For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இனி ஹாட் ஸ்டாரில் ஐபிஎல் கிடையாது.. எந்த ஓடிடி தளத்தில் ஐபிஎல் ஒளிபரப்பு.. முழு விவரம் இதோ

மும்பை: அடுத்த 5 ஆண்டிற்கான ஐபிஎல் தொடரின் ஒளிபரப்பு உரிமைக்கான ஏலம் நேற்று முடிவடைந்து. இதில் பிசிசிஐக்கு மொத்தம் 48 ஆயிரத்து 400 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது.

இதில் இந்திய தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை ஸ்டார் நிறுவனம் 23 ஆயிரத்து 575 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் வாங்கியுள்ளது.

இந்த நிலையில், டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமை டிஸ்னி ஹாட் ஸ்டாரிடம் இருந்த நிலையில், அதனை தற்போது வியாகாம் நிறுவனம் வாங்கிவிட்டது.

டிஜிட்டல் உலகம்

டிஜிட்டல் உலகம்

முதலில் செய்தித் தாள், பிறகு ரேடியோ, அதன் பிறகு தொலைக்காட்சி வாயிலாக கிரிக்கெட்டை ரசித்து வந்த ரசிகர்கள் தற்போது செல்போன் இணையம் வாயிலாக கிரிக்கெட்டை கண்டு களிக்கின்றனர். அதற்கு சான்றாக டிவி உரிமையை விட, டிஜிட்டல் உரிமம் தான் அதிக விலைக்கு ஏலம் போய் உள்ளது. தொலைக்காட்சிக்கு ஒரு போட்டிக்கு 57 கோடியே 40 லட்சம் ஏலம் போன நிலையில், தற்போது 57 கோடியே 98 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போய் உள்ளது.

வூட் செயலி

வூட் செயலி

இந்த நிலையில், கடந்த 5 ஆண்டுகளாக கிரிக்கெட் போட்டியை ஹாட் ஸ்டாரில் ரசிகர்கள் கண்டு களித்தனர். தற்போது வியாகாம் 18 என்ற நிறுவனம் டிஜிட்டல் உரிமையை வாங்கியுள்ளது. இதனால் இனி ஐபிஎல் எந்த ஆப்பில் காணலாம் என்று ரசிகர்கள் குழம்பி போய் உள்ளனர். வியாகாம் நிறுவனம் Voot என்ற செயலியை வைத்துள்ளது.

ஜியோ டிவி

ஜியோ டிவி

அந்த செயலியில் தான் தற்போது உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளன. மேலும் இந்த ஆப் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரீட்சியம் இல்லை என்பதால், இதில் கிரிக்கெட் பார்க்கும் அனுபவம் எப்படி இருக்குமோ என்று ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர். இந்த நிலையில்,வியாகாம் ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஒரு பகுதி ஆகும்.

பாராமவுண்ட்

பாராமவுண்ட்

இதனால் கிரிக்கெட் போட்டிகளை ஜியோ சிம் மூலம் மட்டுமே இயங்கும் ஜியோ டிவியில் மட்டுமே பார்க்க முடியும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதனால் மற்ற நிறுவனங்களின் சிம் வைத்து இருப்பவர்கள் என்ன ஆவார்கள் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்த நிலையில், டிஸ்னி போல், பாராமவுண்ட் என்ற அமெரிக்க நிறுவனம் ஒரு ஓடிடி தளத்தை கொண்டு வர உள்ளது. இது வியாகாம் நிறுவனத்னின் ஒத்துழைப்புடன் வருவதால் இனி, ஐபிஎல் போட்டி அதில் தான் ஒளிபரப்பு செய்யப்படம் என்றும் கூறப்படுகிறது.

Story first published: Wednesday, June 15, 2022, 21:23 [IST]
Other articles published on Jun 15, 2022
English summary
IPL Digital rights auction – Which app will telecast IPL Match இனி ஹாட் ஸ்டாரில் ஐபிஎல் கிடையாது.. எந்த ஓடிடி தளத்தில் ஐபிஎல் ஒளிபரப்பு.. முழு விவரம் இதோ
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X