For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கடைசியில் இழுபறி… ராகுலுக்கு கூடுதல் சம்பளம் கொடுத்து சரி கட்டிய லக்னோ..!! IPL DRAFT பட்டியல் இதோ..!

மும்பை: ஐ.பி.எல். 15வது சீசனுக்கான ஏலம் வரும் பிப்ரவரி மாதம் நடைபெற உள்ளது. இந்த சீசனில் புதியதாக 2 அணிகள் பங்கேற்கின்றன

Recommended Video

கடைசியில் இழுபறி | IPL DRAFT பட்டியல் இதோ..! | Lucknow & Ahmedabad IPL Team | Oneindia Tamil

ஏலத்திற்கு முன்பே 3 வீரர்களை ஒப்பந்தம் செய்யும் வாய்ப்பு லக்னோ, அகமதாபாத் அணிகளுக்கு வழங்கப்பட்டது.

இதில் அந்த அணி யாரை தேர்ந்து எடுத்தார்கள் என்பதை நாம் சில நாட்களுக்கு முன்பே அறிவித்து விட்டோம். இந்நிலையில் அதில் சில இழுபறி ஏற்பட்டதால் ஊதியத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

கே.எல். ராகுல்

கே.எல். ராகுல்

லக்னோ அணி தங்களது முதல் வீரராக ராகுலை 15 கோடி ரூபாய் கொடுத்து தேர்வு செய்தததாக தகவல் வெளியானது.. ஆனால், இதற்கு ராகுல் கடைசியில் ஒப்பு கொள்ளவில்லை. 2018ஆம் ஆண்டே பஞ்சாப் அணி தம்மை 11 கோடி கொடுத்து எடுத்ததாகவும், தற்போது அதைவிட 4 கோடி தான் கூடுதல் கிடைப்பதாக ராகுல் புகார் கூறியுள்ளார். மேலும் பஞ்சாப் அணியில் இருந்திருந்தால் எனக்கு 16 கோடி கிடைத்திருக்கும் என ராகுல் அதிருப்தி அடைந்துள்ளார்.

லக்னோ பிளான்

லக்னோ பிளான்

இதனையடுத்து ராகுலுக்கு மேலும் 2 கோடி ரூபாயை வழங்கி 17 கோடி ரூபாயாக தந்துள்ளது. இதனால் ஐ.பி.எல். தொடரில் அதிக சம்பளம் கொடுத்து தக்க வைக்கப்பட்ட வீரர் என்ற கோலியின் சாதனையை ராகுல் சமன் செய்தார். ராகுலுக்கு 2 கோடி கூடுதலாக வழங்கப்பட்டுள்ளதால் மார்கஸ் ஸ்டோனிஸ்க்கு 2 கோடி ரூபாய் குறைத்துள்ளது லக்னோ அணி. அதாவது ஸ்டோனிஸ்க்கு தற்போது 9,2 கோடி ரூபாய் தான் வழங்கப்பட உள்ளது. 3வது வீரரான பிஸ்னாய்க்கு 4 கோடி வழங்கப்பட்டுள்ளது.

அகமதாபாத் அணி

அகமதாபாத் அணி

இதே போன்று அகமதாபாத் அணி தேர்ந்து எடுத்துள்ள வீரர்கள் ஏற்கனவே நாம் கூறிய ஊதியத்தில் தான் எடுக்கப்பட்டுள்ளார்கள். அதில், ஹர்திக் பாண்டியாவுக்கு 15 கோடி ரூபாயும், ரஷித் கானுக்கு 15 கோடி ரூபாயும் வழங்கப்பட்டுள்ளது. 3வது வீரரான சுப்மான் கில்லுக்கு 7 கோடி ரூபாய்க்கு பதில் 8 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது

கையிருப்பு எவ்வளவு

கையிருப்பு எவ்வளவு

இந்த இரு அணிகளுக்கும் 90 கோடி ரூபாய் செலவு செய்ய அனுமதிக்கப்பட்ட நிலையில், ஏலத்திற்கு முன்பே 3 வீரர்களை தேர்வு செய்துள்ளதால் லக்னோ அணியின் கையிருப்பு 58 கோடியாகவும், அகமதாபாத் கையிருப்பு 52 கோடி ரூபாயாகவும் குறைந்துள்ளது.

Story first published: Saturday, January 22, 2022, 11:52 [IST]
Other articles published on Jan 22, 2022
English summary
IPL Draft 2022- KL Rahul got 17 crores in Lucknow Team கடைசியில் இழுபறி… ராகுலுக்கு கூடுதல் சம்பளம் கொடுத்து சரி கட்டிய லக்னோ..!! IPL DRAFT பட்டியல் இதோ..!
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X