For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

8 பந்துகளில் 30 ரன்கள்.. தினேஷ் கார்த்திக் செய்த சம்பவம்.. டுபிளஸிஸ் அதிரடி.. ஆர்சிபி இமாலய இலக்கு

மும்பை: ஐபிஎல் தொடரின் 54வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு அணியும், ஐதராபாத் அணியும் பலப்பரீட்சை நடத்தியது.

Recommended Video

Dinesh Karthikக்கு தலை வணங்கிய Kohli! IPL 2022 RCB vs SRH | OneIndia Tamil

இதில் டாஸ் வென்ற கேப்டன் டுபிளஸிஸ் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். இதனையடுத்து விராட் கோலி, டுபிளஸிஸ் தொடக்க வீரராக களமிறங்கினர்.

ஆட்டத்தின் முதல் பந்திலேயே கோலி டக் அவுட்டாகி வெளியேற, ஆர்சிபி அணியின் தொடக்கம் அதிர்ச்சிகரமாக அமைந்தது.

கோலி அடித்த கவர் டிரைவ் சிக்சர்.. ஆர்சிபியின் அதிவேக சாதனை.. சிஎஸ்கே வை பொளந்து கட்டிய ஆர்சிபிகோலி அடித்த கவர் டிரைவ் சிக்சர்.. ஆர்சிபியின் அதிவேக சாதனை.. சிஎஸ்கே வை பொளந்து கட்டிய ஆர்சிபி

41 பந்தில் 50 ரன்கள்

41 பந்தில் 50 ரன்கள்

இதனையடுத்து டுபிளஸிஸ், ரஜத் பட்டிடார் ஆகியோர் ஜோடி சேர்ந்து அணியின் ஸ்கோரை மெல்ல மெல்ல உயர்த்தினர். டுபிளஸிஸ் முழு பொறுப்பையும் உணர்ந்து கொஞ்சம் அமைதியை காட்ட, பட்டிடார் மறுமுனையில் அதிரடியை காட்டினார். இதனால் பெங்களூரு அணி 6.5வது ஓவரில் அதாவது 41வது பந்தில் தான் 50 ரன்களை எட்டியது.

105 ரன் பார்ட்னர்ஷிப்

105 ரன் பார்ட்னர்ஷிப்

இதன் பின்னர் டுபிளஸிஸ் சற்று அதிரடியை காட்டினார். சிறப்பாக விளையாடிய டுபிளஸிஸ் 34 பந்துகளில் அரைசதம் அடித்தார். ஆர்சிபி அணி 11.4வது ஓவரில் 100 ரன்களை எட்டியது. பட்டிடார் 38 பந்துகளில் 48 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 105 ரன்களை சேர்த்தது.

மெக்ஸ்வேல் அபாரம்

மெக்ஸ்வேல் அபாரம்

இதன் பின்னர் களத்துக்கு வந்த மெக்ஸ்வேல் வந்த வேகத்தில் ஆட்டமிழக்காமல் இம்முறை பொறுப்பாக விளையாடி ரன்களை சேர்த்தார். 24 பந்துகளில் 33 ரன்கள் விளாசிய மெக்ஸ்வேல் 3 பவுண்டரி, 2 சிக்சர் அடித்திருந்தார். ஆனால் முக்கிய கட்டத்தில் மெக்ஸ்வெல் ஆட்டமிழந்தார். இதனையடுத்து இறுதியில் களத்துக்கு வந்த தினேஷ் கார்த்திக், தனது அனுபவ ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

தினேஷ் ஹாட்ரிக் சிக்சர்

தினேஷ் ஹாட்ரிக் சிக்சர்

ஹாட்ரிக் சிக்சர், பவுண்டரி என 8 பந்துகளில் அவர் 30 ரன்களை குவிக்க, இறுதி ஓவரில் மட்டும் 25 ரன்கள் குவிக்கப்பட்டது. இதனால் 20 ஓவர் முடிவில் பெங்களூரு அணி 3 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் எடுத்துள்ளது. கடைசி வரை ஆட்டமிழக்காமல் டுபிளஸிஸ் 53 பந்துகளில் 70 ரன்களை அடித்து ஆன்கர் ரோலை சிறப்பாக செய்தார்.

Story first published: Sunday, May 8, 2022, 18:29 [IST]
Other articles published on May 8, 2022
English summary
IPL – Dinesh Karthik heroics help RCB set 193 Runs Target for SRH 8 பந்துகளில் 30 ரன்கள்.. தினேஷ் கார்த்திக் செய்த சம்பவம்.. டுபிளஸிஸ் அதிரடி.. ஆர்சிபி இமாலய இலக்கு
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X