For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

முடிகிறது ஹர்பஜனின் கிரிக்கெட் பயணம்?.. முன்னணி ஐபிஎல் அணியுடன் ஒப்பந்தம்.. இனி எல்லாம் தனி ரூட்!

மும்பை: இந்திய அணியின் முன்னணி ஆல்ரவுண்டரான ஹர்பஜன் சிங் தனது அடுத்தகட்ட முடிவை அறிவிக்கவுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்டில் சுழற்பந்துவீச்சில் கொடிகட்டி பறந்தவர் ஹர்பஜன் சிங். அனில் கும்ப்ளேவுக்கு அடுத்தபடியாக இந்திய அணியில் பெரும் தாக்கத்தை கொண்டு வந்தவர்.

அதிரடி வீரர்களையே தனது சுழற்பந்துவீச்சில் சுருட்டிய ஹர்பஜன் சிங், தற்போது தான் ஓய்வை அறிவிக்கவுள்ளார்.

ஹர்பஜன் ரெக்கார்ட்

ஹர்பஜன் ரெக்கார்ட்

இந்திய அணிக்காக கடந்த 1998ம் ஆண்டு அறிமுகமான ஹர்பஜன் சிங், இதுவரை டெஸ்டில் 417 விக்கெட்டுகள், ஒருநாள் போட்டிகளில் 269 விக்கெட்டுகள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் 25 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார். எனினும் இவருக்கு கடந்த 2015ம் ஆண்டு முதல் இந்திய அணியில் ஒரு வாய்ப்பு கூட கிடைக்காமல் உள்ளது. ஐபிஎல் தொடரில் மட்டுமே பங்கேற்று வருகிறார்.

 ஐபிஎல்-ல் ஏமாற்றம்

ஐபிஎல்-ல் ஏமாற்றம்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் முன்னணி வீரராக இருந்தபோதும், தற்போது அவருக்கு வாய்ப்புகள் குறைந்துவிட்டன. கடந்த ஐபிஎல் சீசனில் முதல் பகுதியில் விளையாடிய ஹர்பஜன், 2வது பகுதியில் வாய்ப்பு கிடைக்காமல் இருந்தார். அவரின் ஃபார்ம் போய்விட்டதாக கூறி இளம் வீரர்களுக்கு வாய்ப்புகள் அதிகரித்து வருகிறது.

ஹர்பஜனின் முடிவு

ஹர்பஜனின் முடிவு

இந்நிலையில் அனைத்துவிதமான கிரிக்கெட்டில் இருந்தும் ஹர்பஜன் சிங் ஓய்வை அறிவிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வரும் ஐபிஎல் மெகா ஏலத்தில் அவர் பங்கேற்க போவதில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது. 41 வயதாகும் ஹர்பஜன் அடுத்ததாக பயிற்சியாளர் அவதாரம் எடுக்கவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Recommended Video

IND vs NZ: Kohli goes to him quite a bit to bring some energy -Daniel Vettori | Oneindia Tamil
அடுத்தகட்ட முடிவு

அடுத்தகட்ட முடிவு

முன்னணி ஐபிஎல் அணி ஒன்றில் ஹர்பஜன் சிங் ஆலோகராக, அல்லது பயிற்சியாளர் குழுவில் இணையவதற்கு பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது. மெகா ஏலத்தின் போது வீரர்களை தேர்வு செய்ய அவரின் பணியை தான் பயன்படுத்தவிருக்கின்றனர். இதனால் அந்த ஒப்பந்தம் கையெழுத்தானவுடனேயே ஹர்பஜன் தனது ஓய்வை அறிவித்துவிடுவார் என கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

Story first published: Tuesday, December 7, 2021, 23:54 [IST]
Other articles published on Dec 7, 2021
English summary
Spinner Harbhajan Singh all set to announce his retirement, ready for doing coach role in IPL 2022
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X