For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஐபிஎல் ஏலம்: யுவராஜுக்கு ஏன் 16 கோடி? 'கடனாளி' மல்லையா கலந்து கொண்டது எப்படி?

By Veera Kumar

பெங்களூரு: ஐபிஎல் கிரிக்கெட்டுக்கான ஏலத்தை இப்போது நடத்தியுள்ளது பல சர்ச்சைகளை கிளப்பிவிட்டுள்ளது. ரசிகர்களுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் ஐபிஎல் நிர்வாகத்திடமிருந்து சில விஷயங்களில் விளக்கம் தேவைப்படுகிறது. அந்த விளக்கத்தை ஐபிஎல் அணி நிர்வாகங்களோ அல்லது ஐபிஎல் ஆட்சிமன்றமோ வெளிப்படுத்த வேண்டியது அவசியம். அப்படி ஒரு ஐந்து கேள்விகள் என்னவென்று பார்ப்போமா..

இதுக்கு இதுவா நேரம்?

இதுக்கு இதுவா நேரம்?

உலக கோப்பை போட்டிகளில் ரசிகர்கள் கவனம் செலுத்திக் கொண்டிருக்கும்போது ஐபிஎல் ஏலத்தை நடத்த வேண்டிய அவசியம் என்ன வந்தது? ரசிகர்களின் கவனம் சிதைந்துவிடாதா? ரசிகர்கள் கவனத்தை பற்றி கவலைப்பட வேண்டாம் என்றாலும், இந்திய கிரிக்கெட் வீரர்களின் கவனம் இதில் திசை திரும்பியிருக்காதா? எத்தனை கோடிக்கு யார் போனார்கள், யார் ஏலத்தில் வாங்கப்படவில்லை என்ற செய்திகளை படித்து பார்க்கும்போது அவர்கள் மனது பாதிக்கப்படுமே..

வழக்கு என்னப்பா ஆச்சு?

வழக்கு என்னப்பா ஆச்சு?

ஐபிஎல் சூதாட்டம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ளது. முட்கல் கமிட்டி அறிக்கை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி உரிமையாளரை நோக்கி கை காட்டியபடி உள்ளது. இந்த நிலையில் ராஜஸ்தான் அணி நிர்வாகமும் ஏலத்தில் போட்டி போட அனுமதிக்கப்பட்டது. நாளையே நிலைமை மாறினால், வாங்கப்பட்ட வீரர்கள் நிலை என்னவாகும்.

மல்லையா எப்படி வந்தார்?

மல்லையா எப்படி வந்தார்?

விஜய் மல்லையா மீது காசோலை பவுன்ஸ் வழக்கு முதல் வரி கட்டாத வழக்குவரை ஏகப்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவரின் கிங்பிஷர் நிறுவனத்துக்கு கொடுத்த ரூ.7ஆயிரம் கோடி கடனை திரும்ப பெற முடியாமல் வங்கிகள் தடுமாறி வருகின்றன. ஆனால், மல்லையா கம்பீரமாக அமர்ந்து புது வீரர்களை ஏலம் எடுத்துக் கொண்டிருந்தார். தினேஷ் கார்த்திக்கை ரூ.10.5 கோடிக்கு ஏலத்தில் எடுத்து சாதனையும் படைத்தார். ஏலத்தில் எப்படி விஜய் மல்லையா அனுமதிக்கப்பட்டார்?

யூவிக்கு இது டூமச்சா தெரியலை?

யூவிக்கு இது டூமச்சா தெரியலை?

யுவராஜ்சிங்கை டெல்லி அணி ரூ.16 கோடி கொடுத்து வாங்கியுள்ளது. ஒவ்வொரு பைசாவுக்கும், யுவராஜ் வொர்த் ஆனவர் என்று கவாஸ்கர் சர்டிபிகேட்டும் கொடுத்துள்ளார். ஆனால், ரூ.14 கோடி கொடுத்து வாங்கிய பெங்களூரு அணிக்காக யுவராஜ்சிங் கடந்த சீசனில் மொத்தம் 14 போட்டிகள் விளையாடி 376 ரன்கள் எடுத்தார், 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதைவிட சிறப்பாக ஆடிய பிளேயர்கள் போன சீசனில் பலர் இருந்தனர். மேலும், பெங்களூரு அணிகூட, யுவராஜ்சிங்கை கழற்றிதான் விட்டது. இருந்தாலும், டெல்லி கொடுத்துள்ள தொகை டூ மச் என்கின்றனர் கிரிக்கெட் நிபுணர்கள். இந்த டீலிங்கே மர்மமாகத்தான் உள்ளது என்கின்றனர்.

எப்படிங்க இப்படி?

எப்படிங்க இப்படி?

ஐந்தாவது கேள்வி மிகவும் முக்கியமானது. ரசிகர்கள் மனதில் மிக நீண்ட காலமாக தொக்கி நிற்கும் கேள்வி இது. இதில் கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமல்ல, சினிமா ரசிகர்களும் கூட அடங்குவார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள், அதன் முக்கியத்துவத்தை. ஆம்.. நேற்றைய ஏலத்தின்போது பஞ்சாப் அணி ஓனர் பிரீத்தி ஜிந்தாவும் கலந்து கொண்டார். அவரிடம்தான் இந்த கேள்வி கேட்கப்பட வேண்டும். "அது எப்படிங்க.. வருஷா வருஷம் உங்க அழகும், இளமையும் இப்படி கூடிகிட்டே போகுது?"

Story first published: Tuesday, February 17, 2015, 13:00 [IST]
Other articles published on Feb 17, 2015
English summary
Even as the Narendra Modi government battles the complex issue of bringing black money back to India, crores of rupees were thrown around for some cricket players.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X