி

Feb 13, 2022, 1:53 pm IST

தண்ணீர் பாட்டில் எடுத்து செல்வதற்காக வீரர்களை வாங்குங்கள் என்று மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் விமர்சனம்

Feb 13, 2022, 1:52 pm IST

சந்தீப் சர்மாவை 50 லட்சத்துக்கு ஏலம் எடுத்தது பஞ்சாப் அணி

Feb 13, 2022, 1:44 pm IST

தென்னாப்பிரிக்காவின் முன்னணி வீரர் லுங்கி இங்கிடி ஏலம் போகவில்லை

Feb 13, 2022, 1:22 pm IST

சிவம் துபேவிற்கு ரூ.4 கோடி கொடுத்த சிஎஸ்கே, கௌதம்க்கு ரூ.90 லட்சம் கொடுத்த லக்னோ

Feb 13, 2022, 1:13 pm IST

இந்தியாவின் சிறந்த ஆல் ரவுண்டரான சிவம் துபேவை எடுக்க சிஎஸ்கே போட்டி போடுவதால் ரசிகர்கள் அதிர்ச்சி

Feb 13, 2022, 1:10 pm IST
Mykhel

U-19 வீரர்களை குறிவைக்க மும்பை, சென்னை அணி முடிவு. இரு அணிகளும் இதுவரை 2வது நாளில் ஒரு வீரரை கூட எடுக்கவில்லை

Feb 13, 2022, 1:07 pm IST

அமைதியோ.. அமைதி.. ஏலம் தொடங்கி 1 மணி நேரமாகியும் சிஎஸ்கே யாரையும் எடுக்கவில்லை

Feb 13, 2022, 1:06 pm IST

தென்னாப்பிரிக்க வீரர் மார்கோ யான்சென்-ஐ ரூ.4.2 கோடி ரூபாய்க்கு எடுத்தது ஐதராபாத்

Feb 13, 2022, 12:58 pm IST

ஓடியன் ஸ்மித்தை பஞ்சாப் அணி ரூ.6 கோடிக்கு ஏலம் எடுத்தது

Feb 13, 2022, 12:57 pm IST

இந்திய வீரர் மந்தீப் சிங்கை ரூ.1.1 கோடிக்கு ஏலம் எடுத்தது டெல்லி

Feb 13, 2022, 12:56 pm IST

அடிப்படை விலையான ரூ.1 கோடியிலிருந்த லிவிங்ஸ்டோனை ரூ.11.5 கோடிக்கு எடுத்தது பஞ்சாப்

Feb 13, 2022, 12:49 pm IST

ஓடியன் ஸ்மித்தை எடுக்க ஆர்வம் காட்டாத சிஎஸ்கே, போட்டிக்குள் நுழைந்த ஐதராபாத் அணி

Feb 13, 2022, 12:47 pm IST

மேற்கிந்திய தீவுகள் அணி ஆல் ரவுண்டர் ஓடியன் ஸ்மித்துக்கு பஞ்சாப், லக்னோ இடையே கடும் மோதல்

Feb 13, 2022, 12:47 pm IST

இங்கிலாந்து வீரர் கிறிஸ் ஜோர்டன் ஏலம் போகவில்லை

Feb 13, 2022, 12:45 pm IST

தமிழக வீரர் விஜய் சங்கருக்கு சிஎஸ்கே போட்டி போட்ட நிலையில் குஜராத் ரூ.1.4 கோடிக்கு எடுத்தது

Feb 13, 2022, 12:42 pm IST

இந்திய வீரர் ஜெயந்த் யாதவை ரூ.1.7 கோடிக்கு ஏலம் எடுத்தது குஜராத்

Feb 13, 2022, 12:40 pm IST

நியூசி. வீரர் ஜேம்ஸ் நீஷம் விலை போகவில்லை

Feb 13, 2022, 12:39 pm IST

சிஎஸ்கே அணியிலிருந்த மேற்கிந்திய தீவுகள் ஆல் ரவுண்டர் டோமினிக் டிராக்ஸை 1.10 கோடிக்கு ஏலம் எடுத்தது குஜராத் அணி

Feb 13, 2022, 12:38 pm IST
Mykhel

இன்றைய ஏலத்தில் அதிக விலைக்கு சென்றார் இங்கிலாந்து வீரர் லிவிங்ஸ்டோன்

Feb 13, 2022, 12:36 pm IST

அடிப்படை விலையான ரூ.1 கோடியிலிருந்த லிவிங்ஸ்டோனை ரூ.11.5 கோடிக்கு எடுத்தது பஞ்சாப்

Feb 13, 2022, 12:35 pm IST

லிவிங்ஸ்டோனை எடுக்க பஞ்சாப், கொல்கத்தா, குஜராத் மோதல்

Feb 13, 2022, 12:35 pm IST

இங்கிலாந்து வீரர் லிவிங்ஸ்டோனை ஏலம் எடுப்பதில் கடும் போட்டி

Feb 13, 2022, 12:22 pm IST

இந்திய டெஸ்ட் வீரர் புஜாரா ஏலம் போகவில்லை

Feb 13, 2022, 12:21 pm IST

ஆஸி. வீரர் ஆரோன் பிஞ்ச் ஏலத்தில் விலை போகவில்லை

Feb 13, 2022, 12:21 pm IST

இந்திய வீரர் சௌரப் திவாரி ஏலத்தில் விலை போகவில்லை

Feb 13, 2022, 12:20 pm IST

இங்கிலாந்து அணி கேப்டன் மார்க்கன் ஏலத்தில் விலை போகவில்லை

Feb 13, 2022, 12:20 pm IST

ஆஸ்திரேலிய வீரர் மார்னஸ் லாபஸ்சேங் விலை போகவில்லை

Feb 13, 2022, 12:19 pm IST

இந்திய வீரர் மந்தீப் சிங்கை ரூ.1.1 கோடிக்கு ஏலம் எடுத்தது டெல்லி

Feb 13, 2022, 12:15 pm IST

இங்கிலாந்து வீரர் டேவிட் மலான் ஏலத்தில் விலை போகவில்லை

Feb 13, 2022, 12:15 pm IST

இந்திய வீரர் ரஹானேவை அடிப்படை விலையான ரூ.1 கோடிக்கு எடுத்தது கொல்கத்தா

Feb 13, 2022, 12:14 pm IST

தென்னாப்பிரிக்க வீரர் ஏய்டன் மார்க்ரம்மை ரூ.2.6 கோடிக்கு ஏலம் எடுத்தது ஐதராபாத்

Feb 13, 2022, 12:10 pm IST

ஐபிஎல் மெகா ஏலம் 2வது நாள் தொடங்கியது. முதல் வீரராக ஏய்டன் மார்க்ரம் ஏலத்திற்கு வந்தார்

Feb 13, 2022, 11:54 am IST

இன்னும் சில நிமிடங்களில் 2வது நாள் மெகா ஏலம் தொடங்க உள்ளது

Feb 13, 2022, 11:54 am IST

மேற்கிந்திய தீவுகள் அணியின் ஓடியன் ஸ்மித் இன்று அதிக விலைக்கு செல்வார் என எதிர்பார்ப்பு

Feb 13, 2022, 11:51 am IST

அணிகளிடம் பணம் குறைவாக இருப்பதால் பல வீரர்களுக்கு நினைத்த அளவிற்கு அதிக பணம் கிடைக்காது

Feb 13, 2022, 11:51 am IST

வீரர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தில் உச்சவரம்பு கொண்டு வர கோரிக்கை

Feb 13, 2022, 11:50 am IST

இதனால் பல அணிகளில் குறைகள் இருக்கும் என கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து

Feb 13, 2022, 11:50 am IST

இன்னும் பல அணிகள் போதிய வீரர்களை தேர்வு செய்யாத நிலையில், கையிருப்பும் குறைவாக உள்ளது

Feb 13, 2022, 11:50 am IST

மெகா ஏலத்தில் அணிகளுக்கு குறைவான அளவில் தான் பணம் செலவழிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக விமர்சனம் எழுந்துள்ளது

Feb 13, 2022, 11:24 am IST

ஆரோன் பிஞ்ச், டேவிட் மலான்,புஜாரா, ரஹானே,விஜய் சங்கர், லிவிங்ஸ்டோன்,ஜேம்ஸ் நீஷம் ஆகியோர் ஏலத்தில் முதல் அரைமணி நேரத்தில் வருவார்கள்

Feb 13, 2022, 11:22 am IST

2வது நாள் ஏலத்தில் பஞசாப் அணியிடம் ரூ. 28.65 கோடி, மும்பையிடம் 27.85 கோடி,சென்னை அணியிடம் 20.45 கோடி கைவசம் உள்ளது

Feb 13, 2022, 11:14 am IST

மார்னஸ் லாபஸ்சேங், ஏய்டன் மார்க்ரம், மார்கன், ஓடியன் ஸ்மித் ஆகியோர் பெயர்கள் இன்று ஏலத்தில் முதலில் விடப்படும்

Feb 13, 2022, 11:13 am IST

ஐபிஎல் மெகா ஏலத்தில் இன்று 98வது வீரர்களிலிருந்து 164 வரை வீரர்கள் இன்று தேர்வு செய்யப்பட உள்ளனர்

Feb 13, 2022, 11:13 am IST

164 முதல் 600 வரை உள்ள வீரர்களில் ஒவ்வொரு அணியும் 20 பேரை தேர்வு செய்ய வேண்டும்

Feb 13, 2022, 11:13 am IST

அணிகள் தேர்வு செய்த வீரர்கள் மட்டுமே ஏலத்திற்கு விடப்படுவார்கள் என அறிவிப்பு

Feb 13, 2022, 11:12 am IST

இன்றைய ஏலத்தில் வீரர்களை தேர்வு செய்ய 10 விநாடியே வழங்கப்படும்

Feb 13, 2022, 10:15 am IST

சென்னை அணியிடம் தற்போது வரை 10 வீரர்கள் உள்ளனர். கையில் மீதம் ரூ.20 கோடியே 45 லட்சம் உள்ளது.

Feb 13, 2022, 10:10 am IST

மும்பை இந்தியன்ஸ் அணியிடம் தற்போது வரை 8 வீரர்கள் உள்ளனர், கையில் மீதம் ரூ.27 கோடியே 85 லட்சம் உள்ளது

Feb 13, 2022, 10:10 am IST

ஐபிஎல் தொடரின் 2வது நாள் மெகா ஏலம் இன்று காலை 11 மணியளவில் தொடங்கவுள்ளது.

Feb 12, 2022, 9:46 pm IST

சென்னை அணி கைவசம் 20.45 கோடி ரூபாய் உள்ளது

Feb 12, 2022, 9:45 pm IST

சென்னை அணி பிராவோ, தீபக் சாஹர், உத்தப்பா, அம்பத்தி ராயுடு,ஆசிஃப்,துஷார் தேஷ்பாண்டே ஆகியோரை தேர்வு செய்துள்ளது

Feb 12, 2022, 9:45 pm IST

ஐபிஎல் மெகா ஏலம் முதல் நாள் முடிவடைந்தது

Feb 12, 2022, 9:45 pm IST

முதல் நாளில் 74 வீரர்கள் ஏலத்தில் தேர்வு செய்யப்பட்டனர்.

Feb 12, 2022, 9:44 pm IST

முதல் நாளில் மட்டும் 388 கோடியே 10 லட்சம் ரூபாய் அணிகள் செலவு செய்துள்ளன

Feb 12, 2022, 9:15 pm IST

வேகப்பந்துவீச்சாளர் துஷ்பாந்தை 20 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுத்தது சென்னை அணி

Feb 12, 2022, 9:07 pm IST

வேகப்பந்துவீச்சாளர் ஆசிப்பை 20 லட்சம் ரூபாய்க்கு சென்னை அணி வாங்கியது. இவர் ஏற்கனவே சிஎஸ்கே அணிக்காக விளையாடியவர்

Feb 12, 2022, 7:51 pm IST

தமிழக வீரர் ஷாருக்கானை ரூ.9 கோடிக்கு ஏலம் எடுத்தது பஞ்சாப் கிங்ஸ் அணி!

Feb 12, 2022, 7:50 pm IST

தமிழக வீரர் ஷாருக்கானுக்காக சிஎஸ்கே மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் கடும் மோதல்!

Feb 12, 2022, 7:23 pm IST

ராகுல் திரிபாதியை ரூ.8.5 கோடிக்கு ஏலம் எடுத்தது சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி!

Feb 12, 2022, 7:21 pm IST

பேபி ஏபி டிவில்லியர்ஸ் என்று அழைக்கப்படும் U-19 தென்னாப்பிரிக்க வீரர் பிரவீஸை 3 கோடி ரூபாய்க்கு மும்பை அணி எடுத்தது

Feb 12, 2022, 7:21 pm IST

பேபி ஏ.பி. டிவில்லியர்ஸ் என்றழைக்கப்படும், டேவல்ட் ப்ரேவிஸ்-ஐ ரூ. 3 கோடிக்கு ஏலம் எடுத்தது மும்பை இந்தியன்ஸ் அணி!

Feb 12, 2022, 6:39 pm IST

யுவேந்திர ரூ.6.5 கோடிக்கு ஏலம் எடுத்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி!

Feb 12, 2022, 6:33 pm IST

ராகுல் சஹாரை ரூ.5.25 கோடிக்கு ஏலம் எடுத்தது பஞ்சாப் கிங்ஸ்!

Feb 12, 2022, 6:25 pm IST

குல்தீப் யாதவை ரூ. 2 கோடிக்கு ஏலம் எடுத்தது டெல்லி கேப்பிடல்ஸ் அணி!

Feb 12, 2022, 6:18 pm IST

ஷர்துல் தாக்கூரை ரூ. 10.75 கோடிக்கு ஏலம் எடுத்தது டெல்லி கேப்பிடல்ஸ் அணி!

Feb 12, 2022, 6:06 pm IST
Mykhel

புவனேஷ்வர் குமாரை ரூ. 4.2 கோடிக்கு மீண்டும் வாங்கியது சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி!

Feb 12, 2022, 6:01 pm IST

இங்கிலாந்து வீரர் மார்க் வுட்டை ரூ.7.5 கோடிக்கு ஏலம் எடுத்தது லக்னோ அணி!

Feb 12, 2022, 6:01 pm IST

ஆஸ்திரேலிய வீரர் ஜோஸ் ஹாசல்வுட்டை ரூ.7.75 கோடிக்கு ஏலம் எடுத்தது ஆர்சிபி அணி!

Feb 12, 2022, 5:51 pm IST

லாக்கி ஃபெக்யூசனை ரூ.10 கோடிக்கு ஏலம் எடுத்தது குஜராத் டைட்டான்ஸ் அணி

Feb 12, 2022, 5:43 pm IST

பிரஷித் கிருஷ்ணாவை ரூ. 10 கோடிக்கு ஏலம் எடுத்தது ராஜஸ்தான் ராயல்ஸ்!

Feb 12, 2022, 5:35 pm IST

தீபக் சஹாரை ரூ. 14 கோடிக்கு ஏலம் எடுத்தது சென்னை அணி!

Feb 12, 2022, 5:31 pm IST

14 கோடி வரை சிஎஸ்கே மோதுகிறது

Feb 12, 2022, 5:29 pm IST
Mykhel

தீபக் சஹார் மீது ஆர்வம் காட்டாமல் உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி!

Feb 12, 2022, 5:24 pm IST
Mykhel

தமிழக வீரர் டி.நடராஜனை ரூ.4 கோடிக்கு மீண்டும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியே ஏலம் எடுத்தது!

Feb 12, 2022, 5:05 pm IST

வெஸ்ட் இண்டீஸ் வீரர் நிக்கோலஸ் பூரானை 10.75 கோடி ரூபாய் ஏலத்தில் எடுத்தது ஐதராபாத்

Feb 12, 2022, 4:54 pm IST

இந்திய விக்கெட் கீப்பர் விரித்மான் சாஹா, இங்கிலாந்து வீரர் சாம் பில்லிங்ஸ் ஏலம் போகவில்லை

Feb 12, 2022, 4:52 pm IST

சென்னை அணிக்காக விளையாட வேண்டும் என்ற தினேஷ் கார்த்திக்கின் கனவு 15 ஆண்டுகளாக தொடர்கிறது

Feb 12, 2022, 4:52 pm IST
Mykhel

தமிழக வீரர் தினேஷ் கார்த்திக்கை வாங்க சிஎஸ்கே முயற்சித்த நிலையில், பெங்களூரு 5.5 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது

Feb 12, 2022, 4:45 pm IST

இங்கிலாந்து வீரர் பாரிஸ்டோவை 6.75 கோடி ரூபாய்க்கு பஞ்சாப் அணி வாங்கியது

Feb 12, 2022, 4:37 pm IST

க்ருணால் பாண்ட்யாவை ரூ. 8.25 கோடிக்கு வாங்கியது லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி!

Feb 12, 2022, 4:37 pm IST

தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தரை ரூ.8.75 கோடிக்கு ஏலம் எடுத்தது சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி!

Feb 12, 2022, 4:35 pm IST

இஷான் கிஷனை 15 கோடியே 25 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுத்தது மும்பை அணி

Feb 12, 2022, 4:35 pm IST

நடப்பு ஏலத்தில் அதிக விலைக்கு சென்ற வீரர் என்ற பெருமையை பெற்றார் இஷான் கிஷன்

Feb 12, 2022, 4:35 pm IST

மும்பை - ஹைதராபாத் இடையே கடும் போட்டி

Feb 12, 2022, 4:35 pm IST

மும்பை இதற்கு முன் 10 கோடி ரூபாய்க்கு மேல் யாரையும் ஏலம் கேட்டது இல்லை

Feb 12, 2022, 4:35 pm IST

இஷான் கிஷன் விலை ஏலத்தில் கிடுகிடு உயர்வு

Feb 12, 2022, 4:34 pm IST

நடப்பு ஏலத்தில் அதிக விலையை தாண்டினார்

Feb 12, 2022, 4:29 pm IST

36 வயதான அம்பத்தி ராயுடுவை 6.75 கோடியை ஏலத்தில் எடுத்தது சென்னை அணி

Feb 12, 2022, 3:33 pm IST

தொகுப்பாளர் ஹக் எட்மைட்ஸ் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதால், ஐபிஎல் மெகா ஏலத்தை சாரு சர்மா தொகுத்து வழங்குவார் என அறிவிப்பு!

Feb 12, 2022, 2:57 pm IST

ஐபிஎல் மெகா ஏலத்தில் சிஎஸ்கே பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளமிங் பங்கேற்கவில்லை

Feb 12, 2022, 2:56 pm IST

ஹக் எட்மைட்ஸ் உடல்நலம் சீராக உள்ளதால், அவரே ஏலத்தை நடத்துவார் என அறிவிப்பு

Feb 12, 2022, 2:56 pm IST

ஹக் எட்மைட்ஸ் உடல்நலம் சீராக உள்ளதால், அவரே ஏலத்தை நடத்துவார் என அறிவிப்பு

Feb 12, 2022, 2:42 pm IST

ஐபிஎல் மெகா ஏலம் மீண்டும் 3.30 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Feb 12, 2022, 2:30 pm IST
Mykhel

ஹக் எட்மீட்ஸ் மயங்கி விழுந்ததால், ஐபிஎல் ஏலம் நிறுத்தம். மதிய உணவு இடைவேளை அறிவிக்கப்பட்டது

Feb 12, 2022, 2:29 pm IST

பிரிட்டனை சேர்ந்த ஹக் எட்மீட்ஸ் 36 வருடமாக ஏலத்தை ஒருங்கிணைந்து நடத்தி வருகிறார்

Feb 12, 2022, 2:29 pm IST

இதுவரை 16 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்களை ஏலத்தில் விற்றுள்ளார்

Feb 12, 2022, 2:15 pm IST

ஐபிஎல் மெகா ஏலத்தில் 20 வீரர்களுக்கு மொத்தம் 138 கோடியே 75 லட்சம் ரூபாய் வரை செலவு செய்யப்பட்டுள்ளது

Feb 12, 2022, 2:07 pm IST

ஒரே வருடத்தில் 20 லட்சத்திலிருந்து 10.75 கோடி ரூபாய் வரை மதிப்பை உயர்த்திய ஹர்சல் பட்டேல்

Feb 12, 2022, 2:07 pm IST

கடந்த ஆண்டு 20 லட்சம் ஏலம் போன ஹர்சல், இம்முறை 10.75 கோடிக்கு பெங்களூரு அணிக்கு ஏலம் போனார்

Feb 12, 2022, 2:05 pm IST
Mykhel

இந்திய வீரர் தீபக் ஹூடாவை ரூ. 5.75 கோடிக்கு ஏலம் எடுத்தது லக்னோ அணி!

Feb 12, 2022, 1:59 pm IST

இளம் வீரர் ஹர்ஷல் பட்டேலை ரூ.10.75 கோடிக்கு மீண்டும் ஏலம் எடுத்தது ஆர்சிபி அணி!

Feb 12, 2022, 1:56 pm IST
Mykhel

ஹர்ஷல் பட்டேலுக்காக ஆர்சிபி - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளுக்கு இடையே கடும் போட்டி

Feb 12, 2022, 1:54 pm IST

வெஸ்ட் இண்டீஸ் ஆல்ரவுண்டர் ஜேசன் ஹோல்டரை ரூ.8.75 கோடிக்கு ஏலம் எடுத்தது லக்னோ அணி!

Feb 12, 2022, 1:49 pm IST

பழைய வீரர்களை மீண்டும் எடுத்த சிஎஸ்கே.. ரெய்னா மட்டும் இல்லை!

Feb 12, 2022, 1:48 pm IST

இளம் வீரர் நிதிஷ் ராணாவை ரூ. 8 கோடிக்கு மீண்டும் ஏலம் எடுத்தது கொல்கத்தா அணி!

Feb 12, 2022, 1:43 pm IST

வெஸ்ட் இண்டீஸ் வீரர் டுவைன் பிராவோவை ரூ. 4.40 கோடிக்கு மீண்டும் ஏலம் எடுத்தது சிஎஸ்கே அணி!

Feb 12, 2022, 1:39 pm IST

நட்சத்திர வீரர் சுரேஷ் ரெய்னாவை எந்த அணியும் ஏலம் வாங்க முன் வராததால் ஏமாற்றம்; சிஎஸ்கே ரசிகர்கள் சோகம்!

Feb 12, 2022, 1:38 pm IST
Mykhel

இளம் விரர் தேவ்தத் பட்டிக்கலை ரூ.7.75 கோடிக்கு ஏலம் எடுத்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி!

Feb 12, 2022, 1:30 pm IST

சிஎஸ்கேவின் முதல் ஏலம்.. அதுவும் அடிப்படை தொகைக்கே.. இந்திய வீரருக்கு ஏமாற்றம்!

Feb 12, 2022, 1:30 pm IST

சிஎஸ்கே அணி தனது முதல் ஏலமாக இந்திய வீரர் ராபின் உத்தப்பாவை அடிப்படை தொகையான ரூ. 2 கோடிக்கே ஏலம் எடுத்தது!

Feb 12, 2022, 1:28 pm IST

வெஸ்ட் இண்டீஸ் வீரர் சிம்ரான் ஹெட்மெயரை ரூ. 8.5 கோடிக்கு ஏலம் எடுத்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி!

Feb 12, 2022, 1:06 pm IST

டுபிளஸிஸை சென்னை அணி இழந்தது. குறிவைத்த வார்னர், டி காக் ஆகியோரும் கிடைக்கவில்லை. அஸ்வினையும் எடுக்க ஆர்வம் காட்டாத சென்னை அணி, ரசிகர்கள் ஏமாற்றம்

Feb 12, 2022, 12:58 pm IST

தென்னாப்பிரிக்க வீரர் குயிண்டன் டிகாக்கை ரூ.6.75 கோடிக்கு ஏலம் எடுத்தது லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி!

Feb 12, 2022, 12:57 pm IST

ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னரை ரூ.6.25 கோடிக்கு ஏலம் எடுத்தது டெல்லி கேப்பிடல்ஸ் அணி!

Feb 12, 2022, 12:57 pm IST

இந்திய வீரர் முகமது ஷமியை ரூ.6.25 கோடிக்கு ஏலம் எடுத்தது குஜராத் டைட்டான்ஸ் அணி!

Feb 12, 2022, 12:50 pm IST
Mykhel

கடுமையாக போராடிய போதும் டூப்ளசிஸை ஏலம் எடுக்க முடியாமல் சிஎஸ்கே அணி ஏமாற்றம்

Feb 12, 2022, 12:48 pm IST

தென்னாப்பிரிக்க வீரர் ஃபாப் டூப்ளசிஸை ரூ.7 கோடிக்கு ஏலம் எடுத்தது ஆர்சிபி அணி!

Feb 12, 2022, 12:40 pm IST

இந்திய வீரர் ஸ்ரேயாஸ் ஐயரை ரூ. 12.25 கோடிக்கு ஏலம் எடுத்தது கொல்கத்தா அணி. கேப்டனாக நியமிக்கப்படுவார் என எதிர்பார்ப்பு!

Feb 12, 2022, 12:38 pm IST

ட்ரெண்ட் போல்ட்-காக போராடிய மும்பை.. விட்டுக்கொடுக்காத ராஜஸ்தான்.. மெகா ஏலத்தில் விறுவிறுப்பு!

Feb 12, 2022, 12:35 pm IST

நியூசிலாந்து வீரர் ட்ரெண்ட் போல்ட்- ஐ ரூ.8 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஏலம் எடுத்தது!

Feb 12, 2022, 12:29 pm IST

தென்னாப்பிரிக்க வீரர் ககிஸ்கோ ரபாடாவை ரூ.9.25 கோடிக்கு ஏலம் எடுத்தது பஞ்சாப் கிங்ஸ் அணி!

Feb 12, 2022, 12:24 pm IST

ஆஸ்திரேலிய வீரர் பேட் கம்மின்ஸை ரூ.7.25 கோடிக்கு மீண்டும் கொல்கத்தா அணியே ஏலம் எடுத்தது!

Feb 12, 2022, 12:21 pm IST

தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினை ரூ.5 கோடிக்கு ஏலம் எடுத்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி!

Feb 12, 2022, 12:20 pm IST
Mykhel

தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினை ஏலம் எடுக்க அணிகளிடையே கடும் போட்டி!

Feb 12, 2022, 12:18 pm IST

இந்திய வீரர் ஷிகர் தவானை ரூ. 8.25 கோடிக்கு ஏலம் எடுத்தது பஞ்சாப் கிங்ஸ்!

Feb 12, 2022, 12:11 pm IST
Mykhel

இந்திய வீரர் ஷிகர் தவான் முதல் வீரராக ஏலம் விடப்படுகிறார்!

Feb 12, 2022, 12:10 pm IST
Mykhel

ஐபிஎல் மெகா ஏலத்தில் சென்னை அணியின் கேப்டன் தோனி பங்கேற்கவில்லை

Feb 12, 2022, 12:09 pm IST

தோனி வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் ஏலத்தில் கலந்து கொள்ளவில்லை

Feb 12, 2022, 12:06 pm IST

ஐபிஎல் மெகா ஏலம் தொடங்கியது.. ஐபிஎல் தலைவர் பிரஜேஸ் பட்டேல் அணி உரிமையாளர்களை வரவேற்று பேசி வருகிறார்

Feb 12, 2022, 12:02 pm IST
Mykhel

மெகா ஏலத்திற்கு வருகை தந்தார் காவ்யா கலாநிதி மாறன்

Feb 12, 2022, 11:43 am IST

மெகா ஏலத்திற்கு தயாராக உள்ள அரங்கம்!

Feb 12, 2022, 11:35 am IST
Mykhel

இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளை சேர்ந்த வீரர்கள் சிலர் ஐபிஎல் 2022 தொடரில் முதல் சில போட்டிகளில் பங்கேற்கப் போவதில்லை என அறிவிப்பு!

Feb 12, 2022, 11:30 am IST

சிஎஸ்கே - 48 கோடி, டெல்லி -47.50 கோடி, குஜராத் டைட்டான்ஸ் - 52 கோடி, கொல்கத்தா - ரூ.48 கோடி, லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் - ரூ.59 கோடி, மும்பை இந்தியன்ஸ் - ரூ.48 கோடி, பஞ்சாப் - ரூ.72 கோடி, பெங்களூரு - ரூ.57 கோடி, ராஜஸ்தான் - ரூ.62 கோடி, ஐதராபாத் - ரூ.68 கோடி

Feb 12, 2022, 11:08 am IST

முதலில் 164 வீரர்களின் பெயர் தான் ஏலத்திற்கு வரும், எஞ்சியுள்ள வீரர்கள் பெயர் அணிகள் கேட்டுகொண்டால் மட்டுமே ஏலம் விடப்படும்

Feb 12, 2022, 11:08 am IST

இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் சிலர் ஐபிஎல் தொடரில் முதல் சில போட்டிகளில் பங்கேற்கமாட்டார்கள் என அறிவிப்பு

Feb 12, 2022, 11:08 am IST

ஐபிஎல் ஏலத்தில் மார்கியூ எனப்படும் நட்சத்திர வீரர்களின் பட்டியல் முதலில் வருகிறது

Feb 12, 2022, 11:08 am IST

அஸ்வின், ஷிகர் தவான், டுபிஸிஸ், ஸ்ரேயாஸ் ஐயர், வார்னர் உள்ளிட்ட வீரர்களின் பெயர் முதல் அரைமணி நேரத்தில் ஏலத்திற்கு வந்துவிடும்

Feb 12, 2022, 10:44 am IST
Mykhel

எப்போதும் போல கேப்டன் தோனி இந்த முறையும் நம்மை ஏமாற்றமாட்டார். மெகா ஏலத்தில் ‘தலைவன்’ தோனி எடுக்கும் முடிவு தான் இறுதி - காசி விஸ்வநாதன்

Feb 12, 2022, 10:01 am IST

சென்னை, மும்பை , கொல்கத்தா அணி கைவசம் 48 கோடி ரூபாய் உள்ளது

Feb 12, 2022, 10:01 am IST

குஜராத் 52 கோடி, லக்னோ 59 கோடி, பெங்களூரு 57 கோடி, டெல்லி 47.5 கோடி எஞ்சி உள்ளது

Feb 12, 2022, 10:01 am IST

அதிகபட்சமாக பஞ்சாப் அணியிடம் 72 கோடி, ஐதராபாத் 68 கோடி, ராஜஸ்தான் அணியிடம் 62 கோடி ரூபாய் உள்ளது

Feb 12, 2022, 9:56 am IST

ஏலத்தில் ஒவ்வொரு அணியும் குறைந்தபட்சம் 18 வீரர்களையும், அதிகபட்சம் 25 வீரர்களையும் தேர்வு செய்யலாம்.

Feb 12, 2022, 9:56 am IST

அதிகபட்சமாக ஒவ்வொரு அணியிலும் 8 வெளிநாட்டு வீரர்கள் தான் தேர்வு செய்யப்படலாம்.

Feb 12, 2022, 9:56 am IST

அனுமதிக்கப்பட்ட 90 கோடியில் ஒவ்வோரு அணியும் குறைந்தபட்சம் 67 புள்ளி 5 கோடியை செலவு செய்ய வேண்டும்.

Feb 12, 2022, 9:56 am IST

ஐபிஎல் மெகா ஏலம் பெங்களூருவில் இன்று மதியம் 12 மணிக்கு தொடங்குகிறது. இதில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்கின்றன.

Feb 12, 2022, 9:56 am IST

இதில் மொத்தம் 289 வீரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். 515 கோடியே 50 லட்சம் ருபாய் இந்த ஏலத்தில் செலவு செய்யப்பட உள்ளது.

Feb 12, 2022, 9:55 am IST

இந்த நிலையில் ஏலத்தில் புதியதாக 10 வீரர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதால் வீரர்களின் எண்ணிக்கை 600ஆக உயர்ந்து உள்ளது

Feb 12, 2022, 9:49 am IST

விராட் கோலி ஆர்சிபி அணியால் தக்கவைக்கப்பட்டார்!

Feb 12, 2022, 9:45 am IST

எம்.எஸ்.தோனி சிஎஸ்கேவால் தக்கவைக்கப்பட்டார்!

Feb 12, 2022, 7:52 am IST

ஐபிஎல் மெகா ஏலம் இன்று காலை 11 மணியளவில் தொடங்குகிறது. 2018ம் ஆண்டிற்கு பிறகு இன்று தான் முதன்முறையாக நடைபெறவுள்ளது.

Feb 12, 2022, 7:51 am IST

இந்த முறை மெகா ஏலத்திற்காக 590 வீரர்கள் இறுதி செய்யப்பட்டுள்ளனர். இதில் 370 இந்திய வீரர்களும், 220 அயல்நாட்டு வீரர்களும் ஆகும்.

Story first published: Sunday, February 13, 2022, 21:17 [IST]
Other articles published on Feb 13, 2022
English summary
IPL Mega Auction Auction (ஐபிஎல் மெகா ஏலம்) 2022 LIVE News Updates in Tamil: 2022ம் ஆண்டுக்இந்திய வீரர் முகமது ஷமியை ரூ.6.25 கோடிக்கு ஏலம் எடுத்தது குஜராத் டைட்டான்ஸ் அணி! கான ஐபிஎல் மெகா ஏலம் வரும் பிப்.12 மற்றும் 13ம் தேதிகளில் நடைபெறுகிறது. இந்த வருட ஐபிஎல் ஏலத்தில் தேர்தெடுக்கப்பட்ட வீரர்கள் யார் யார்? எந்த அணியில் அவர்கள் இடம் பெற்றுள்ளார்கள்? மற்றும் ஐபிஎல் 2022 தொடர்பான அனைத்து நேரலை செய்திகளையும் உடனுக்குடன் அறிய இந்த பக்கத்தை பாருங்கள்.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X